சற்று முன்

முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |    எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |   

சினிமா செய்திகள்

பிக் பாஸ் ரகசியத்தை போட்டு உடைத்த வனிதா - கடுப்பான விஜய் டிவி
Updated on : 12 July 2019

பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் இப்போட்டியின் முதல் எலிமினேஷனில் நடிகை பாத்திமா பாபு வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறப் போவது யார்? என்பதில் பெரும் எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.



 



இந்த நிலையில், பிக் பாஸ் போட்டியாளர்களாக பங்கேற்கும் பிரபலங்களுக்கு நிகழ்ச்சி குழுவினர் பல விதிமுறைகளை எழுத்துப் பூர்வமாக போட்டு, அவர்களிடம் கையெழுத்தும் வாங்கிக் கொள்கிறார்கள். அப்படி போடப்படும் விதிமுறைகளில் போட்டியாளர்கள் சம்பளம் குறித்து எந்த இடத்திலும் பேசக் கூடாது, என்பது முக்கியமானதாகும்.



 



ஆனால், இந்த விதிமுறையை பிக் பாஸின் ஹீரோவாக திகழும் வனிதா, தற்போது மீறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருப்பதோடு, விஜய் டிவியை கோபமடைய செய்திருக்கிறது.



 



அதாவது, பிக் பாஸில் போட்டியாளர்களாக பங்கேற்பவர்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு தொகை சம்பளம் என்று பேசப்படுதாக கூறப்படுகிறது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட தொகையை சம்பளமாக பேசுகிறார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த இரண்டில் எது நிஜம் என்பதில் ரசிகர்களுக்கு குழப்பம் நிலவி வந்த நிலையில், அந்த குழப்பத்தை போக்கும் விதமாக, வனிதா பிக் பாஸின் சம்பள ரகசியத்தை கூறியிருக்கிறார்.



 



தற்போது பிக் பாஸ் வீட்டில் நடக்கும் தொடர் கொலைகளை கண்டுபிடிப்பது போன்ற டாஸ்க்குகளை போட்டியாளர்கள் செய்து வருகிறார்கள்.



 



அதன்படி, கொலையாளி வனிதா தான் என பார்வையாளர்களுக்கு தெரிந்தாலும், வனிதா, முகேனை தவிர வேறு எந்த போட்டியாளர்களுக்கும் தெரியாததால் போலீஸ் குழு திணறுகிறது.



 



இதனால் டென்ஷனான சேரன் ஆவியாகவுள்ள சாக்‌ஷி, ஷெரின், மோகன் வெயிலில் மிகவும் கஷ்டப்படுவதால் இந்த டாஸ்க்கை இப்படியே விட்டுவிட வேண்டும் என பிக்பாஸிடம் கூறுகிறார்.



 



இதற்கிடையில் குறுக்கிடும் வனிதா, ”நாம் பிக்பாஸ் கேம் விளையாட்டிற்கு வந்திருக்கிறோம், குறிப்பிட்ட சம்பளம் பேசி வந்திருக்கோம். அதை மறக்காதீர்கள்” என தெரியாமல் உளறியுள்ளார்.



 



வனிதாவின் இந்த ஓவர் வாயால் பிக் பாஸ் விதி மீறப்பட்டதோடு, ரசிகர்களுக்கு இதுவரை தெரியாத சம்பள ரகசியமும் தெரிந்துவிட்டது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா