சற்று முன்

நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |    மூன்றாவது படத்துக்கே பண்டிகை தின ரிலீஸ் எனும் உயர்வை பெற்றிருக்கும் பிரதீப் ரங்கநாதன்!   |    தன்யா ரவிச்சந்திரன் நடிக்கும் விறுவிறுப்பான கிரைம் திரில்லர் 'றெக்கை முளைத்தேன்'   |    கோவையை கலக்கப் போகும் வித்யாசாகர், விஜய் ஆண்டனி   |    ‘பிளாக்மெயில்’ நிறைய த்ரில், ஆச்சரியம் மற்றும் எண்டர்டெயின்மெண்ட் நிறைந்த படம்   |    தரமான கதைகளுக்காகவே திரைப்படம் தயாரிக்கிறேன்! - 'அந்த 7 நாட்கள்' தயாரிப்பாளர் முரளி கபீர்தாஸ்   |    'மிராய்' படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் 'வைப் இருக்கு பேபி'!   |    ஏஐ மூலம் உருவாக்கிய ஒரு முழு இசை வீடியோ ஆல்பம், இயக்குநர் அசத்தல்!   |    15 ஆண்டுகளுக்கு பிறகு திடீரென சமூக ஊடகங்களில் வைரல் ஆகியுள்ள 'பலே பாண்டியா' பட பாடல்!   |    'காந்தாரா: சாப்டர் 1 ' படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு   |   

சினிமா செய்திகள்

டிரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானது மகிழ்ச்சி - கே.ஆர் பிரபு
Updated on : 04 February 2019

'நகைச்சுவை' யாரும் செய்து விட முடியும், ஆனால் அரசியல் நையாண்டி படங்களை எடுக்க நல்ல கதை மற்றும் சரியான பேக்கேஜிங் தேவைப்படும். அப்போது தான் பெரிய அளவு பார்வையாளர்களை சென்றடையும். ஆர்.ஜே. பாலாஜியின் LKG படத்தின் சிங்கிள் பாடலான "எத்தனை காலம் தான்' பாடல் நம்பமுடியாத வரவேற்பை பெற்று, மிகப்பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இது YouTube பார்வைகள், சமூக ஊடகங்கள் தாண்டி ரேடியோ ஸ்டேஷன்களிலும் வெற்றிகரமாக போய்க் கொண்டிருக்கிறது. நையாண்டியான விஷயங்களை கொண்டிருந்த இந்த படத்தின் ட்ரைலர் ரசிகர்களுக்கு ஒரு ட்ரீட்டாக அமைந்துள்ளது. வெளியான சில மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்திருப்பது என்பது மிகவும் சுவாரசியமான தகவல். 



இது குறித்து இயக்குனர் கே.ஆர் பிரபு கூறும்போது, "ட்ரைலருக்கு எங்கள் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட வரவேற்பை ரசிகர்கள் கொடுத்தது குறித்து மகிழ்ச்சியடைகிறோம். உண்மையில், டிரெய்லரில் பார்த்தது கொஞ்சம் தான், படத்தில் இத்தகைய நையாண்டியான விஷயங்கள் நிறைய உள்ளன. அது வெறுமனே சிரிக்க வைக்காமல், ஆழமாக சிந்திக்கவும் வைக்கும். சிவகுமார் சார் போன்ற ஒரு லெஜண்ட் LKG படத்தின் டிரெய்லரை, அதுவும் இளையராஜா 75 போன்ற ஒரு பெருமைக்குரிய விழாவில் வெளியிட்டது எங்கள் ஒட்டுமொத்த குழுவுக்கும் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்கள் திரைப்படத்தின் டிரெய்லர் ஒரு பெரிய ரசிகர் கூட்டத்தில் வெளியானதும், ஒட்டுமொத்த ரசிகர்களும் அதை முழுமையாக ரசித்ததும் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. இதே போன்ற ஒரு அனுபவத்தை நல்ல கதையுடன் கொடுக்க நாங்கள் முயற்சித்திருக்கிறோம். ரசிகர்கள் அதை  திரையரங்குகளில் ரசிப்பார்கள் என நம்புகிறோம்" என்றார்.



வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கே கணேஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் கே.ஆர்.பிரபு இயக்கியிருக்கிறார். ஆர்.ஜே. பாலாஜி, பிரியா ஆனந்த் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, ராம்குமார், அரசியல்வாதி நாஞ்சில் சம்பத், ஜே.கே.ரித்தீஷ், மயில்சாமி, சந்தானபாரதி மற்றும் இன்னும் சில முக்கிய நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். லியோன் ஜேம்ஸ் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார். விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்ய, ஆண்டனி படத்தொகுப்பு செய்திருக்கிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா