சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ஆரா சினிமாஸ் தயாரிக்கும் ஜி வி பிரகாஷ், ரைசா வில்சன் நடிக்கம் horror fantsy படம்
Updated on : 20 January 2019

விநியோக துறையில் தனக்கென்று ஒரு தனி இடத்தை இயன்ற ஆரா சினிமாஸ் தயாரிப்பு துறையிலும் தங்களது ஆளுமையை வெளிப்படுத்த  வீரா நடிப்பில் "அரசியல்ல இதெல்லாம் சாதரணமப்பா", மற்றும்  அதர்வா -ஹன்சிகா இணையாக நடிப்பில் சாம் ஆண்டன் இயக்கத்தில்."100" என்றப் படங்களை தயாரித்து  வருகிறது. மிகவும் எதிர்பார்க்க படும்"100" திரைப் படம்  மார்ச் மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கபடுகிறது.

இந்த வருடம்  நல்ல கதை அம்சமுள்ள படங்கள் சிலவற்றை தொடர்ந்து தயாரிக்க வேண்டும் என்கிற முனைப்போடு இருக்கும் ஆரா சினிமாஸ் அந்த முயற்சிக்கு முன்னோடியாக ஜி வி பிரகாஷ்=ரைசா வில்சன் இணையாக நடிக்க, அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ்  இயக்கும் ஒரு horror fantsy  படத்தை இன்று சென்னையில் உள்ள ஒரு கோவிலில் பூஜையோடு துவங்கி உள்ளனர். குறும் படங்கள் மூலமாக திரை உலக வட்டாரத்தில் பிரசித்தி பெற்ற இயக்குனர் கமல் பிரகாஷ் , அவர் இயக்கி உள்ள விளம்பர படங்கள் மூலமாக சில விருதுகளையும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

டிக் டிக், மிருதன், கொடி ஆகிய படங்களின் மூலம் சிறந்த ஒளிப்பதிவாளர் என்று பெயர் வாங்கிய எஸ் வெங்கடேஷ் இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். "தீரன் அதிகாரம் ஒன்று" படத்தின் மூலம் சிறந்த பட தொகுப்பாளர் என்று பெயர் வாங்கிய சிவா இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் ஆவார். கமலநாதன் கலை அமைப்பில், டான் அசோக் சண்டை காட்சிகளை இயக்க, கதாநாயகன் , இசை அமைப்பாளர் என்று இரட்டை பொறுப்புகளை ஏற்கிறார் ஜி வி பிரகாஷ் குமார். 

" கதாநாயகன் ஜி வி பிரகாஷ் சாருக்கும், தயாரிப்பாளர் "ஆரா பிலிம்ஸ்" மகேஷ் கோவிந்தராஜன்  சாருக்கும் , அவர்கள் என் மேல் வைத்த நம்பிக்கைக்கு  என் நெஞ்சார்ந்த நன்றிகள்.   "பியார் பிரேமா காதல்" படம் மூலம் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாகவே மாறி போன ரைசா இந்த படத்தின் கதையை கேட்ட மாத்திரத்தில் உற்சாகத்தில் துள்ளி குதித்தார்.  திறமையான, அருமையான நடிக நடிகையர், தொழில் நுட்ப கலைஞர்கள் என என் திரை பயணம் ஆசிர்வாதத்துடன் துவங்குகிறது. படத்துக்கான தோதான டைட்டிலை தேடிக் கொண்டு இருக்கிறோம் . விரைவில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம் " என்கிறார் இயக்குநர் கமல் பிரகாஷ்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா