சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

“சிவகாமி” படத்தின் இசை வெளியீட்டு விழா
Updated on : 29 February 2020

பெரு வெற்றி பெற்ற நானி தெலுங்கு படத்தை தமிழில் மொழிமாற்றம் செய்து விரைவில்  வெளிவரவுள்ள படம் தான் “சிவகாமி”.



 



மாயஜாலங்கள் நிறைந்த சாமி படங்கள் வழக்கற்று போன நிலையில் தமிழ் சினிமாவில் மீண்டும் ஒரு சாமி  படமாக ஆவிகள் பேய்களை அடக்கும்  அம்மன் படமாக  ஹாரர் கலந்து   கலக்க வருகிறது “சிவகாமி” திரைப்படம். 



 



 



ஜே எம் பஷீர், MD Cinemas AM.சௌத்ரி இணைந்து   “சிவகாமி” படத்தை வெளியிடுகிறார். இணை தயாரிப்பாளர்களாக  தங்கராஜ் ,முத்துகுமார் ஆகியோர் பணியாற்றியுள்ளனர். தமிழில் வெளியீட்டிற்கு தயாராகிவரும் இப்படத்தின் இசை விழா இன்று தனியார் அரங்கில் நடைபெற்றது இவ்விழாவில் படக்குழு பத்திரிக்கையாளர்கள், பிரபலங்களான நடிகர் தயாரிப்பாளர் ஜே எம் பஷீர் ,நடிகர் ராதாரவி , பவர் ஸ்டார் சீனிவாசன் , MD Cinemas AM.சௌத்ரி, இணை தயாரிப்பாளர்கள் தங்கராஜ், முத்துகுமார் உட்பட விருந்தினர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 



 



நடிகர், தயாரிப்பாளர் ஜே எம் பஷீர் பேசியது... 



 



 



என் நண்பன் சௌத்ரி முதன் முதலாக இந்தப்படத்தை பார்த்து நன்றாக இருப்பதாக சொன்னார். அம்மாவின் பிறந்த நாளை முன்னிட்டு நம் முதல்வர் அந்நாளை பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளார்கள். இப்படம் பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம் அதனால் கண்டிப்பாக இந்தப்படத்தை செய்யுங்கள் என்று சொன்னேன். இன்று CAA, NPR, பற்றி தவறான தகவல்கள் கூறி உறவுகளாக உள்ள இந்து, இஸ்லாம் மக்களை பிரிக்கின்றனர். நம் முதல்வர் எடப்பாடி இஸ்லாமியர்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் வராது என உறுதி அளித்துள்ளார். இங்கு ஹீரோ ராதாரவி சார் தான். எனக்காக அவர் வந்துள்ளார். இந்தப்படத்தை நல்ல முறையில்  AM.சௌத்ரி கொண்டு வந்துள்ளார். நீங்கள் ஆதரவளித்து வெற்றி பெறச் செய்ய வேண்டும் நன்றி. 



 



 



MD Cinemas AM.சௌத்ரி பேசியது... 



 



 



ஜே எம் பஷீர் சாருக்கு நன்றி அவரால் தான் இந்தப்படம் செய்கிறேன். அவர் நிறைய பேருக்கு உதவி செய்துள்ளார். எனக்கும் செய்துள்ளார். ராதாரவி அண்ணணுக்கு என் நன்றிகள். பெண் குழந்தை பாதுகாப்பை பேசும் படம் இது அதனால் தான் இந்தப்படம் செய்கிறேன். அரசாங்கம் பெண் குழந்தை பாதுகாப்பு நாளை அறிவித்துள்ளது அதற்கு நன்றிகள். இந்தப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 



 



 



தேவதானம் பேசியது...



 



 



ஜே எம் பஷீர், MD Cinemas AM.சௌத்ரி ஆகியோர் தான் என்னை வழிநடத்தினார்கள் அவர்களால் தான் இந்தப்படம் நடந்தது. இங்கு வந்து வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. 



 



 



பவர் ஸ்டார் சீனிவாசன் பேசியது... 



 



 



நான் படத்தில் நடிக்கும் முன் ராதாரவி அண்ணனிடம் ஆலோசனை கேட்டேன். கடுமையாக திட்டிவிட்டார். பொறாமையில் சொல்கிறார் என நான் நடிக்க போய்விட்டேன். ஆனால் அவர் சொன்னது நல்லதற்குதான் கஷ்ட காலங்களில் நிறைய நல்ல அறிவுரை தருவார். நான் சினிமாவில் 40 கோடிகளை இழந்திருக்கிறேன். மீடியாவில் என்னைப் பற்றி நிறைய தவறான தகவல்கள் வந்துவிட்டது. பரவாயில்லை. நான் எல்லாவற்றிலும் ஜெயித்து வருவேன். இங்கு ரஜினி சாருக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் சீக்கிரம் கட்சி ஆரம்பியுங்கள்.  என்னை சேர்த்து கொள்ளுங்கள், என்னை துணை முதல்வர் ஆக்கிவிடுங்கள். இல்லையென்றால் நான் கட்சி ஆரம்பிக்கிறேன் நீங்கள் வந்து சேர்ந்து விடுங்கள். “சிவகாமி” படம் பார்க்க நன்றாக இருக்கிறது. படம் வெற்றி பெற படகுழுவுக்கு வாழ்த்துகள். 



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா