சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

பொங்கலன்று கார்த்தியும் அவர் மகளும் செய்த செயல்
Updated on : 22 January 2020

 



 காலிங்கராயன் கால்வாயில் பொங்கல் விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஆற்றில் விடும் விழாவிற்கு தன் குடும்பத்துடன் சென்றார் நடிகர் கார்த்தி. அந்த கால்வாயை மீட்டு மீண்டும் அனைவரும் உபயோகிக்கும் வகையில் மீட்டெடுக்க இளைஞர்களுக்கு கோரிக்கை வைத்துப் பேசியதாவது :-



 



738 ஆண்டுகளுக்கு முன்பு காளிங்கராயன் என்பவர் மக்களுக்காக இந்த கால்வாயை கட்டினார். அவர் பெயரே இந்த கால்வாய்க்கு சூட்டப்பட்டுள்ளது. தங்களுடைய சுய நலத்திற்காக தான் இதை கட்டினார்கள் என்று யாரும் கூறிவிட கூடாது என்பதற்காக அந்த கால்வாயிலிருந்து தண்ணீர் கூட அருந்தாமல் குடும்பத்துடன் ஊரை விட்டு சென்றார்கள். அன்று முதல் இன்று வரை நாம் தான் இந்த நீரை அனுபவித்து வருகிறோம். 



 



இத்தனை ஆண்டு காலமாக நீர் அனைவருக்கும் பயன்படும் விதமாக இருந்து வந்துள்ளது. ஆனால், கடந்த 40 ஆண்டு காலமாக இந்த நீரைப் பயன்படுத்த இயலாமல் இருக்கிறது. அதற்கு காரணம் இப்பகுதியை சுற்றியுள்ள தொழிற்சாலைகளால் தான். இனி சாலைகளில் இருந்து வரும் கழிவுநீர் நேரடியாக பாதிக்கப்பட்ட மக்கள் பயன்படுத்த முடியாத நினைக்க வேண்டியிருக்கிறது. இதனை இளைஞர்கள் தான் மாற்ற வேண்டும். ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் சென்று அவர்களுடைய பொருட்செலவில் கழிவு நீரை சுத்தப்படுத்தி பின்பு கால்வாயில் கலக்க செய்யுமாறு வலியுறுத்தி கடிதம் கொடுக்க வேண்டும்.



 



தனிமனிதனாக மக்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்ற காளிங்கராயனின் சிறந்த செயல் அழியாதவாறு பாதுகாக்க வேண்டும். நோய்நொடி இல்லாத ஆரோக்கியமான குழந்தைகள் பிறப்பதற்கு நாம் வழி முறை செய்ய வேண்டும். நோய் இல்லாமல் இருப்பதும் நோய் இல்லாமல் வாழ்வதுதான் சிறந்த வாழ்க்கை .அதை உணர்ந்து இளைஞர்கள் நாம் அனைவரும் ஒன்றுபட வேண்டும்.



 



மேலும், நான் சிறுவயதில் ஊருக்கு செல்லும்போதும் எங்கள் ஊரில் இதுபோன்ற நீரை நான் கண்டதில்லை. திருமணம் முடிந்து முதல் முறையாக இந்த ஊருக்கு வந்தபோது தண்ணீரைப் பார்த்து நான் பொறாமை அடைந்தேன்.



என் வாழ்நாளில் இன்று தான் முதல் முறையாக முளைப்பாரியை ஆற்றில் விட்டிருக்கிறேன். என் மகளும் ஆற்றில் விட்டது அவளுடைய வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வாக இருக்கும். மக்களுக்காக இந்த கால்வாயை நிச்சயம் பாதுகாக்க வேண்டும்.



 



அடுத்த தலைமுறையினருக்கு தங்களுடைய சொந்த செலவில் பிறருக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வரவேண்டும்.



 



மேலும், விவசாயிகள் என்றாலே வயதானவர்கள் என்று தான் அனைவரும் எண்ணுகிறார்கள். இளைஞர்கள் விவசாயம் செய்வதற்கு முன்வர வேண்டும். நானும் சென்றுவர வசதியாக இருக்கும் வகையில் சென்னைக்கு அருகில் விவசாயம் செய்வதற்கான நிலத்தை பார்த்து வருகிறேன்.



 



இவ்வாறு கார்த்திக் கூறினார்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா