சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

பிருத்வி ராஜன் - சாந்தினி நடிக்கும் காதல் முன்னேற்றக் கழகம்
Updated on : 21 January 2019

ப்ளு ஹில்ஸ் புரொடக்ஷன் மலர்க்கொடி முருகன், தயாரிக்கும் படம் ‘காதல் முன்னேற்ற கழகம்.’



இந்தப் படத்தில் இயக்குநரும், நடிகருமான பாண்டியராஜனின் மகன் ப்ரித்விராஜன்  கதாநாயகனாக நடித்துள்ளார். நாயகியாக சாந்தினி  நடிக்கிறார். மற்றும் சிங்கம் புலி, கஞ்சா கருப்பு, கிஷோர்குமார், ‘நாதஸ்வரம்’ முனிஸ்ராஜா, அமீர் ஹலோ கந்தசாமி ஆகியோரும் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சிவசேனாதிபதி நடித்திருக்கிறார்.



ஒளிப்பதிவு -  ஹாரிஸ் கிருஷ்ணன்



இசை   -  பி.சி.சிவன்



பாடல்கள் -   யுகபாரதி, மோகன்ராஜ், உமாசுப்ரமணியம், மாணிக்சத்யா



எடிட்டிங்  -    சுரேஷ் அர்ஸ்



நடனம்   -    அசோக்ராஜா



சண்டை பயிற்சி   -    அம்ரீன் பக்கர்



கலை  -    பிரகதீஸ்வரன்



தயாரிப்பு நிர்வாகம்   -    முத்தையா,விஜயகுமார்.



தயாரிப்பு -   மலர்க்கொடி முருகன்.



கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்  -  மாணிக் சத்யா.



படம் பற்றி இயக்குநர் மாணிக் சத்யா பேசும்போது,  “இந்தப் படம் 1985களில் நடக்கின்ற கதை.  கதா நாயகன் நடிகர் கார்த்திக்கின் தீவிர ரசிகர்.அவரைப் போலவே முடியை வளர்த்துக் கொண்டு ரசிகர் மன்றம் அது ,இது என்று வேலைக்கு போகாமல் அலைந்து கொண்டிருப்பவர். சாந்தினி டீச்சராக இருப்பவர்.



துரோகத்தில் மிக கொடூரமான துரோகமாக கருதப் படுவது நம்பிக்கை துரோகம் தான்..



அதிலும் நட்புக்குள் நடக்கும் நம்பிக்கை துரோகம் மிக மிக கொடூரமானது... அதைத் தான் இதில் சொல்லி இருக்கிறோம். யதார்த்தமான கதையாக படம் வந்திருக்கிறது. கிராமப்புற வாழ்வியலை பதிவிட்டிருக்கிறோம்.. படத்தை பார்த்த பாண்டியராஜன் சார் பாராட்டியதுடன் 



15 மிமிட கிளைமாக்ஸ் காட்சிகள் நெருப்பு மாதிரி இருக்கிறது என்றார்.



சிவசேனாதிபதி படத்தின் கதைக்கு முதுகெலும்பாய் ட்விஸ்ட் கேரக்டராக ஜொலிக்கிறார்.



நட்பை வலுவாக சொல்லி இருக்கிறோம்.



படப்பிடிப்பு  சென்னை, ஊட்டி, கடலூர் மாவட்டம், திட்டக்குடி, விருத்தாசலம், பெரம்பலூர் போன்ற இடங்களில் நடைபெற்றுள்ளது. படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்றார். இயக்குனர் மாணிக் சத்யா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா