சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

மீண்டும் 'கழுகு' கூட்டணியில் 'பெல் பாட்டம்'
Updated on : 02 March 2020

நடிகர் கிருஷ்ணா மற்றும் இயக்குநர் சத்யசிவா இணைந்து “கழுகு, கழுகு 2” என தொடர்ந்து இரு வெற்றிபடங்களை தந்துள்ளனர். தற்போது மூன்றாம் முறையாக இக்கூட்டணி ஒரு புதிய படத்திற்காக  இணைகிறது. இப்படத்திற்கு “பெல் பாட்டம்” என பெயரிடப்பட்டுள்ளது. இதே பெயரில் கன்னடத்தில் வெளியாகி 20 கோடி ரூபாயை வசூலித்து பெரு வெற்றிபெற்ற படத்தின் தமிழ்ப்பதிப்பாக இப்படம் உருவாகிறது. இதன் இந்தி பதிப்பில் பாலிவுட் பேரரசனாக உலாவரும் அக்‌ஷய் குமார் நாயகனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடதக்கது. 



 





“பெல்பாட்டம்” முந்தைய கால ரெட்ரோ  பின்களத்தில் நடக்கும் நடப்பதாக  கதை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸாக ஆசைப்பட்டு, சூழ்நிலைகளின் இடர்பாட்டால் முடியாமல்போய்,  தனியார் துப்பறிவாளனாக, குற்றங்களை கண்டுபிடிப்பவராக, திவாகர் எனும் பாத்திரத்தில்  கிருஷ்ணா நடிக்கிறார். கைவிடப்பட்ட குற்ற வழக்கு ஒன்றை விசாரிக்க அந்த வழக்கு  பல எதிர்பராத சிக்கல்களையும், திருப்பங்களையும் கொண்டு வருகிறது. இவை அத்தனையையும் மீறி அந்த வழக்கின் மர்மத்தை ஆராய்ந்து கண்டுபிடிப்பது தான் இப்படத்தின் கதை. ஆனால் அது அவ்வளவு எளிதாக நடந்தேறுவதில்லை அவர் சந்திக்கும் விவகாரமான, வித்தியாசமான மனிதர்கள், அவர் மனதை இளக்கி காதலில் விழச்செய்யும், சட்டத்திற்கு புறம்பாக சரக்கு விற்கும் குஷ்மா, இந்த  பாத்திரங்கள் எல்லாம் அந்த வழக்கை  விசாரிப்பதை பன்மடங்கு கடினமாக்குகிறார்கள்.  



 







தமிழ் சினிமாவில்  வெகு நாகரீகமான படங்கள் மூலம்  ஒரு தனிச்சிறப்பான இடத்தை கிருஷ்ணா பெற்றிருக்கிறார். இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, சந்தோஷ் சிவன் இயக்கத்தில் டெரரிஸ்ட் படத்தில் மிக வித்தியாசமான பாத்திரத்தில் நடித்து, நாயகனாக காமெடி ஹாராரன “யாமிருக்க பயமேன்”  படத்தில் கலக்கி, சொல்லப்படாத மனிதர்களின்  கதையை சொல்லிய  “கழுகு” என  அவர் தொடர்ந்து வித்தியாசமான கதைகளங்கள் கொண்ட, தரமான படங்களில் நடித்து, தொடர் வெற்றிகள் தந்து, தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தரக்ளின் நம்பிக்கை நாயகனாக திகழ்கிறார். தற்போது முற்றிலும் மாறுபட்ட, ரெட்ரோ கால துப்பறிவாளனாக “பெல்பாட்டம்” படத்தில் நடிக்கிறார். “குற்றம் 23, மகாமுனி” படங்களில்  வித்தியாசமான கதாப்பாத்திரங்கள் மூலம் ரசிகர்கள் மனதை வென்ற மஹிமா நம்பியார் இப்படத்தில் நாயகியாக நடிக்கிறார். காமெடி நடிகர் சரவணன் உட்பட தமிழ் சினிமாவின் திறமை மிகு நடிகர்கள் பலரும் இப்படத்தில் நடிக்கிறார்கள். 



 







தனது தனிச்சிறப்பான பாடல்கள் மட்டுமில்லாமல் பின்னணி இசை மூலமும் ரசிகர்களை கவர்ந்து வரும் இசையமைப்பாளர் சாம் CS இப்படத்திற்கு இசையமைக்கிறார். “பியார் பிரேமா காதல், கரம் மசாலா, டிக்கெட்” படங்கள் மூலம் புகழ்பெற்ற ராஜா பட்டாசார்ஜி இப்படத்தில் ஒளிப்பதிவு செய்கிறார். “வழக்கு எண் 18/9, தனி ஒருவன், 1945, டோரா, கழுகு 2” புகழ் கோபி கிருஷ்ணா இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார். 



 







NH Hari Silver Screens நிறுவனம் சார்பில் H. சார்லஸ் இம்மானுவேல் “பெல் பாட்டம்” படத்தை தயாரிக்கிறார். புதிதாக துவங்கப்பட்டுள்ள NH Hari Silver Screens நிறுவனம் மாறுபட்ட கதைகளங்களை கொண்ட, தரமான படங்களை தயாரிப்பதை குறிக்கோளாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனத்தின் முதல் தயாரிப்பான “தீதும் நன்றும்” விரைவில் திரையரங்கில் வெளியாகவுள்ளது. இயக்குநர் சத்யசிவா தற்போது நடிகர் ராணாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள “1945” படமும் பெரும் எதிர்பார்ப்பிற்கிடையில் விரைவில் வெளியாகவுள்ளது.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா