சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

பிளாக் ஷீப் தயாரிப்பு இன்று முதல் ஆரம்பம்
Updated on : 11 March 2020

பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து  இப்படம் தயாரிக்கப்படுகின்றது.



 





நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். 



 





இந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள்  புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது.



 





இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்ஜே விக்னேஷ்காந்த், சுட்டி அரவிந்த், அன்புதாசன் ஆகியோர் நடிக்கின்றனர். மேலும் பல முன்னணி கலைஞர்கள்  நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.



 





ஒளிப்பதிவு வாஞ்சிநாதன், இசை சந்தோஷ் தயாநிதி, கலை வினோத், படத்தொகுப்பு தமிழ், ஆடை வடிவமைப்பு தினேஷ் மனோகரன், தயாரிப்பு நிர்வாகம் அருண் ராஜா, நடனம் அசார், சண்டை காட்சிகள் பில்லா ஜெகன், மேனேஜர் துரை, பாடல்கள் மதுரை பாலா, அ.ப. ராஜா, மக்கள் தொடர்பு யுவராஜ்.



 





யூடியூப் உலகில் இருந்து பல நட்சத்திரங்கள் சினிமாவில் நடித்து கொண்டிருக்கும் இந்த காலகட்டத்தில் ஒரு யூடியூப் சேனல் சொந்தப் படத்தயாரிப்பில் இறங்கியிருப்பது அடுத்த தலைமுறை சினிமா வரவுகளுக்கு  நம்பிக்கை அளிக்கிறது.



 





அனைவராலும் வெகுவாக எதிர்பார்க்கப்படும் இத்திரைப்படம் ஜூன் மாதம் வெள்ளித்திரையில் வர உள்ளது.



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா