சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

ஜி.வி.பிரகாஷுக்கும் பார்த்திபனுக்கும் மோதல்
Updated on : 01 April 2019

"குப்பத்து ராஜா" S FocuSS ப்ரொடக்ஷ்ன் சார்பில் சரவணன் எம், சிராஜ் மற்றும் சரவணன் டீ தயாரிப்பில் பாபா பாஸ்கர் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் படம். 



 



இதில் ஜி.வி.பிரகாஷ், பார்த்திபன், பாலக் லால்வானி ஆகியோருடன் யோகி பாபு, பூனம் பஜ்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். நடித்ததோடின்றி இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 



 



இந்த படத்தில் நடிக்கும் பார்த்திபன் படத்தை பற்றி கூறும்போது, "குடிசைப்பகுதியில் வசிக்கும் ஒரு ராஜாவாக நடிக்கிறேன், முக்கியமாக ஜி.வி.பிரகாஷுடன் தான் என் மோதல்கள் இருக்கும். இதை பற்றி சொன்னால், நான் எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடிக்கிறேனா என்ற ஒரு கேள்வி எழலாம். அதை பற்றி இப்போதைக்கு எதையும் சொல்ல இயலாது. எல்லோரும் ஜிவி பிரகாஷ் இசை மாயஜாலாத்தை கண்டு பிரமித்து போவார்கள். ஆனால் அவரின் உள்ளார்ந்த நடிப்பு திறன்களை கண்டு வியந்தேன். பல காட்சிகளில் மிக அழுத்தமான நடிப்பை அவர் மிக சாதாரணமாக வழங்கியதை நான் பார்த்தேன். கூடுதலாக, சண்டைக் காட்சிகளில் நிறைய முன்னேறியிருக்கிறார். இந்த படத்தில் அது குறித்து அதிகம் விவாதிக்கப்படும்" என்றார். 



 



இயக்குனர் பாபா பாஸ்கர் பற்றி கூறும்போது, "நான் எப்போதுமே பரபரப்பான திரைக்கதைகளை ரசிப்பவன். பாபா பாஸ்கர் அவரின் நடனத்தை போலவே திரைக்கதையையும் மிகவும் புதிதாக, வேகமாக வடிவமைத்திருந்தார். கதை சொல்லும் போது மிகவும் ரேஸியாக இருப்பதை உணர்ந்தேன், டப்பிங்கின் போது அவர் என்ன எழுதினாரோ அதை அப்படியே திரையில் கொண்டு வந்ததை பார்த்ததில் மகிழ்ச்சி" என்றார்.



 



பார்த்திபன் நடிக்கும் படத்தின் பெரும்பாலானவை வடசென்னை பகுதி மக்களின் வாழ்க்கையை மிகச்சரியாக பிரதிபலிப்பவை. அவர் முழுக்க 

முழுக்க அந்த பகுதியை சார்ந்த கதாபாத்திரமாகவே நடித்திருக்கிறார்.



 



மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் KL எடிட்டிங்கை கையாண்டுள்ளார்.



 



இந்த படம் ஏப்ரல் 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக இருக்கிறது. 



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா