சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

ஆரா அசத்த வருகிறார் 'ஒன் வே' யில்
Updated on : 13 March 2020

நடிகைகள் ஒன்று மாடர்னாக இருப்பார்கள், இல்லையேல் குடும்ப பாணி கலாச்சார பாவனையோடு இருப்பார்கள். இரண்டு விதமும் கலந்த மாதிரி ஒரு சில நடிகைகளே இருப்பார்கள். அப்படியானவர்களுக்கு ரசிகர்களிடம்  எப்போதும் ஒரு தனித்த வரவேற்பு உண்டு.  சினிமாவிலும் அவர்கள் மிகப்பெரிய இடத்தை அடைவார்கள். அந்த வகையில் இரண்டு வித தோற்றங்களிலும் கலக்கும் நடிகையாக ஆரா இருக்கிறார். நளினமும்,  நடிப்பும் அவருக்கு எளிமையாக வருகிறது. முதல் படமான “பைசா” படத்திலேயே பேரழகு தோற்றத்திலும், அசரடிக்கும் பாவனைகளாலும், நல்ல நடிகை என பெயர் பெயர்  பெற்று விட்டார். வந்தவேகத்தில் நிறைய படங்களில் நடிக்காமல், தான் நடிக்கும் படங்களை வெகு கவனமுடன் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.  அவர் நடிப்பில் “ஒன் வே” மற்றும் “குழலி” என இரண்டு தரமான படங்களாக  தயாராகி வருகிறது. 



 





“ஒன் வே”  படம் குறித்து நடிகை ஆரா பகிர்ந்துகொண்டதாவது....



 





நடிகையாக  எனது பயணத்தை தொடங்கிய போதே நல்ல தரமான,  அழுத்தமான கதையுள்ள, படங்களில்  கனமான கதாப்பாத்திரங்களில் தான் நடிக்க வேண்டுமென தீர்மானித்தேன். நேர்த்திமிகுந்த, சவாலான கதாப்பாத்திரங்களுக்கு நான் எப்போதும் தயார். நான் நினத்த மாதிரியான கதையமைப்பு கூடிய “ஒன் வே” படத்தில் நடிப்பது மிகுந்த மகிழ்ச்சி. நான் இப்படத்தில் முதன்மை கதாப்பாத்திரத்தின் தங்கையாக, கோவை சரளா மேடமுடைய மகளாக நடிக்கிறேன். கோவை சரளா மேடமுடன் இப்படத்தில் நடித்தது மறக்க முடியாத மகிழ்ச்சியான அனுபவம்.  பல்வேறு ஆண்டுகளாக நூற்றுக்கணக்கான படங்களில், நம் மனங்களை கொள்ளை கொண்ட நடிப்பை தந்தவர் கோவை சரளா மேடம். இவ்வளவு பெரிய ஆளுமையாக இருந்தும், அவர் என்னிடம் வெகு இயல்பாக,  எளிமையாக பழகினார். அவருடன் நடித்த தருணங்கள் எப்போதும் வாழ்வின் இனிமையான மறக்க முடியாத தருணங்களாக இருக்கும். “ஒன் வே” திரைப்படம் இப்படத்தில் பங்கு கொண்ட அனைவருக்கும் மிக முக்கியமான படமாக இருக்கும். என்றார்.



 







ராஜாத்தி பாண்டியன் அவர்கள் தயாரிக்கும் இப்படத்தை இயக்குநர் M S சக்திவேல் இயக்குகிறார். தன் முதல் படைப்பான “மைதானம்”  மூலமாக விமர்சகர்களின் ஒட்டுமொத்த கவனத்தையும்  ஈர்த்தவர் என்பது குறிப்பிடதக்கது. இப்படத்தில் நடிகர் பிரபஞ்சன் முன்ணனி பாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார்.  ஆரா அவருக்கு சகோதரியாக நடிக்கிறார். “கோலமாவு கோகிலா” பட வில்லன் வினோத் இதில் எதிர்மறையான பாத்திரத்தில் நடிக்கிறார். கோவை சரளா மிக முக்கியமான வேடமேற்றுள்ளார். மேலும் ஜோக்கர் பாவா செல்லதுரை, கன்னத்தில் முத்தமிட்டால் ஹஷி குமார், கடாரம் கொண்டான் ரவீந்த்ரா, திவ்யங்கனா ஜெயின், அப்துல்லா, தோனி, சுர்ஜித், துப்பறிவாளன் பில்லி மற்றும் கிரிஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் தேசிய விருது பெற்ற பெங்காலி சினிமாவில் புகழ்பெற்ற பருன் சந்தா, கௌதம் ஹால்டர் மிக முக்கியமான வேடங்களில் நடித்துள்ளார்கள். 



 





 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா