சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

குழந்தை வளர்ப்பில் அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் Monkey Donkey
Updated on : 28 January 2019

ஒரு சில தலைப்புகளே மனதை உடனடியாக கவரும் . குறிப்பாக குழந்தைகள் தங்களுக்குள் விளையாடி  மகிழும் போதும், கோபித்துக் கொள்ளும் போதும்  "monkey donkey"  என்னும் வார்த்தைகள் குழந்தைகள் மத்தியில் பிரபலம். தற்காலத்தில் குழந்தைகளைவிட, உணர்வற்ற பணத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் பெற்றோர்களே அதிகம். "Monkey donkey" கதைகளமும், அத்தைகய பெற்றோருக்கும் குழந்தைக்கும் இருக்கும் உணர்வை பற்றி கூறும் படம்.



"குழந்தை வளர்ப்பில்" அதிக கவனம் தேவை என்னும் கருத்தை வலியுறுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இப்படத்தை அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் இணைந்து இயக்குகின்றனர். ரூபி பிலிம்ஸ் சார்பாக ஹஷீர் இப்படத்தை தயாரிக்கிறார்.



"இயந்திரமயமான இக்காலத்தில் குழந்தை வளர்ப்பு என்பது ஒரு மிகப்பெரிய சவால். தற்கால குழந்தைகள் பெற்றோர்களின் அன்புக்காகவும் நேரத்திற்காகவும் ஏங்குகிறார்கள். அன்புக்கு எங்கும்  குழந்தையை , இருவர் கடத்தினால் என்ன ஆகும் என்னும் சுவாரசியமான களத்தில் ஹாலிவுட் திரைப்படம் "baby's day out" பாணியில், பயணிக்கும் திரைப்படமே இது.

இயக்குனர்கள் அபி ஆனந்த் மற்றும் சலீஷ் சுப்ரமணியம் கதையை கூறியபொழுதுக்கு என்னால் எளிதாக கதையின் ஒட்டதோடும் , கதாபாத்திரங்களோடும்இணைத்து கொள்ளமுடிந்தது.  அதுவே என்னை படத்தை தொடங்குவதற்கான உத்வேகத்தையும் கொடுத்தது. இப்படம் அனைத்து மக்களும் ரசிக்கும் படமாக  இருக்கும் என்பதில் எந்த சந்தேகமில்லை" என்றார் தயாரிப்பாளர் ஹஷீர்.



"Monkey donkey" திரைப்படத்தில்  நடிகர்கள் ஸ்ரீராம் ,கிஷோர் ,பேபி யுவினா,யோஜ்ஜைபீ மற்றும் வந்தனா இணைந்து நடிக்கிறார்கள்.

சூரஜ் குரூப் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு, கண்ணன் ஒளிப்பதிவு செய்கிறார். ரிசல் ஜைனி படத்தொகுப்பில் , சங்கீத் பாடல்களை எழுதுகிறார்.



தேனீயின் இயற்கை கொஞ்சும் பகுதியில் "monkey donkey"  படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா