சற்று முன்

எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |   

சினிமா செய்திகள்

விழாவிற்கு பிரபலங்களை அழைப்பதால் எந்த பலனும் கிடையாது
Updated on : 19 March 2019

‘வாங்க படம் பார்க்கலாம்’ எஸ்எஸ்பி ஆர்ட்ஸ் மூவிஸ் சார்பில் எஸ்.கோபால் தயாரித்துள்ள இந்த படத்தில்  லிவிங்ஸ்டன், முத்துக்காளை, கிரேன் மனோகர், நெல்லை சிவா, லொள்ளுசபா உதயா, கருணா ராதா, சேலம் ஜெய், கும்தாஜ் மற்றும் பலர் நடித்துள்ளனர். கதாநாயகன் கதாநாயகியாக ஜிஜி மற்றும் கமலி அறிமுகமாகியுள்ளார். கதை, திரைக்கதை, வசனம், பாடல்களை எழுதி அதை இசையமைத்தல் ஆகிய எல்லாவற்றையும் தானே செய்து இந்த படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குனர் கே.எஸ்.நேசமானவன்.



 



 



வேல்முருகன், சின்னப்பொண்ணு, தினேஷ்.வி, கவிதா, அய்யாத்துரை, யுகேந்திரன், பிரஷாந்தினி ஆகியோர் பாடல்கள் பாடியுள்ளனர். நடனம் மதுராஜ், ரமேஷ் கமல், நிர்மல், படத்தொகுப்பு ராஜேந்திரன், 

ஒளிப்பதிவு வினோத்.ஜி. 



 



 



இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேபில் வெகு விமரிசையாக நடைபெற்றது.



 



 



நடிகர் முனீஸ்காந்த் பேசும்போது, “சினிமாக்காரன் என்கிற படத்தில் இருந்து எனக்கு இயக்குனர் நேசமானவனை நன்கு தெரியும்.. வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் ஒரு குடும்ப டைரக்டர் போல எனக்கு வாய்ப்பு தந்ததோடு நியாயமான சம்பளத்தையும் கையோடு கொடுத்து அனுப்புவார்.. அந்த நன்றிக்காக தான் இந்த விழாவில் நான் கலந்து கொண்டுள்ளேன்” என நெகிழ்ந்தார்.



 



 



இந்த படத்தின் தயாரிப்பாளரும் ஹீரோவிமான ஜிஜி பேசும்போது, “இந்த படம் என்னுடைய முதல் முயற்சி.. படம் எடுப்பது எவ்வளவு கடினம் என்று இப்போதுதான் தெரிந்துகொண்டேன்.. இந்த படத்தை கமர்சியலாக எடுக்காவிட்டாலும் கலகலப்பாக நகைச்சுவை கலந்த படமாக உருவாக்கியுள்ளோம்.. விநியோகஸ்தர்கள் எங்களைப்போன்றவர்கள் எடுக்கும் சிறிய பட்ஜெட் படங்களை வெளிவர உதவி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.



காமெடி நடிகர் முத்துக்காளை பேசும்போது, “படத்தில் நடிக்க அழைக்கும்போது அண்ணே உங்களுக்கு முக்கியமான வேடம் என்று தான் அழைக்கிறார்கள்.. அப்படி நடித்த எங்களது புகைப்படத்தை போஸ்டரில் இடம் பெறச்செய்வதில் என்ன கஷ்டம்..? அதுதான் எங்களுக்கான அங்கீகாரமாக இருக்கும்.. இந்த நேரத்தில் ஒரு விஷயத்தை சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் யூடியூப்(Youtube) சேனல்களில் நான் இறந்துபோய் இரண்டு வாரம் ஆகி விட்டதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்.. நல்ல ஆரோக்கியமாக இருக்கிறேன்.. படப்பிடிப்புகளுக்கு செல்வதைவிட, இதுபற்றி விசாரித்து தினசரி வரும் தொலைபேசி அழைப்புகளுக்கு நான் உயிரோடு இருக்கிறேன் என பதில் சொல்வது தான் பெரிய வேலையாக இருக்கிறது” என வேதனையுடன் குறிப்பிட்டார்.



 



 



இயக்குனர் நேசமானவன் பேசும்போது, “பெருமைக்காக சொல்லவில்லை என்றாலும், என்னுடைய இயக்கத்தில் நடித்த முனீஸ்காந்த் இன்று உயர்ந்த இடத்தில்  இருப்பதை கண்டு நான் சந்தோசப்படுகிறேன்.. என்னுடைய படத்தில் நடித்த நடிகர் ஒருவர் மிக பெரிய இடத்திற்கு வந்து விட மாட்டாரா என்று ஆசைப்பட்டேன்.. அது நடந்து விட்டது.. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு திரையுலக பிரபலங்களை சிறப்பு விருந்தினர்களாக நாங்கள் அழைக்கவில்லை. காரணம் பொதுவாக இதுபோன்ற விழாக்களில் பிரபலங்களை அழைத்து, அவர்களை பேசவைத்து அவர்களை கவனித்து அனுப்புவது மட்டுமே வேலையாக மாறிவிடும்.. எங்களுக்காக உழைத்த தொழில்நுட்ப கலைஞர்களையும் அடுத்ததாக எங்கள் படத்தை திரையில் கொண்டு வருவதற்கு தங்கள் உழைப்பை கொடுக்க தயாராக இருக்கும் வினியோகஸ்தர்களையும் எங்களால் மேடையேற்றி கவுரவிக்க முடியாமல் போய்விடும். விழாவிற்கு வரும் பிரபலங்கள் பேசுவதால் படத்திற்கு ஒரு தியேட்டர் கிடைத்துவிடாது.. அங்கே வினியோகஸ்தர்களின் தயவுதான் நமக்கு தேவைப்படும்.. அதனாலேயே சிறப்பு விருந்தினர்கள் என யாரையும் அழைக்கவில்லை” என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 



 



 



இவ்வாறு ‘வாங்க படம் பார்க்கலாம்’ இசை வெளியீட்டு விழாவில்  கலந்துகொண்ட படக்குழுவினர் அவரவர் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா