சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

26 நிமிடத்துக்குள் சொல்லப்பட்ட கால் டாக்ஸி ஓட்டுநரின் கதை
Updated on : 27 February 2019

நயன்தாராவின் நடிப்பில் வெளிவந்த த்ரில்லான படம் டோரா. இதில் வில்லனாக நடித்த ஷான் பெரிதும் பேசப்பட்ட அவர் தற்போது “ இயக்கி “ என்கிற  குறும்படத்தின் மூலம் மீண்டும் பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறார்.





இது வரை கால் டாக்ஸி ஓட்டுபவர்களை தவறான கண்ணோட்டத்துடன் மட்டுமே சித்தரித்து காட்டிய படங்களை மீறி ஷானின் இயக்கி குறும்படம் அதை தகர்த்து அவர்களும் நம்மில் ஒருவர் தான்.. அவர்களுக்கும்  சோகமான பக்கங்கள் இருக்கிறது என்கிற நிதர்சனமான உண்மையை உரக்க சொல்லி இருக்கிறார் ஷான்.





ஒரு ஓட்டுனரின் வலி மிகுந்த வாழ்க்கையை படமாக கட்டியிருக்கும் இயக்கி -யின் இயக்குனர் ஷான் கூறும்போது இந்த கதையை படமாக்குவது என்று முடிவெடுத்தவுடன் கால் டாக்சி ஓட்டுனரானேன்...500 க்கும் மேல் டிரிப் அடித்து அனுபவத்தை கற்றுக் கொண்டு அதற்கு மேல் படமாக்கினேன்.





பட்டம் படித்து விட்டு உணவு உறக்கம் எல்லாவற்றையும் இழந்து குடும்பத்திற்காக அடிமை வாழ்க்கையை ஏற்றுக் கொண்டிருக்கும்  அவர்களது வலியை சொல்லி மாளாது..கார்ப்பரேட் கம்பெனிகள் அவர்களுக்கான வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு..மனிதாபிமானம் என்ற ஒன்றையே  மறந்து போய் விட்டார்கள். இப்படியே போனால் அடுத்த தலை முறை அடிமை வாழ்க்கைக்கு ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறார்கள் என்பது தானே உண்மை...உண்மையை ஊரறிய சொல்லி இருக்கிறேன். 





இயக்கி மாதிரி இன்னும் நிறைய இருக்கு..இப்போதைக்கு நல்ல நல்ல படங்களில் நடிக்கனும் ...நல்ல நடிகன்னு பேர் எடுக்க வேண்டும் இது தான் என் ஆசை என்கிறார் ஷான்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா