சற்று முன்

எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |   

சினிமா செய்திகள்

'ஏசியன் அரப் விருது 2019' வென்ற இசையமைப்பாளர் ஜிப்ரான்
Updated on : 02 April 2019

கொண்டாட்டங்கள் என்பது தாய்நாட்டில் மட்டுமல்ல, அவை நாடு மற்றும் மொழி எல்லைகளுக்கு அப்பாற்பட்டவையாக இருக்கின்றன. இசையமைப்பாளர் ஜிப்ரானுக்கு இது மிக மகிழ்ச்சியான, கொண்டாட்டமான ஒரு தருணம். ஏனெனில் சமீபத்தில் ஹைதராபாத்தில் நடந்த ஒரு விழாவில் இசை துறையில் அவரது சேவையை பாராட்டி, 'ASIAN ARAB AWARD 2019' என்ற விருதை அவருக்கு அளித்து கௌரவப்படுத்தியுள்ளனர்.



 



இந்த மகிழ்ச்சியான செய்தியை பகிர்ந்து கொள்ளும் இசையமைப்பாளர் ஜிப்ரான் கூறும்போது, "எல்லா புகழும் சர்வ வல்லமையுள்ள இறைவனுக்கே. எனது வேலைக்கு சர்வதேச தளத்தில் அங்கீகாரம் கிடைத்திருப்பது எனக்கு கிடைத்த மிகப்பெரிய ஒரு கௌரவம். பஹ்ரைன், சௌதி அரேபியா, இந்தோனேசியா, ஐக்கிய அரபு நாடுகள், ரஷ்யா மற்றும் ஜோர்டான் ஆகிய நாடுகளிலிருந்து வந்திருந்த பிரபலமான பிரதிநிதிகளால் இவ்விழாவில் கௌரவிக்கப்பட்டது ஒரு அற்புதமான அனுபவமாக இருந்தது. இது வெறுமனே மகிழ்ச்சியை மட்டும் அளிக்காமல், எதிர்காலத்தில் மிகச் சிறந்த இசையை வழங்கும் பொறுப்பை எனக்கு அதிகமாக்கியிருக்கிறது" என்றார்.



 



2018ஆம் ஆண்டு ஜிப்ரானுக்கு மிகவும் வெற்றிகரமான ஒரு ஆண்டு. கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2, விஷ்ணு விஷால் நடித்த ராட்சசன் மற்றும் சமுத்திரகனியின் ஆண் தேவதை போன்ற நல்ல மற்றும் சவாலான படங்களில் பணியாற்றியிருக்கிறார். அதில் பாடல்கள் மட்டுமல்லாமல் பின்னணி இசையும் மிகவும் கொண்டாடப்பட்டது. இந்த ஆண்டும் (2019) பல்வேறு வகையான கதையம்சம் உள்ள படங்களில் அவர் பனியாற்றுவதால் எதிர்பார்ப்புகள் அதிகமாகவும், மிகவும் நம்பிக்கைக்குரிய ஆண்டாகவும் இருக்கிறது. விக்ரம் நடிக்கும் "கடாரம் கொண்டான்", வைபவ் நடிக்கும் "சிக்ஸர்", லக்ஷ்மி ராமகிருஷ்ணனின் "ஹவுஸ் ஓனர்", மலையாள அறிமுகமான "அதிரன்" (பின்னணி இசை), ஹன்சிகாவின் "மஹா", அபய் தியோலின் இது வேதாளம் சொல்லும் கதை , ஹோம் மினிஸ்டர் (கன்னடம்-தெலுங்கு இருமொழி படம்) இன்னும் சில படங்களிலும் பணிபுரிந்து வருகிறார். அவர் Sony Music-க்காக 7up Madras Gig-ல் தனிப்பாடல் ஒன்றையும் உருவாக்கி வருகிறார்.



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா