சற்று முன்

சுகாதாரத்துறை அமைச்சர் கலந்துகொண்ட ‘கண்ணப்பா நினைவு மருத்துவமனை’ திறப்பு விழா   |    சசிகுமார் - சிம்ரன் இணையும் முதல் திரைப்படம்!   |    நடிகர் கார்த்தி கலந்துகொண்ட செம்பொழில் கிராமத்துத் திருவிழா!   |    விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |   

சினிமா செய்திகள்

மாதவன் இயக்குனராக அறிமுகமாகும் ராக்கெட்ரி
Updated on : 19 June 2019

பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை 'பார்த்தாலே பரவசம்' (2001) மற்றும் 'கன்னத்தில் முத்தமிட்டால்' (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான இருந்தால் தான் உறவுகள் வலுவானவையாக இருக்கும். இந்த முறை இன்னொரு 'சிக்கல்', ஆனால் அது மாதவன் மற்றும் சிம்ரன் குடும்ப உறவுகளுக்குள் அல்ல, வெளிப்புறத்தில். ஆம், 17 ஆண்டுகள் நீண்ட இடைவெளிக்கு பிறகு, பன்மொழி திரைப்படமான 'ராக்கெட்ரி' படத்தில் தான் இவை இடம் பெறுகிறது.



 







ராக்கெட்ரி மிகவும் தீவிரமான கதையை கையாள்கிறது. இது நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டது என்பது அனைவருக்கும் தெரியும். அது கதாநாயகனின் தனிப்பட்ட வாழ்க்கையையும் கொண்டிருக்கும். ஒரு அற்புதமான நடிகையாக இருப்பதால், ஈடு இணையற்ற நடிப்பை வெளிப்படுத்தும் பழக்கத்தை சிம்ரன் எப்போதும் வைத்திருக்கிறார். இது இந்த படத்திலும் கூட அப்படியே தொடர்கிறது. திரு மற்றும் திருமதி நம்பியாக மாதவன் மற்றும் சிம்ரன் ஜோடியாக இருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளங்களிலும், ஆன்லைன் மற்றும் அனைத்து ஊடக தளங்களிலும் மிகப்பெரிய அளவில் பரவி, நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால் 'ராக்கெட்ரி' படக்குழுவினர் மிகவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.



 





‘ராக்கெட்ரி - நம்பி எஃபெக்ட்’ படத்தை பற்றிய அறிவிப்பு வெளியான காலத்திலிருந்தே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படப்பிடிப்பு நடக்க நடக்க படிப்படியாக அதிக கவனத்தை ஈர்த்தது. குறிப்பிடத்தக்க விதத்தில், மாதவன் சால்ட் அண்ட் பெப்பர் நிற முடியை கொண்ட நம்பியாக மாறியது, அவர் இயக்குனராக அறிமுகமாகும் திரைப்படம் என்பதும், இந்த புதிய புகைப்படமும் நம் கண்களை இமைக்க விடாமல் செய்திருக்கின்றன. 1990களில் நம் நாட்டில் நிகழ்ந்த அதிர்ச்சியூட்டும் சம்பவங்களின் அடிப்படையில் இந்த திரைப்படம் உருவாகிறது. ISRO விஞ்ஞானி எஸ்.நம்பி நாராயணன் ஒரு கிரையோஜெனிக் நிபுணர், அவரை ஒரு உளவாளி என கைது செய்து, பல ஆண்டுகள் சிறை தண்டனையில் இருந்தார். பின்னர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டது. அதை அடிப்படையாக கொண்டு இந்த படம் உருவாகி வருகிறது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா