சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கும் 'ஆத்தா'
Updated on : 11 March 2019

ஒரு தாய் தனது மகனுக்காகத் தன் வாழ்நாளையே தியாகம் செய்து விதவையாக வாழும் வாழ்க்கைதான் 'ஆத்தா 'படத்தின் கதை. 



 



ஒரு மனிதனை மனிதனாகத்தான் பார்க்க வேண்டுமே தவிர சாதி மதத்தோடு பார்க்க கூடாது .சாதி ஒரு மனிதனின் அடையாளமே தவிர ஒரு மனிதனின் வாழ்க்கையோ கௌரவமோ கிடையாது . சாதி ஒரு மனநோய் என்பதை உணர்த்தி ஆணவப் படுகொலைகளை ஒழிக்கும் கதைக்கு அழகாக திரைக்கதை எழுதியுள்ளார் இயக்குநர் ஜீன்ஸ்காந்த் .



 



 ஒரு கல்லூரி மாணவனின் காதல் வாழ்க்கையை இளமைத் துள்ளலோடு பார்த்து ரசிக்கலாம். தேவாவின் உதவியாளர் விஜய்மந்தாரா நான்கு பாடல்களுக்கு இசையமைக்கிறார். 'நான் கடவுள் 'படத்தில் பிச்சைப் பாத்திரம் பாடலை பாடிய மது பாலகிருஷ்ணா 'ஊருசனம் பொல்லாதது ஆத்தா' என்கிற பாடலைப் பாடுகிறார். பிரியனின் உதவியாளரும்  த்ரிஷா நடித்த 'கர்ஜனை' படத்தின் ஒளிப்பதிவாளருமான சிட்டிபாபு ஒளிப்பதிவு செய்கிறார். மாஸ்டர் ஜாகுவார் தங்கத்தின் உதவியாளர் மின்னல் முருகானந்தம் இரண்டு சண்டைக்காட்சிகளை அமைத்து ஸ்டண்ட்டைக் கவனிக்கிறார்.பொதிகை டிவி தலைமை எடிட்டரும் திரைப்படக் கல்லூரி மாணவருமான லட்சுமணன் படத்தொகுப்பு செய்கிறார் .பரியேறும் பெருமாள் படத்தில் நடித்த கருப்பி நாய் ஹீரோவாக நடிக்கிறது. சத்தியராஜ் ,சரண்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பேச்சு வார்த்தை நடக்கிறது .படத்தில் இரண்டு கதாநாயகி இஸ்மத் பானு, சுரேஸ்லேகா, நடிக்கின்றனர். ஆம் ஆத்மி கட்சி அரசியல் பிரமுகர் மயிலை கணேசன், சண்டைப் பயிற்சியாளர் அயூப்கான் ,அப்துல் ரஹீம், மணிவாசகன் மாரிக்கனி ஈஸ்வரன் வில்லனாக நடிக்கிறார்கள்.



 



ஜெயசிம்மன்  ,மீரான் முகமது ,கிளாடிஸ் எழில் ஹீரோவின் நண்பர்களாக நடிக்கிறார்கள். சிவகாசி செல்லத்துரை, கன்னிசேரி பாண்டியன், விருதுநகர் பால்ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள் .



 



கதை திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் ஜீன்ஸ்காந்த் .



 



ஜீன்ஸ் ஸ்டுடியோ மிக பிரமாண்டமாகத் தயாரிக்கிறது.



 



தேனி, வீரபாண்டி ,கம்பம், கோம்பை ,மேகமலை போன்ற இடங்களில் படபிடிப்பு நடைபெறும்.



 



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா