சற்று முன்

எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |    சூரி மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி நடித்த ப்ளாக்பஸ்டர் ‘மாமன்’ திரைப்படம், ஆகஸ்ட் 8, 2025 அன்று ZEE5 இல்!   |    ‘பிளாக்மெயில்’ படம் த்ரில்லர் என்பதையும் தாண்டி ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாகி உள்ளது   |    ரசிகர்களிடையே வானளாவிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள 'கிங்டம்' ட்ரைலர்!   |    படம் வெளியானதற்கு பிறகு நிச்சயம் இயக்குநரின் வேலை பேசப்படும் - இணைத் தயாரிப்பாளர் கலை அரசு   |    'பிளாக்மெயில்' உணர்வும், உற்சாகமும் சரியாக கலந்த ஒரு படம் - நடிகை பிந்து மாதவி   |   

சினிமா செய்திகள்

எஸ்.ஏ. சந்திரசேகர் பெண்கள் குறித்து சர்ச்சை பேச்சு
Updated on : 28 June 2019

இப்போது உள்ள பெண்கள் ஆண்களிடம் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும், ஒரே நேரத்தில் 4 பேரிடம் காதலை சொல்வதாகவும்  நடிகர் விஜய்யின் தந்தையும், கேப்மாரி படத்தின் இயக்குனருமான எஸ்.ஏ. சந்திரசேகர் தெரிவித்துள்ள கருத்து சர்ச்சையை கிளப்பி உள்ளது.



 



நாளைய தீர்ப்பு படத்தின் மூலம் தனது மகன் விஜய்யை தமிழ் திரை உலகிற்கு அறிமுகப்படுத்திய பெருமைக்குரியவர் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர்.



 



தான் இயக்கும் படத்திலும் சரி, நிஜத்திலும் சரி எஸ்.ஏ.சந்திரசேகர், சொல்லும் கருத்துக்கள் எப்போதும் பரபரப்பாக பேசப்படும்..! அந்தவகையில் பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பாக நடந்த படவிழா ஒன்றில் இனி நாட்டில் எல்லோரும் காவி வேட்டி கட்டிக் கொண்டு அலைய வேண்டியது தான் என்று பேசி பரபரப்பை பற்ற வைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்.



 



இந்த நிலையில் பிகில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரில் விஜய் காவி வேட்டி கட்டி ஸ்டைலாக அமர்ந்து இருக்கும் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றது.



 



விஜய் கட்டியிருக்கும் காவி வேட்டி குறித்து கேப்மாரி படத்தின் அறிமுக விழாவில் இயக்குனர் எஸ்.ஏ சந்திர சேகரிடம் கருத்து கேட்ட போது, பதில் அளிக்க மறுத்து சற்றே ஆவேசமானார்.



 



1997 ல் விஜய் கதாநாயகனாக நடித்து 100 நாட்கள் ஓடியதாக விளம்பரப்படுத்தப்பட்ட ஒன்ஸ்மோர் படம், ஒரு தோல்வி படம் என்றும் அதனை படமாக எடுக்க இளையராஜாவின் தூண்டுதல் தான் காரணம் என்றும் 22 வருடங்கள் கழித்து உண்மையை போட்டு உடைத்தார் எஸ்.ஏ. சந்திரசேகர்



 



இதுவரை 70 படங்களை இயக்கி உள்ளதாகவும் கேப்மாரி தான் தனது கடைசி படம் என்றும் அறிவித்த எஸ்.ஏ. சந்திரசேகர், இப்போது உள்ள பெண்கள் காதலை சொல்ல தயங்குவதில்லை என்றும் ஒரே நேரத்தில் நான்கு பேரிடம் காதலை சொல்கிறார்கள் என்றும் விமர்சித்தார்.



 



எஸ்.ஏ. சந்திரசேகரின், பெண்கள் குறித்த இந்த கருத்து சர்ச்சைகளை கிளப்பி விட்டிருக்கும் நிலையில், சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.



 



காதல் அவரவர் தனிப்பட்ட விருப்பம் சார்ந்தது என்றும் அதனை சமூகத்தில் உள்ள ஒட்டு மொத்தமாக பெண்களின் செயல்பாடாக எடுத்துக் கொண்டு கருத்து சொல்வதால் இது போன்ற வீண் சர்ச்சைகள் எழுவதாக பெண்ணிய சிந்தனையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா