சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் ரீல்
Updated on : 30 January 2019

கதையில் இருக்கும் கதாபாத்திரங்களும் , அதன் தன்மையுமே ஒரு ரொமான்டிக் படத்தின் தரத்தை தீர்மானிக்கிறது. குறிப்பாக தேர்ந்த நடிகர்கள் மட்டுமல்லாமல், அறிமுககங்களையும் பயன்பத்திக்கொள்ளும் திறமையே இப்படங்களின் தனித்துவம் என்று கூறலாம். கதாபாத்திரங்களின் வலிமையை  உணர்த்தும் திரைப்படங்களை தமிழ் சினிமா நிறைய கண்டுள்ளது . இத்தகைய காதல் திரைப்படங்களை நிலையாக கொடுத்துவரும் தமிழ் சினிமாவின் வரிசையில் , நம்பிக்கையோடு சேர தயாராகயிருக்கிறது "ரீல்".





"காதல் திரைப்படங்கள் ரசிகர்களுக்கு புதியவை இல்லையென்றாலும், அதன் வடிவமைப்பே அவற்றை தனித்து காட்டுகிறது . தலைப்பு என்பது ஒரு படத்தின் முக்கிய அம்சம்,இப்படத்தின் தலைப்பான "ரீல்" என்பது எதற்காக என்று கேள்விக்கு படத்தின் கதையே பதில் கூறும். நடிகர்கள் உதய்ராஜ் மற்றும் அவந்திகா கதாபாத்திரத்தின் வலிமையை உணர்ந்து நடித்து இருக்கிறார்கள். KPY புகழ் சரத் இப்படத்தில் முழு நேர நகைச்சுவை நடிகராக மட்டுமில்லாமல் ,ஒரு குணச்சித்ர நடிகராகவும் இப்படம் வெளிப்படத்தும்.

படத்தின் இறுதியில் வரும் திருப்பங்களும், கூறப்பட்டிருக்கும் கருத்தும் மக்களை வெகுவாக கவரும். கோவை ,மெலுகொட் கோத்தகிரி மற்றும் மைசூர் போன்ற பகுதிகளில் படப்பிடிப்பு மிகவும் வேகமாக நடைபெறுகிறது" என்றார் படத்தின் இயக்குனர் முனுசாமி.



"ரீல்" படத்தின் கதையை T.N.சூரஜ் அவர்கள் எழுத , முனுசாமி இயக்குகிறார். ரொமான்டிக் திரைப்படங்களில் , இசையின் பங்களிப்பு சற்று அதிகமாக இருக்கும் ,  இப்படத்திற்கு சந்தோஷ்  சந்திரன் பாடல்களையும் , அச்சு ராஜாமணி பின்னணி இசையும் கவனிக்கின்றனர். சுனல் பிரேம் ஒளிப்பதிவு செய்ய , சாய் சுரேஷ் படத்தொகுப்பு செய்கிறார். ஸ்ரீ முருகா மூவி மேக்கர் தயாரிக்கும் இப்படத்தை விரைவில் வெளிக்கொண்டுவர இருக்கின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா