சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

மதுக்கடைகளை எப்போது மூடப்போகிறோம்? - வைரமுத்து
Updated on : 16 January 2019

வெற்றித் தமிழர் பேரவை சார்பில் சென்னை பெசன்ட்நகர் 

மாநகராட்சிப் பூங்காவில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு மாலையிட்டு மலர் தூவிக் கவிஞர் வைரமுத்து திருவள்ளுவர் திருநாள் கொண்டாடினார். 



சென்னைப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும் இந்நாள் அமெட் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தருமான திருவாசகம், 

சுவிட்சர்லாந்து சுரேஷ், தொழிலதிபர் சிங்காரம், சிற்பி தட்சிணாமூர்த்தி, வெற்றித்தமிழர் பேரவையின் சென்னை மாநகரச் செயலாளர் வி.பி.குமார் உள்ளிட்ட வெற்றித்தமிழர் பேரவையினர் விழாவில் கலந்துகொண்டனர். முன்னதாகக் கர்நாடக இசைப் பாடகி கடலூர் ஜனனி திருக்குறளை இசைப்பாடல்களாகப் பாடினார் , பிறகு கவிஞர் வைரமுத்து உரத்த குரலில் திருக்குறள்களைச் சொல்லச்சொல்ல, கூடியிருந்த குழந்தைகள் பின்மொழிந்தார்கள், விழாவில் திருவள்ளுவர் திருநாள் செய்தியாகக் கவிஞர் வைரமுத்து ஊடகங்களோடு பேசியதாவது: 



“உலகத்தமிழர்கள் அனைவருக்கும் திருவள்ளுவர் திருநாள் வாழ்த்துக்கள். திருக்குறள் படைத்த புலவர் என்று மட்டும் திருவள்ளுவரைக் கருதிவிடமுடியாது. அவர் ஒரு புரட்சியாளர். மதுப்பழக்கம் என்பது தமிழர்களின் வாழ்வில் ஒரு பகுதியாக இருந்து வந்தது, அதை யாரும் ஒரு பாவமாகக் கருதாத காலமது. ஆனால் “கள்ளுண்ணாமை” என்ற அதிகாரம் எழுதி மதுவுக்கு எதிராக  முதல் கலகக்குரல் எழுப்பியவர் திருவள்ளுவர். “புலால் உண்ணாமை” என்ற அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக இறைச்சிக்கடைகளை ஒருநாள் மூடுகிற முடிவெடுக்கிற நாம், கள்ளுண்ணாமை அதிகாரம் எழுதிய திருவள்ளுவருக்காக மதுக்கடைகளை எப்போது நிரந்தரமாக மூடப்போகிறோம்? 



2018-19ஆம் நிதியாண்டில் தமிழக அரசுக்கு 1,76,251 கோடி வருமானம் கிட்டும் என்று அறியப்படுகிறது. இதில் மதுக்கடைகளால் பெறப்படும் வருமானம் மட்டும் தோராயமாக 20,000 கோடி என்று குறிக்கப்படுகிறது. மதுவால் 20,000 கோடி ஈட்டுகிற அரசு 20 சதவிகித மக்களை அதனால் பாழ்படுத்துகிறது. 



இந்த நாட்டின் பெரும்பாமையான விபத்துக்களுக்கு காரணம் மது. குடும்பங்களைக் குலைப்பது மது. அனாதைச் சிறுவர்களை உண்டாக்குவது மது. கொலைகளை அதிகரிப்பது மது. தற்கொலைகளின் எண்ணிக்கையைக் கூட்டிக்கொண்டே போவது மது. 



நான் கிராமத்தான்  இன்னும் கிராமத்தில் வாழுகிறவன், இன்றைய கிராமத்தில் சென்று பார்த்தால் 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் அருகிப்போனார்கள், நரைத்த தலைகளைப் பார்க்க முடியவில்லை ஊருக்கு வழி காட்டும் கிழவர்கள் அதிகம் இல்லை. 15வயதில் குடிக்க தொடங்கியவர்கள் 50வயதுக்குள் அடியாகிப்போகிறார்கள். தமிழர்களைக் கொன்றுவிட்டு எப்படித் தமிழ்நாட்டை வாழவைக்கப் போகிறோம்? தமிழகத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொல்லுகிற இந்த மதுவை ஒரே நாளில் ஒழிக்கமுடியாவிட்டாலும் படிப்படியாக ஒழிப்பதற்கு அடிப்படைத் திட்டங்களை உருவாக்க வேண்டும். மதுவை எந்த ஆட்சி ஒழிக்கிறது என்பது முக்கியமல்ல; எந்த ஆட்சி ஒழித்தாலும் அதுதான் மக்களாட்சி என்று கொண்டாடப்பெறும்.” 



இவ்வாறு கவிஞர் வைரமுத்து பேசினார் 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா