சற்று முன்

நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |    வேலு பிரபாகரன் கொடுத்த ஒரு புத்தகம் தான் என்னை சிந்திக்க தூண்டியது! - நடிகர் சத்யராஜ்   |    பிரமாண்டமாக அரங்கேறும் 'ராக் ஸ்டார் அனிருத்தின் #Hukum சென்னை இசை நிகழ்ச்சி!   |    தமிழில் வெற்றியைத் தொடர்ந்து தெலுங்கு இந்தி மொழிகளிலும் வெளிவரும் ‘சட்டமும் நீதியும்’!   |   

சினிமா செய்திகள்

விக்னேஷ் கார்த்திக் பற்றிய சுவாரசியமான தகவல்
Updated on : 16 March 2019

விக்னேஷ் கார்த்திக் தன்னுடைய திறமையால் ஒரு நடிகராகவும் இயக்குநராகவும் சின்னத்திரையில் திறம்பட பணிபுரிந்து பெரிய திரையிலும் தன்னை ஒரு திறமையான இயக்குநராக  வெளிகாட்ட வருகிறார். இவர் இயக்குநராக அறிமுகமான “ஏன்டா தலையில எண்ணெய் வைக்கல” திரைப்படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தவர்.  பின்னர், “யுவர்ஸ் ஷேம்ஃபுலி 2” குறும்படம் அண்மையில் இவருக்கு  பாராட்டுகளையும் விமர்சனத்தையும் ஏற்படுத்தி தந்தது.  திரைப்படத்துரையினர் மட்டுமல்லாமல் பலரிடமிருந்து நேர்மறையான பாராட்டுகளை பெற்று வருகிறார்.



 



 



“ஆரம்பத்தில் சில எதிர்ப்புகள் இருந்தபோதிலும்,  இத்தகைய ஒரு வரவேற்பை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. இந்த குறும்படம் ஒன்பது மில்லியன்  பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது என்பதை விட, திரைத்துறை நண்பர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் பாராட்டு பெற்றது தான் என்னை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தியுள்ள்து” என்று கூறினார் விக்னேஷ் கார்த்திக்.



 



 



இரண்டாவது திரைப்படத்தை பற்றி விக்னேஷ் கார்த்திக்கிடம் கேட்டபோது, அவர் கூறியது. “இது ஒரு அறிவியலும் கற்பனையும் நிறைந்த காதல் நகைச்சுவை படம்” என பதிலளித்தார்.  பின்னர் இவரிடம் முந்தைய திரைப்படமும் கற்பனை வகையை சார்ந்தது என வினவியபோது,  அதற்கு விக்னேஷ், “ஆமாம் ஆனால் ‘தயாரிப்பு எண் 2’ படம் முற்றிலும்  மாறுபட்ட கதையம்சத்தை கொண்ட வித்தியாசமான ஒன்று,  மேலும் இந்த படம் நிச்சயம் உலகளாவிய ரசிகர்களுக்கு ஏற்ப வேடிக்கையாகவும், பொழுதுப்போக்காகவும் இருக்கும்” என்பதோடு அவர் படப்பிடிப்பை செப்டம்பர் மாதத்தில் முடித்து விடுவார் என்றும்,  தற்போது நடிகர்கள் மற்றும் தொழில்நுடப வல்லுநர்கள் தேர்வு செய்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். 



 



 



வால்மேட் என்டர்டெயின்மன்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் தினேஷ் கண்ணன் தயாரிக்கும், இந்த படத்திற்கான தலைப்பு இன்னும் வைக்கப்படவில்லை, முந்தைய படத்தில் மிக வித்தியாசமாக வைத்திருந்ததால், இந்த படத்திற்கும் அப்படி தலைப்பு  வைக்க வாய்ப்பிருக்கிறதா என வினவியபோது, “ஒருசில தலைப்புகள் பரீசீளிக்கப்பட்டு வருகிறது, இறுதி முடிவு இன்னும் எடுக்கப்படவில்லை, விரைவில் தலைப்பு வெளியிடுவோம்”

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா