சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசும் அதர்வா முரளி
Updated on : 07 March 2019

ஒரு நடிகரின் ரசிகர் வட்டமானது இரண்டு காரணங்களுக்காக அதிகரிக்கும். ஒன்று கவர்ந்திழுக்கும் தோற்றம், மற்றொன்று நல்ல கதையுள்ள படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பது. அதர்வா முரளியின் முந்தைய படங்களை கவனித்தால் இது தெளிவாக விளங்கும். மார்ச் 8ஆம் தேதி வெளியாகும் அவரின் 'பூமராங்' படமும் ஏற்கனவே ரசிகர்களை ஒரு புதுவித அனுபவத்துக்கு தயார் செய்துள்ளது.



 



எப்போதும் போல், அதர்வா படத்துக்காக தான் பட்ட கஷ்டங்களை, கடும் முயற்சிகளை பற்றி பெரிதாக பேசாமல், இயக்குனர் கண்ணனை புகழ்ந்து பேசுகிறார். "கண்ணன் சார் அவருடைய கலைத்திறமையை தாண்டி, அரிதான பல தனிப்பட்ட திறமைகளை கொண்டிருக்கிறார். யாரும் அவ்வளவாக பேசாத சமூக பிரச்சினைகள் பற்றி படங்களில்  பேசுவது அதில் ஒன்று. நாம் பல ஆண்டுகளாக சமூக வணிக ரீதியான பொழுதுபோக்கு அம்சங்களை கொண்ட, சமகாலத்திய பிரச்சினைகளை பேசும் பல படங்களை பார்த்திருக்கிறோம். எனினும், அவர் எனக்கு சொன்ன 'பூமராங்' ஸ்கிரிப்ட்டை முற்றிலுமாக புதிதாக உணர்ந்தேன். நாம் ஏற்கனவே சொன்னபடி, இது இந்தியாவில் உள்ள நதிகளை இணைப்பது என்ற விவாதத்திற்குரிய ஒரு விஷயத்தை பற்றி பேசும் படம். பூமராங் காதல், காமெடி, எமோஷன் மற்றும் பொழுதுபோக்கு ஆகிய அம்சங்களை கொண்ட ஒரு முழுமையான பொழுதுபோக்கு படம் என்று தான் சொல்லுவேன். மேலும், கண்ணன் சார், ஸ்கிரிப்ட்டில் சில ஆச்சரியமான விஷயங்களை வைத்திருக்கிறார், அது எனக்கு மிகவும் புதியதாகவும்  இருந்தது" என்றார் அதர்வா முரளி.



 



உடன் நடித்த நடிகர்கள் பற்றி அதர்வா கூறும்போது, "நான் எப்போதும் நல்ல படங்களில் ஒரு பகுதியாக இருப்பதை நம்புகிறேன். ஒரு படம் மிகச் சரியானதாக இருக்க ஒவ்வொரு நடிகருக்கும் கதாபாத்திரத்துக்கு ஏற்ற வகையில் முக்கியத்துவம் இருக்க வேண்டும். இந்த விதத்தில், கண்ணன் சார், கதாபாத்திரங்களை வடிவமைப்பதில் மிகச்சிறந்த வேலையை செய்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி, உபென் படேல், மேகா ஆகாஷ், இந்துஜா உட்பட அனைவரது கதாபாத்திரத்திற்கும் உண்டான நியாயத்தை செய்திருக்கிறார் கண்ணன் சார்.



 



தொழில்நுட்ப குழுவை பற்றி கூறும்போது, "ரதனின் பாடல்கள் ஒரு தனித்துவமான உணர்வை உருவாக்கியுள்ளன. ஒரு படத்திலிருந்து மற்றொரு படத்திற்கு வலுவான மற்றும் சிறந்த பின்னணி இசையை வழங்கி தன்னை மேம்படுத்தி வருகிறார். ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமாரின் வண்ணங்கள் மற்றும் கலர் டோன் மிகவும் புதுமையாக இருக்கிறது. அவருடைய கேமரா, பச்சோந்தி போல சூழ்நிலையைப் பொறுத்து அதன் நிறத்தை மாற்றிக் கொண்டே இருக்கிறது  என்று நகைச்சுவையாக அவரது வேலையை பற்றி குறிப்பிடுவது உண்டு" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா