சற்று முன்

அதீரா, (PVCU)- பிரசாந்த் வர்மா சினிமா யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமாகும்   |    ‘காந்தாரா: சேப்டர் 1’ ட்ரைலரை நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்!   |    கவுதம் ராம் கார்த்திக் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம் இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியது   |    “காந்தாரா சேப்டர் 1” படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிடுகிறார்!   |    இந்த பூமி கோளில் செல்வராகவன் தான் மிகவும் சிறந்த மனிதர் - பினு ஜார்ஜ் அலெக்சாண்டர்   |    சென்னைவில் நடைபெறும் 23வது ஆசிய மாஸ்டர்ஸ் தடகள சாம்பியன்ஷிப் – 2025   |    நட்டி, அருண் பாண்டியன் இணைந்து நடிக்கும், அசத்தலான கமர்ஷியல் திரில்லர் திரைப்படம் 'ரைட்'   |    நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |   

சினிமா செய்திகள்

தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் 'இளையராஜா 75' விழாவை தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் துவ
Updated on : 30 January 2019

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நடத்தும் இளையராஜாவுக்கு,   'இளையராஜா 75' விழாவிற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடக்கும் இரண்டு நாள் விழாக்களுக்கான டிக்கெட் விற்பனை சூடுபிடித்துள்ளது.  ஏற்கனவே, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமலஹாசன் ஆகியோரின் வருகையும் உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்பட துறையில் உள்ள முக்கிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.



இதில், இன்னொரு சிறப்பம்சமாக, தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் விஷால்,  பொது செயலாளர்கள் கதிரேசன் மற்றும் SS துரைராஜ் ஆகியோர் ராஜ்பவனிற்கு சென்று ஆளுநரை நேரில் சந்தித்து விழாவை துவங்கி வைக்க அழைத்தனர்.

அவர்களின் அழைப்பை ஏற்று,  பிப்ரவரி 2-ஆம் தேதி இவ்விழாவை மரியாதைக்குரிய தமிழக ஆளுநர் ஸ்ரீ பன்வாரிலால் புரோஹித் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைக்கிறார். மேலும், 'இளையராஜா 75' என்ற விழா மலரை வெளியிட்டு சிறப்புரையாற்றவிருக்கிறார்.



கலைஞர்கள், பின்னணி பாடகர்கள் மற்றும் பலரும் பார்வையாளர்களைக் கவரும் வகையில் பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்ச்சிகளை நடத்தவிருக்கிறார்கள். மேலும், பிப்ரவரி 2-ம் தேதி முன்னணி கதாநாயகிகளின் நடன நிகழ்ச்சிக்கான ஒத்திகையும், அரங்க ஏற்பாடுகளும் நடந்து வருகிறது. திரைத்துறையின் அனைத்து நடிகர்களும், தொழில்நுட்ப கலைஞர்களும் இசைஞானி இளையராஜாவிற்கு    மரியாதை செலுத்தும் விதமாகவும், அவருடைய 75வது பிறந்த நாளைக் குறிப்பிடும் வகையிலும்  இவ்விழாவை நடத்துகிறார்கள். பிப்ரவரி 3-ஆம் தேதி பத்ம விபூஷன் இசைஞானி இளையராஜா நேரடி இசை விருந்து அளிக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா