சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

இந்தியாவில் முதன் முறையாக YouTube இனையதளத்திற்காக தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் ப
Updated on : 22 January 2019

பேசும் படமாக ஆரம்பமான இந்திய சினிமா  ஒவ்வொரு காலகட்டத்திலும் பல விதமான பரிணாம வளர்ச்சியை கண்டு வருகிறது. கடந்த  சில வருடங்களாக திரைப்படங்கள் திரையரங்கு மட்டுமல்லாமல்  OTT எனப்படும் டிஜிட்டல் தளங்களிலும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்தியாவில் முதன் முறையாக, முதல் முயற்ச்சியாக  YouTube இனையதளத்திற்காக பிரத்யேகமாக படம் தயாரிக்கும் முயற்ச்சியில் இறங்கியிருக்கிறது NextGen எனும்  நிறுவனம். Crowd Funding எனப்படும் கூட்டு தயாரிப்பில் இப்படம் ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாகவிருக்கிறது.



இதன் ஒருங்கினைப்பாளரான அரவிந்த் ஸ்ரீனிவாசன் இந்த முயற்ச்சி குறித்து கூறுகையில் "YouTube இனையதளம் இன்று திரையுலகில் முக்கிய பங்க்காற்றி வருகிறது. படத்தின் டீசர், டிரைலர், பாடல்கள் என ஒரு படத்தினை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் YouTube இனையதளத்தின் பங்கு அபாரமானது. 



இது வரை எத்தனையோ படங்களும்  YouTube இணையதளத்தில் நேரடியாக வெளியாகியுள்ளது. அப்படங்கள் ஒன்று திரையரங்கு சிக்கலினாலோ, தணிக்கை பிரச்சனையாலோ அவ்வாறு வெளியாகியுள்ளன. ஆனால் இது வரை YouTube வெளியீட்டிற்கென்று இந்தியாவில் படங்கள் தயாரிக்கப்பட்டதில்லை. இதை பற்றி எனது நண்பர்களிடம் விவாதித்த போது YouTube வெளியீட்டிற்க்கென்றே ஒரு படத்தினை பிரத்யேகமாக தயாரித்தால் என்ன என்ற யோசனை எழுந்தது.  அவர்களும் இது ஒரு நல்ல முயற்ச்சி என்றும் அதில் தயாரிப்பாளர்களாக தாங்களும் பங்குகொள்வதாக நம்பிக்கை தந்தனர். இதனை தொடர்ந்து இதற்கான கதை தெர்வு செய்யும் வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு தற்போது இறுதி செய்து விட்டோம். 



இப்படத்தினை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் உருவாக்கவிருக்கிறோம். இப்படம் முதன்மையாக YouTube இனையதளத்தில் வெளியானாலும் இதர OTT எனப்படும் டிஜிட்டல் தளங்கள் மற்றும் தொலைக்காட்சியில் வெளியிடும் முயற்ச்சியிலும் ஈடுபடவிருக்கிறோம். பார்வையாளர்களுக்கு இலவசமாக வழங்கவிருக்கும் இத்திரைப்படம் உலக தரத்தில் இருக்க வேண்டும் என்பது எங்களுடைய பிரதான இலக்கு.   



இப்படத்தின் நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் விவரத்தை விரைவில் வெளியிடவிருக்க்கிறோம்." என தெரிவித்துள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா