சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

மிஸ்கின் போட்ட நிபந்தனையால் விஷால் எடுத்த அதிரடி முடிவு
Updated on : 11 March 2020

“துப்பறிவாளன்2” படத்தின் இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை விதித்தார். அது இன்று இணையதளம் மற்றும் ஊடகங்களில் வெளியானது. அதற்கு விஷால் பதிலளித்துள்ளதாவது.





                   



ஒரு இயக்குநர் திரைப்படத்தை விட்டு பாதியில் விலகுவதற்கான காரணங்கள் என்னென்ன?







கனடா மற்றும் இங்கிலாந்தில் ஸ்கிரிப்ட் எழுத விரும்பிய ஒரு இயக்குனர், தயாரிப்பாளர்கள் பணத்தை 35 லட்சம் செலவழித்து, அதற்கும் மேலாக பயணம், தங்குமிடம் போன்ற செலவுகளையும் செய்து, சரியான படப்பிடிப்புத் தளத்தை தேர்வு செய்யாமல் ஷூட்டிங்கை நடத்தி, தயாரிப்பாளரின் பணத்தை 13 கோடி ரூபாய்க்கு பக்கம் செலவழித்த பின்னர்,  படத்தை விட்டு ஒரு இயக்குநர் விலகுவது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.



 





ஒரு இயக்குனர் ஒரு திரைப்படத்திலிருந்து விலகுவது ஏன்?







ஒரு தயாரிப்பாளராக, எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.







படத்தை முடிக்க என்னிடம் பணம் இல்லை என்பதாலா? இல்லை .







படத்தின் தயாரிப்பின்போது ஒரு இயக்குநரின் தவறுகளை ஒரு தயாரிப்பாளர்  சுட்டிக்காட்டினால் அது தவறா?  UK-வில் 3 முதல் 4 மணிநேர படப்பிடிப்புக்காக ஒரு நாளைக்கு 15 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டபோது, படத்தின் முன்னேற்றத்திற்காக சுட்டிக்காட்டிய விஷயங்களா? இல்லை.



 





ஒரு நாளைக்கு இரண்டு காட்சிகள் மட்டும் ஷூட் செய்வதற்கு பதில், செலவைக் குறைக்க, இரவு பகலாக ஷூட் செய்யலாமா என்று கேட்டால் அது தவறா? இல்லை.



 



 



நான் இன்னும் ஆச்சரியப்படுகிறேன், ஏனென்றால், நீங்கள் உங்கள் சொந்த குழந்தையை அனாதை இல்லத்தில் கைவிடுவது போல மோசமாக இருக்கிறது.









இப்படியான தவறான செயல்களுக்குப் பிறகு,   இப்படத்தில் நான் இல்லை என்று கூறிய பிறகு, டிசம்பர் 11, 2019 அன்று படப்பிடிப்பை நிறைவு செய்யாமல், ஜனவரி 4, 2020 அன்று இந்தியாவுக்குத் திரும்பி, 2020 பிப்ரவரி முதல்  வாரத்தில் VFF  அலுவலகத்திற்கு வருவது ஒரு இயக்குநருக்கு சரியானதா?



 







திரைப்படத் தயாரிப்பின் போது ஏற்படும் ஆர்வத்தையும், தயாரிப்பாளர் சந்திக்கும் கஷ்டங்களையும் இயக்குநர் அறிந்திருக்கிறாரா?



 







நான் இந்த அறிக்கையை வெளியிடுவதற்கான ஒரே காரணம் என்னவென்றால், புதுமுக தயாரிப்பாளரோ, அறிமுக தயாரிப்பாளரோ, எந்த தயாரிப்பாளராக இருந்தாலும் சரி, அவர்கள் ஷூட்டிங்கின்போது நான் பட்ட கஷ்டங்களையோ அல்லது ஒரு தயாரிப்பாளராக தற்போது நான் படும் கஷ்டங்களையோ அனுபவிக்க கூடாது என்பதற்காகத்தான்.



 







மிக முக்கியமாக, எந்தவொரு தயாரிப்பாளரும் இத்தகைய சோதனையை சந்திக்கக்கூடாது. நல்ல வேளையாக, திரைப்பட தயாரிப்பின் நுணுக்கங்களை அறிந்த பின்பு, இப்படத்தை கைவிட வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறேன். அதனால், முன்னோக்கி சென்று இப்படத்தை நானே இயக்கி, என்னுடைய சிறப்பான பணிகளைச் செய்து, படத்தை வெளியிட்டு, இப்படம் அனைவரின் எதிர்பார்ப்பையும் எட்டும் என்பதையும்  உறுதிசெய்கிறேன்.



 







இந்த அறிக்கையின் ஒரே நோக்கம், ஒருவரின் பெயரை கெடுப்பது அல்ல, ஆனால் இதுபோன்ற நபர்களுக்கு, வேறு எந்த தயாரிப்பாளர்களும் இரையாகாமல் இருப்பதை உறுதி செய்வது மட்டுமே. இது ஒரு பொதுக் கூக்குரலாக இருக்கலாம். ஆனால், அனைத்து தயாரிப்பாளர்களும் (புதிய மற்றும் பழைய தயாரிப்பாளர்கள்) விஷால் ஃபிலிம் ஃபேக்டரி (வி.எஃப்.எஃப்) போன்ற புகழ்பெற்ற தயாரிப்பு நிறுவனத்திற்கு 'துப்பறிவாளன்-2'  படப்பிடிப்பின்போது என்ன நடந்தது என்பதை அறிந்து கொள்வதற்காகவே என்று நினைக்கிறேன்.



 







இயக்குநராக அறிமுகமாக உங்கள் ஆசீர்வாதங்களையும் வாழ்த்துக்களையும் எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ஒரு இயக்குநராக சிறந்ததைச் செய்ய விரும்புகிறேன்.



இன்று மாலை 6மணிக்கு படத்தின் முதல் தோற்றத்தை  வெளியிடுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். God Bless!



- விஷால்  



 



துப்பறிவாளன்2 முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்தது. இரண்டாவது கட்ட படபிடிப்பு முன்னதாக , நடிகர், தயாரிப்பாளர் விஷால்-க்கு அப்படத்தின் டைரக்டர் மிஷ்கின் போட்ட திடீர் நிபந்தனை.



 



                    

துப்பறிவாளன் 2 படத்திற்கு இயக்குனர் தேவை



 





மேலே குறிப்பிட்டுள்ள விஷயங்களைத் தொடர பின்வரும் விதிமுறைகளை கவனத்தில் கொள்க.



 







1. சம்பளம் 5 கோடி ஜிஎஸ்டி உட்பட



 





2. ரீமேக் உரிமைகள் : இயக்குநருக்கு இந்தி ரீமேக் உரிமை மட்டுமே கிடைத்துள்ளது. தயாரிப்பாளருக்கு இதில் எவ்வித உரிமையும் கிடையாது. இயக்குநர் இந்தி திரைப்பட ரீமேக்கை எவருக்கும் விற்க முடியும், மேலும் தயாரிப்பாளருக்கு இதில் எந்த ஆட்சேபனையும் இருக்காது.



 





3. IPR : விஷால் ஒரு நடிகராகவும், விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியை தயாரிப்பாளராகவும் கொண்டுள்ள இப்படம் கடைசியாக இருக்கும் என்பதால், அனைத்து அறிவுசார் சொத்துரிமையில் தலைப்பு, படத்தின் தொடர்ச்சிகள் ( Sequels and Prequels ) மற்றும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும்  உள்ளடங்கியிருக்கும். ஆனால் கனியன் பூங்குன்றன் பெயருக்கு மட்டும் அல்ல.  மனோகரன் மற்றும் துப்பறிவாளன்- 1, துப்பறிவாளன்- 2 படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களின் பெயர்களும் இயக்குநருக்கு சொந்தமாகும். விஷால் பிலிம் ஃபேக்டரி, வி.எஃப்.எஃப்-இலிருந்து இயக்குநரின் பெயருக்கு தலைப்பை மாற்றியதற்காக தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் கவுன்சிலுக்கு  ஆட்சேபனை சான்றிதழை வழங்கும்.



 







4. தனித்துவமற்றது : இரண்டாம் கட்ட படப்பிடிப்பின் தொடக்கத்திலிருந்து 90 நாட்களுக்கு மேல் படப்பிடிப்பு நடைபெறாவிட்டால் இயக்குநர் மற்ற படங்களில் இணைந்து பணியாற்றலாம். எந்தவொரு காரணத்திற்காகவும், 90 நாட்களுக்குள் படப்பிடிப்பு முடிவடையவில்லை என்றால், இயக்குநர் மீண்டும் படப்பிடிப்பை தொடங்கும் வரை விஷால் ஃபிலிம் ஃபேக்டரி காத்திருக்க ஒப்புக் கொள்ள வேண்டும்.



 





5. அணுகுமுறை : தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகளுக்கு இயக்குநருடன் நேரடி அணுகல் இருக்காது. இயக்குநரின் மேலாளர் திரு. எல்.வி. ஸ்ரீகாந்த் லக்ஷ்மன் மட்டுமே இயக்குநரை தொடர்புகொள்ளவும் புள்ளியாக செயல்படுவார். விஷால் ஃபிலிம் ஃபேக்ட்ரியால் நியமிக்கப்பட்ட UK தயாரிப்பாளர் திரு. சர்மாட் மட்டுமே தயாரிப்பாளரை தொடர்பு கொள்ளும்  புள்ளியாக செயல்படுவார்.



 





6. மேற்கண்ட உட்பிரிவுகள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன் இயக்குநருக்கு கொடுக்கப்பட வேண்டிய பணம் இயக்குநரால் முடிவு செய்யப்படும்.



 





7. இயக்குநரின் ஊழியர்களுக்கான நிலுவைத் தொகைகள் அனைத்தும் (இங்கிலாந்தில் கார்களின் பயன்பாட்டை உட்பட) முன்பே தீர்க்கப்பட வேண்டும்.



 





8. படப்பிடிப்பு தளம் : படப்பிடிப்பு இடங்களை முடிவு செய்யும்  அனைத்து உரிமைகளும் இயக்குநரையே சாரும். தயாரிப்பாளர் அல்லது அவரது பிரதிநிதிகள் இதில் தலையிடக்கூடாது.



 





9. நிதி : படத்தின் பட்ஜெட்டில் இயக்குநருக்கு எந்தவிதமான தாங்கலும் இல்லை. ஆனால்,  செலவினங்களைக் குறைக்க இயக்குனர் சிறந்த முயற்சிகளை எடுக்கலாம்.

இருப்பினும், படத்தின் செலவுகளுக்கு இயக்குநர் எந்தவித வகையிலும் பொறுப்பேற்க மாட்டார்.



 





10. உதவி இயக்குநர், துணை இயக்குநர், இணை இயக்குநருக்கான சம்பளம் : தணிக்கை விண்ணப்பிக்கும் வரை ஒவ்வொரு மாதமும் இயக்குநரால் நிர்ணயிக்கப்பட்டபடி சம்பளம் கொடுக்கப்பட வேண்டும்.



 





11. தங்கும் விடுதி : இயக்குநர் மற்றும் இயக்குநரின் உதவியாளர்களுக்கு, இயக்குநரின் விருப்பத்திற்கு இணங்க தனி தங்குமிடம் வழங்கப்படும். மற்ற படக்குழுவினர்களுடன் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.



 





12. அலுவலக வாடகை : 66,000 ரூபாய் அலுவலக வாடகை மற்றும் 5,000 ரூபாய் பராமரிப்பு தொகை தயாரிப்பாளர்களால் செலுத்தப்படும். டி.டி.எஸ் சான்றிதழ், கழிக்கப்பட்டால், தணிக்கைக்கு முன் வழங்கப்படும். அலுவலக வாடகைக்கு மேல் கூடுதலாக, மின்சார செலவு, உணவு செலவுகள் மற்றும் பிற தற்செயலான அலுவலக செலவுகள் போன்றவை திட்டப்பணி தொடங்கப்பட்ட நாளிலிருந்து நகல் ஒப்படைக்கப்படும் வரை தயாரிப்பாளரால் ஏற்கப்படும்.



 





13. தகவல் தொடர்பு : படத்தை பற்றிய அனைத்து தகவல்தொடர்புகளும் மின்னஞ்சல் மூலமாக மட்டுமே இருக்கும்.



 





14. இடையூறு : இயக்குநர் தனது படைப்பு சுதந்திரம், ஆக்கபூர்வமான முடிவெடுக்கும் முறைமை ஆகியவற்றுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலோ அல்லது இயக்குநர் மற்றும் அவரது ஊழியர்கள் அவமதிக்கப்படுதல்,  துஷ்பிரயோகம் செய்யப்படுதல், அச்சுறுத்தப்படுதல், மோசமாக நடத்தப்படுதல், மேலும், இயக்குநரின் உளவியலுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் ஏதேனும் சம்பவம் நடந்ததேயானால் இயக்குநரும் அவரது குழுவினரும் இப்படத்திலிருந்து வெளியேற முழு உரிமை உண்டு.



 





15. மேற்சொன்ன விவரங்கள் ஒப்புக் கொள்ளப்பட்டவுடன், அதன் சாராம்சம்,  முறையான ஒப்பந்தத்தில் சுருக்கமாக எழுதப்பட்டு, இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் இடையில் கையெழுத்திடப்படும்.



மேற்கூறிய விஷயத்தில் ஏதாவது ஒன்றை தயாரிப்பாளர் ஒப்புக்கொள்ளவில்லை என்றாலும், துப்பறிவாளன்- 2 படத்தை பொறுத்தவரை, விஷால் ஃபிலிம் ஃபேக்டரிக்கு செய்யும் வேலைகளை இயக்குநர் நிறுத்தலாம்.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா