சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

51,682 சதுர அடி பரப்பளவில் 10 திரைகள் கொண்ட புதிய PVR மல்டிபிளக்ஸ்
Updated on : 19 June 2019

இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் உயர்தர திரையரங்கு நிறுவனமான பி.வி.ஆர் சினிமாஸ் உத்தண்டியில்  உள்ள ஒரு மாலில் அதன் 10 திரைகள் கொண்ட ஒரு புதிய மல்டிபிளக்ஸை திறந்திருக்கிறது. வாடிக்கையாளர் மைய அணுகுமுறையின் விரிவாக்கமாக, இந்த புதிய மல்டிபிளக்ஸில் குழந்தைகளுக்கென்றே பிரத்யேகமாக PVR PlayHouse என்ற ஒரு புதிய திரையரங்கை வடிவமைத்திருக்கிறது. சிறந்த தொழில்நுட்பம் மற்றும் நவீன வசதிகள் ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்களுக்கு இதுவரை கண்டிராத ஆடம்பர அனுபவத்தை வழங்குவதை நோக்கமாக கொண்டுள்ளது இந்த மல்டிபிளக்ஸ். இந்த மல்டிபிளக்ஸ் உடன் சேர்த்து தமிழ்நாட்டில் 13 இடங்களில் 83 திரைகளும், தென்னிந்தியாவில் 43 இடங்களில் 268 திரைகளும் கொண்டு பி.வி.ஆர் முதன்மையாக விளங்குகிறது. அழகிய கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள இந்த மல்டிபிளக்ஸ் 51,682 சதுர அடி பரப்பளவில் 1400 பார்வையாளர்களை அமர்ந்து பார்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், BARCO 2K ப்ரொஜக்‌ஷன் சிஸ்டம், டால்பி 7.1 சரவுண்ட் சவுண்ட் மற்றும் அடுத்த தலைமுறை 3D டெக்னாலஜி ஆகியவற்றை நிறுவியிருப்பதன் மூலம் சிறப்பான காட்சிகள் மற்றும் சக்தி வாய்ந்த ஒலி அனுபவத்தை பார்வையாளர்களுக்கு வழங்குகிறது.



இந்த மல்டிபிளக்ஸ் குறித்து PVR லிமிடெட் நிறுவனத்தின் இணை நிர்வாக இயக்குனர் திரு.சஞ்சீவ்குமார் கூறும்போது, "இந்த புதிய மல்டிபிளக்ஸ், பி.வி.ஆரின் தனித்துவமான சேவையை நிறைய இடங்களுக்கு எடுத்து செல்லும் எங்கள் வியாபார நோக்கத்துடன் பொருந்துகிறது. சென்னை எங்களுக்கு ஒரு முக்கியமான பகுதி. சினிமா அனுபவத்திற்கான புதிய தரநிலைகளை அமைப்பதன் மூலம் தென்னிந்திய சந்தையில் எங்கள் உறுதியான இடத்தை நிரூபிக்க எதிர்நோக்கி இருக்கிறோம்" என்றார்.







மேலும், PVR சினிமாவின் தலைமை நிர்வாகி திரு.கௌதம் தத்தா கூறும்போது, "சென்னைவின் அழகிய புறநகர் பகுதியில் எங்களின் புதிய 10 திரைகள் கொண்ட மல்டிபிளக்ஸை அறிமுகப்படுத்தியிருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த புதிய மல்டிபிளக்ஸ் குழந்தைகளுக்கான வரப்பிரசாதம். பி.வி.ஆர் PlayHouse மூலம் மேம்பட்ட சினிமா அனுபவத்தை வழங்குவதில் மகிழ்கிறோம். சமகால வடிவமைப்புகள் மற்றும் மெய்சிலிர்க்கும் அழகியலால், இந்த மல்டிபிளக்ஸ் இந்த பகுதியில் தரத்தில் உயர்ந்து நிற்கிறது. மேலும் பார்வையாளர்கள் அதை அனுபவிப்பதைப் பார்க்க நாங்கள் உற்சாகமாக உள்ளோம்" என்றார்.







Interlocking Panache என்ற கருத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மல்டிபிளக்ஸ் பிரகாசமான மற்றும் அதிநவீன தோற்றத்தை வழங்குகிறது. கூடுதலாக, விரைவு டிக்கட் வசதி மற்றும் விரும்பத்தக்க உணவு மெனு ஆகியவை இதன் தனித்துவமான அம்சங்கள். பி.வி.ஆர் பரிசு அட்டைகள் உபயோகிக்கும் வசதியையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியுள்ளனர். மேலும், பி.வி.ஆர். உறுப்பினராக இணைந்து கொள்ளும் வசதியும் உள்ளது. இந்த மல்டிபிளக்ஸ் உடன், தற்போது பி.வி.ஆர் 67 நகரங்களில் 166 இடங்களில் 781 திரைகளை கொண்டு இயங்கி வருகிறது.







PVR Cinemas பற்றி:

பி.வி.ஆர் சினிமாஸ் இந்தியாவின் மிகப்பெரிய திரையரங்கு நிறுவனம், 1997ல் துவங்கப்பட்டதில் இருந்து தங்களின் தனித்துவமான அம்சங்களால் தங்கள் பிராண்டை மறுவரையறை செய்வதோடு, பார்வையாளர்களுக்கும் சிறப்பான சினிமா அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்தியாவில் 67 நகரங்களில் (21 மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்கள்) 166 இடங்களில் 781 திரைகளை கொண்டு, ஆண்டுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களுக்கு சிறப்பான அனுபவத்தை வழங்கி வருகிறது. இதில் பல வகையான திரைகளையும் கொண்டுள்ளது. Director’s Cut 4 திரைகள், Gold 33 திரைகள், IMAX 8 திரைகள், 4DX 15 திரைகள், P[XL] 7 திரைகள், Playhouse 9 திரைகள் மற்றும் PVR Onyx ஒரு திரையையும் கொண்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா