சற்று முன்

‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |    'பெத்தி' படத்திற்காக நம்ப முடியாத வகையில் தன் உடலை செதுக்கும் 'குளோபல் ஸ்டார்' ராம் சரண்'!   |    ZEE5-ல் ‘சட்டமும் நீதியும்’ சீரிஸ் இலவசமாக கண்டுகளிக்கலாம்!   |    சின்ன படங்கள் தற்போது வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருப்பது மகிழ்ச்சியாக உள்ளது - முனீஷ்காந்த்   |    கோயம்புத்தூரில் நடைபெற்ற ஆல் இந்தியா ஆல் ஸ்டார் நவகோடி நினைவு கோப்பை நிகழ்வு!   |   

சினிமா செய்திகள்

ராதிகா பிரசித்தா நடிக்கும் ஐ எக்சிஸ்ட்
Updated on : 28 January 2019

மேடை நாடக கலைஞர் ராதிகா பிரசித்தா  ஏற்கனவே தன்னுடய தனித்துவமான திறமையின் மூலம் ஒரு நடிகையாக, எந்த  ஒரு அவசரமும் இல்லாமல் தேர்ந்தெடுத்து நடித்து தன்னை நிரூபித்துள்ளார். இந்த நடிகை தனது மிகச்சிறப்பான நடிப்புடன்

 'ஐ எக்சிஸ்ட்' என்ற குறும்படத்தின் மூலம் தன் படைப்பு திறமையையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அந்த குறும்படம் கூடுதலான பாராட்டுக்களை பெற்று தந்திருக்கிறது. இந்த 15 நிமிட குறும்படம்,ஆல் லைட்ஸ் இன்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல், கொச்சின் (சிறந்த குறும்படம் - சர்வதேச போட்டி பிரிவு) மற்றும் உட்பெக்கர் இண்டர்நேஷனல் ஃபிலிம் ஃபெஸ்டிவல் புதுடெல்லி (சிறந்த குறும்படம் - பாலினம்) ஆகியவற்றிலும் விருதுகளை வென்றிருக்கிறது. மேலும் ரோலிங் ஃபிரேம்ஸ் இண்டர்நேஷனல் ஷார்ட் ஃபிலிம் ஃபெஸ்டிவல் பெங்களூரு, செர்ரி பிக்ஸ் பெர்லின் ஃபிலிம் சொசைட்டி, ஃபெஸ்டிவல் ஆஃப் விமன் மேக்கிங் ஃபிலடெல்பியா சாப்டர் மற்றும் சென்னை இண்டர்நேஷனல் டாகுமெண்டரி மற்றும் ஃபிலிம் ஃபெஸ்டிவல் ஆகிய விழாக்களில் திரையிடுவதற்கு அதிகாரப்பூர்வமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.



பாலியல் வேறுபாடு மற்றும் பாலியல் துன்புறுத்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தும் இந்த குறும்படம், ஒரு வழக்கமான இந்திய பெண்ணின் மனநிலையில் இருந்து, அந்த பெண்ணின் பல நிலைகளில் இதை சொல்ல முற்படுகிறது. இவை அனைத்திலும் ராதிகா பிரசித்தாவே நடித்திருக்கிறார். "ஆரம்பத்தில், நான் இந்த கதையை மேடை நாடகத்துக்காக எழுதினேன். இந்த குறும்படத்தில் நான் நடித்த கதாபாத்திரத்தில் வேறு நடிகர்கள் நடித்திருந்தனர். இந்த குறும்படத்தில் நான் நடிக்க விரும்பியதன் நோக்கம், என் நடிப்பை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்லவும், இந்த மாதிரியான சவலான கதாபாத்திரத்தில் நடிக்கவும் தான். ஏனென்றால் என் குற்றம் கடிதல் மற்றும் கடுகு படங்களுக்கு பிறகு எனக்கு ஒரே மாதிரியான கதாபாத்திரங்கள் தான் வழங்கப்பட்டது. இது எனது தனிப்பட்ட சிக்கல்களில் இருந்து என்னை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இருந்தது. இந்த குறும்படத்தை முடித்த பிறகு, திரைப்பட விழாக்களில் திரையிடப்படுவதற்கு நிச்சயம் தேர்வு செய்யப்படும் என்று நாங்கள் நினைத்தோம், ஆனால் விருதுகளை வென்றெடுப்பது நாங்களே  எதிர்பார்த்திராத ஒன்றாகும்" என்றார் ராதிகா பிரசித்தா. 



பொதுமக்கள் பார்வைக்காக இந்த குறும்படத்தை யூடியூபில் வெளியிடும் முடிவை பற்றி ராதிகா கூறும்போது, "சமூக ஊடகங்கள் மற்றும் ஆன்லைன் தளங்களில் பாலியல் துன்புறுத்தல் பெரிதும் விவாதிக்கப்படும் தலைப்பாக இருந்தது என்னை தூண்டியது. இந்த குறும்படம் நிச்சயம் ஏற்றுக் கொள்ளப்படும் என்ற தைரியம் மற்றும் உறுதியை இது எனக்கு அளித்தது. இதை நிச்சயம் அனைவரும் பார்க்க வேண்டும்.



இந்த 'குற்றம் கடிதல்' நடிகை மேலும் சில மேடை நாடகங்களுக்கான திரைக்கதைகளை எழுதி வருகிறார்.  தற்போது ஒரு படத்திற்கு ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். அது பற்றி எதுவும் வெளிப்படையாக தற்போது கூற முடியாது என்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா