சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

சூப்பர் குட் பிலிம்ஸ் சவுத்ரியை கடவுளாக கொண்டாடும் A.N.பாலாஜி
Updated on : 27 February 2019

சூப்பர் குட் நிறுவனத்தை கோவில் என்றும் சவுத்ரியை கடவுள் என்றும் நன்றியோடு நினைப்பவர் A.N.பாலாஜி. ஆரம்பத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர் .பி.சவுத்ரி தயாரித்த படங்களின்  தெலுங்கு வியாபாரத்தை கவனிக்க தொடங்கியவர், பின்னர் மொழிமாற்று திரையீட்டு தொழிலுக்கு மாறினார். லவ் டுடே முதல் ரகளை வரை சூப்பர் குட் பிலிம்ஸ் தெலுங்கில் தயாரித்த படங்களை வியாபாரம் செய்தவர்.



 



மகேஷ் பாபுவின் 'பிசினஸ் மேன்' ,'நம்பர் ஒன்', பிரபாஸ், ஜூனியர் என்.டி.ஆர், நயன்தாரா படங்கள் மற்றும்  நாகார்ஜூனாவின் 10 படங்கள், சைதன்யா படங்கள் என வளரந்து இப்போது  விஜய் தேவரகொண்டா படங்களை மொழிமாற்றி வெளியிட்டு வருகிறார். 



 



சூப்பர் குட் நிறுவனம் விஜய் தேவரகொண்டா நடிப்பில் தயாரித்த  'துவாரகா' தெலுங்கு படம்  ஆந்திரா முழுக்க 100 நாட்களை தாண்டி ஓடி வெற்றி பெற்றது. அந்த படத்தை மொழிமாற்றம் செய்து வரும் மார்ச்  15ஆம் தேதி விஜய் தேவரகொண்டா- பூஜா ஜாவேரி நடித்த 'அர்ஜூன் ரெட்டி' படமாக வெளிவராயிருக்கிறது. 



 



சமீபத்தில் வெளிவந்த விஜய் தேவரகொண்டாவின் கீத கோவிந்தம் என்ற மொழிமாற்று படம் 100 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. 



 



அதுபோல் விஜய சாந்தி,  சிரஞ்சீவி, மகேஷ் பாபு  தொடங்கி நல்ல மொழிமாற்றுப் படங்களை தமிழ் ரசிகர்கள் வரவேற்று வெற்றி பெற வைத்திருக்கிறார்கள்.



 



அருமையான கதையம்சமும், ஐந்து சூப்பர் ஹிப் பாடல்களையும்  கொண்ட அர்ஜூன் ரெட்டி படத்தையும் தமிழ் ரசிகர்கள் வெற்றி பெற செய்வார்கள் என்று நம்புகிறோம். 



 



இந்த படத்தில் ஹீரோவாக விஜய்தேவர்கொண்டா நடிக்கிறார் அவருக்கு இணையாக பூஜா ஜவேரி  நடிக்கிறார். மேலும் பிரகாஷ்ராஜ், பாகுபலி பிரபாகர், முரளிசர்மா, சுரேகா வாணி ப்ரிதிவிராஜ் ஆகியோர் நடிக்கிறார்கள்.



 





ஒளிப்பதிவு  ஸ்யாம் கே.நாய்டு,  இசை சாய்கார்த்திக், பாடல்கள்  நெல்லை பாரதி, எடிட்டிங் பிரேம், தயாரிப்பு A.N.பாலாஜி, வசனம் ஆண்டனி ரிச்சர்ட், கதை, திரைக்கதை, இயக்கம் ஸ்ரீனிவாச ரவீந்திரா.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா