சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

பழம்பெரும் நடிகர் டைப்பிஸ்ட் கோபு மற்றும் குசல குமாரி மரணம் - நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கல்
Updated on : 07 March 2019

பழம்பெரும் நடிகர் திரு.’டைப்பிஸ்ட்’ கோபு (வயது 85) மற்றும்  நடிகை திருமதி.குசல குமாரி (வயது 80) நேற்று சென்னையில் காலமானார்கள். அவர்களது மறைவிற்கு தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:



 



“தென்னிந்திய நடிகர் சங்கத்தின்” மதிப்பிற்குரிய மூத்த உறுப்பினர்களும் பழம்பெரும் கலைஞர்களுமான நடிகர் 'டைப்பிஸ்ட்' கோபு , நடிகை குசலகுமாரி ஆகியோர் மரணமடைந்த செய்தி மிகவும் வேதனை அளிக்கிறது.



 



லால்குடியை சேர்ந்த திரு.கோபலரத்தினம் அவர்கள்  1959-ம் ஆண்டு 'நெஞ்சே நீ வாழ்க' என்ற மேடை நாடகத்தில் 'டைப்பிஸ்ட் கோபு என்ற கதாபாத்திரத்தில் நடித்து தனது கதாபாத்திரத்தின் பெயரிலேயே பிரபலமானவர். 500க்கும் அதிகமான நாடகம் மற்றும் திரைப்படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். இயக்குனர் சிகரம் திரு.கே.பாலசந்தர் அவர்களால் 'நாணல்' என்ற படத்தின் மூலமாக சினிமாவில் அறிமுகப்படுத்தப்பட்டார். மேலும் அவர் திரு.எம்.ஜி.ஆர், திரு.சிவாஜி கணேசன், திரு.ரஜினி, திரு.கமல், திரு.விஜய், திரு.அஜித், திரு.கார்த்தி, திரு.விஷால் என மூன்று தலைமுறையினருடன் நடித்த பெருமைக்குரிய சாதனையாளர்.



 



திருமதி.குசல குமாரி அவர்கள், 1955-ல் 'கூண்டுகிளி' படத்தில் நடிகையாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் நடித்து பிரபலமானார். 'கொஞ்சும் சலங்கை' படத்தில் இவரது நடிப்பும் நடனமும்  மிகவும் பாராட்டு பெற்றது. திரு.எம்ஜிஆர், திரு.சிவாஜி, திரு.பிரேம் நசீர், திரு.என்.டி.ராம்ராவ் ஆகியோர்களுடன் நடித்து புகழ் பெற்றவர்.



 



அவர்களது மரணம்  ஈடு கட்ட இயலாத மாபெரும் இழப்பாகும். அவர்களது மறைவால் துயரத்தில் வாடும் குடும்பத்தாரின் துக்கத்தில் தென்னிந்திய நடிகர் சங்கமும் பங்கு கொண்டு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து அவர்களது ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்."



 



தென்னிந்திய நடிகர் சங்கம்



 



 



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா