சற்று முன்

முதன்முறையாக தெலுங்கில் யோகி பாபு நடிக்கும் 'குர்ரம் பாப்பி ரெட்டி'   |    தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான ‘பறந்து போ’ தற்போது ஜியோஹாட்ஸ்டாரில்!   |    ‘அக்யூஸ்ட்’ வெற்றி நடை போடுவதை முன்னிட்டு காட்சிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு!   |    அறிமுக நடிகர் வினோத் ஹீரோவாக நடிக்கும் 'பேய் கதை' பட இசை & முன்னோட்டம் வெளியானது!   |    ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் 'ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா'   |    எமோஷனல் டிராமாவாக உருவாகியிருக்கும் “ஓ காட் பியூட்டிஃபுல்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது   |    துல்கர் சல்மான் தனது 41 வது திரைப்படத்தில் அறிமுக இயக்குநர் ரவி நெலக்குடிடியுடன் இணைகிறார்!   |    'கிராண்ட் ஃபாதர்' டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியிட்டு M. S. பாஸ்கருக்கு வாழ்த்து!   |    நடிகர் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் மூன்று விருதுகளை வென்றுள்ள ‘பார்க்கிங்'!   |    இலங்கையில் ஜொலிக்கும் வரலட்சுமி சரத்குமார்!   |    'மீஷா' படம் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் நடிகர் கதிர்!   |    'தலைவன் தலைவி' படத்தின் மூலம் வெற்றி பயணத்தை தொய்வின்றி தொடரும் சத்யஜோதி ஃபிலிம்ஸ்   |    ஒரே வாரத்தில் 53 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்த 'மகாஅவதார் நரசிம்மா' !   |    சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்திலிருந்து முதல் பாடல் வெளியானது!   |    'அவதார்: ஃபயர் அண்ட் ஆஷ்' படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது!   |    ஜியோஹாட்ஸ்டார் தனது அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல்ஸ் தொடரை அறிவித்துள்ளது!   |    இசை தளங்களிலும் ரசிகர்களின் இதயத்திலும் சிம்மாசனமிட்டுள்ள 'அந்த 7 நாட்கள்' பட சிங்கிள்   |    நான் முடியுமானால் அனிருத்தை கடத்தி என் பக்கத்தில் வைத்துக்கொள்வேன்! - விஜய் தேவராகொண்டா   |    அமீர் கான், ஜெனிலியா தேஷ்முக்குடன் 10 புதுமுக மாற்றுத்திறனாளிகள் நடித்துள்ள படம் YouTube-இல்!   |    சமூக அக்கறை மிக்க அழுத்தமான படைப்பாக உருவாகியுள்ள படம் 'போகி'   |   

சினிமா செய்திகள்

கல்லூரி விடுதியை கதைக்களமாக கொண்ட படம்
Updated on : 24 July 2019

PFS  ஃபினாகில்  பிலிம் ஸ்டுடியோ என்ற பட நிறுவனம் சார்பில் K அசோக்குமார்  P ராமன், G சந்திரசேகரன், M P கார்த்திக் ஆகிய நால்வரும் இணைந்து தயாரித்திருக்கும்  படம் “ மயூரன் “  மயூரன் என்றால் விரைந்து  உன்னை  காக்க  வருபவன்,  வெற்றி  புனைபவன் என்று பொருள்.



 



 



வேலாராமமூர்த்தி, ஆனந்த்சாமி (லென்ஸ் ), அமுதவாணன்(தாரை தப்பட்டை ),  அஸ்மிதா ( மிஸ் பெமினா வின்னர் )  மற்றும்  பாலாஜிராதாகிருஷ்ணன்,  ரமேஷ்குமார்,  கலை, சிவா ஆகியோர் நடித்துள்ளனர். குணச்சித்திர நடிகர்கள் அனைவரும் கூத்துப்பட்டறையைச் சார்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



 



 



 ஒளிப்பதிவு  பரமேஷ்வர் (இவர் சந்தோஷ்சிவனிடம்  உதவியாளராக பணியாற்றியவர்)இசை  ஜுபின் ( பழையவண்ணாரப்பேட்டை )  மற்றும்  ஜெரார்ட், பாடல்கள்  குகை    மா.புகழேந்தி, எடிட்டிங் அஸ்வின், ஸ்டண்ட் டான்அசோக், நடனம் ஜாய்மதி, மக்கள் தொடர்பு  மணவை புவன், தயாரிப்பு  K.அசோக்குமார், P ராமன்,  G சந்திரசேகரன்,  M P கார்த்திக்



 



 



கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் நந்தன் சுப்பராயன் ( இவர் இயக்குனர் பாலாவின் நந்தா, பிதாமகன்  போன்ற படங்களில் உதவியாளராகபணியாற்றியவர் ) படம்  பற்றி  இயக்குனர் நந்தன்சுப்பராயன் கூறியது...



 



 



மனிதன் தோன்றிய காலத்தில் இருந்தே நிர்பந்தங்களும் நெருக்கடிகளும் ஒவ்வொரு தனி மனித வாழ்க்கையின் தவிர்க்க முடியாத அங்கமாகத்தான்இருக்கிறது. நிர்பந்தங்கள்  இல்லாதவர்கள் அதிர்ஷ்டசாலிகள் நிர்பந்தத்திற்கு பணி யாதவர்கள் போராளிகள். இங்கு  அதிர்ஷ்டசாலிகளைவிட போராளிகளேஅதிகம். நியாயத்தின் பக்கம் நிற்கும் யாவர்க்கும் அதிகாரம் படைத்தவர்களின் பரிசு எப்போதும் உயிர் பயம் காட்டுவது தான், அதற்கு  நல்லவர்கள் கொடுக்கும் விலை தனிமை... யார் கண்ணிலும் படாத தலைமறைவு  வாழ்க்கை... மற்றும் உனக்கு எதுக்கு வம்பு எனும் அறிவுரைகள் மட்டும்தான்.



 



 



சொல்லிக்கொடுக்கப்பட்ட மரபுகளிலிருந்து விலகி நிற்பவனை உலகம் வேறுவிதமாகத்தான் பார்க்கிறது. மயூரன் விரைந்துன்னை காக்க வருபவன் என்றுபொருள்படும்,   இன்னொரு இடத்தில் வெற்றி புனைபவன் என்றும் சொல்லலாம்.



 



 



கல்லூரி விடுதி தான் கதைக்களம். என்னால் எதுவும் செய்ய முடியும் என எழுச்சியூட்டும்  பருவத்தினர் ஒட்டுமொத்தமாக வசிக்கும் ஒரு சமூகம்... ஒருதேசம்...



 



 



அடர்ந்த வனங்களில் காணப்படும் பல்வேறு தாவரங்கள் போன்றவர்கள். ஒன்று மரம், ஒன்று செடி, ஒன்று கூடி. ஒரே நிலத்தில் வாழ்ந்தாலும்ஒவ்வொன்றும் ஒவ்வொரு குணம்இங்கே சந்திக்கும் முகங்கள் இயல்பாய் பழகும் நட்பையும் உருவாக்குகிறது,  எதிரான எண்ணம் கொண்டவர்களிடம்குரோதமும், பகையும் வளர்க்கிறது. என் எண்ணம், என் விருப்பம் என்பதைத் தாண்டி, எது நியாயம் எது தர்மம் அது கொடுக்கும் அடுத்த வினாடி ஆச்சரியம்தான் வாழ்க்கை. முடிந்தவரை நியாய  உணர்வுகளை அலங்காரம் இன்றி  சொல்லியிருக்கும் படம் தான் மயூரன்.



 



 



படம்  ஆகஸ்ட் 2  ஆம் தேதி தயாரிப்பாளர் H.முரளி அவர்கள் Banner மூலமாக வெளியிபட உள்ளது.  என்றார் இயக்குனர் நந்தன் சுப்பராயன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா