சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

போலி போலீசாக சந்தீப் கிசன் நடிக்கும் 'அசுரவம்சம்'
Updated on : 08 March 2020

லட்சுமி வாசந்தி புரொடக்ஷன் சார்பாக A.வெங்கட்ராவ் மற்றும் S பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பாக  சேலம் B.சேகர் ஆகிய இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் "அசுரவம்சம்".

2018 ம் ஆண்டு தெலுங்கில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற "நட்சத்திரம்" படத்தின் தமிழாக்கமே இந்த "அசுரவம்சம்"



 





இந்த படத்தில் சந்தீப் கிசன் கதாநாயகனாக நடித்துள்ளார், கதாநாயகியாக ரெஜினா கசான்ட்ரா நடித்துள்ளார். மற்றும் பிரகாஷ்ராஜ், ஸ்ரேயா சாய் தருண் தேஜ், பிரகயா ஆகியோர் நடித்துள்ளனர்.



 





ஒளிப்பதிவு  - ஸ்ரீகாந்த் நரோஜ், இசை - பிம்ஸ் சிசிரோலேயோ, பாடல்கள்  -  முருகானந்தம், வலங்கைமான் நூர்தீன், ஆவடி சே.வரலட்சுமி, சங்கர் நீதிமாணிக்கம், பழமொழி பாலன், எழிலன்பன், எடிட்டிங்  - சிவா Y பிரசாத், நடனம்  - ஸ்ரீதர்,

இயக்கம் - கிருஷ்ண வம்சி, வசனம் - A.R.K.ராஜராஜா.



 



 



 மிக அழுத்தமான கதை அம்சத்தோடு உள்ள ஒரு போலீஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு என்பவர்களுக்கு நல்ல விருந்தாக ஒரு போலீஸ் படம் தான் இந்த " அசுரவம்சம் " கான்ஸ்டபிள் மகனாக இருக்கும் சந்தீப் கிசனுக்கு  போலீஸ் ஆக வேண்டும் என்பது லட்சியம். அந்த லட்சியத்தை கமிஷ்னரின் மகன் ஒரு பிரச்சனையில் சிதறடித்து விடுகிறான். கனவு கலைந்தாலும் நிலைகுலையாத சந்தீப் கிசன்  காவல் அதிகாரியின் கெட்டப்போடு சமூகப் பிரச்சனைகளை மாஸாக கையாள்கிறான். ஒரு கட்டத்தில் சமூகத்தில் நடக்கும் மிக முக்கியமானப் பிரச்சனைக்கு ஹெட் ஆக கமிஷ்னர் மகனே இருப்பதைக் கண்டு வெகுண்டெழும் ஹீரோ, கமிஷ்னர் மகனை எப்படி டீல் செய்கிறான் என்பதும், அடுத்தடுத்து நடக்கும் எதிர்பாராத சம்பவங்களை ஹீரோ எதிர்கொள்கிறான் என்பதும் தான் இந்தப்படத்தின் பரபரப்பான  திரைக்கதையாக உருவாக்கப்பட்டுள்ளது.



 







 படத்தின் இன்னொரு எனர்ஜி பாயிண்டும் இருக்கிறது. இதே சமூக விரோதிகளின் கேஸை எடுத்து நடத்தி இறந்து போன காவல் அதிகாரி அலெக்சாண்டரின் ட்ரஸோடு ஹீரோ வேட்டையாடுவது படத்தின் அதகள ஏரியா என்கிறார்கள்.



 







 இந்தப்படத்தில் பாடல்கள் மிக முக்கியம் வாய்ந்ததாக இருக்கிறது. கவிஞர் சே வரலெட்சுமி  மிகச்சிறப்பான பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். கவிஞர் முருகானந்தம், கவிஞர் வலங்கைமான் முகதீன், பழமொழி பாலன், கவிஞர் சங்கர் நீதி மாணிக்கம், கவிஞர் எழிலன்பன் ஆகியோரும் தங்களின் பாடல் வரிகளால் படத்திற்கு பெரும்பலம் சேர்த்துள்ளார்கள்.



 





 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா