சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் முதலிரவு நிகழ்வுகளை இயக்கப்போகும் ஸ்ரீஜர்
Updated on : 13 March 2020

லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ் சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் தயாரிப்பில், இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா நடிக்கும் புதிய படம்.



 





லிப்ரா புரொடக்ஷன்ஸ் சார்பாக 'நட்புன்னா என்னான்னு தெரியுமா' உள்ளிட்ட வெற்றிப் படங்களைத் தயாரித்த ரவீந்தர் சந்திரசேகர், ஃபர்ஸ்ட் மேன் பிலிம் ஒர்க்ஸ்' சிவசுப்பிரமணியன், சரவணபிரியன் ஆகியோருடன் இணைந்து, கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா ஆகியோர் நடிப்பில் இயக்குனர் ஸ்ரீஜர் இயக்கத்தில் ஒரு புதிய படத்தை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாகத் தயாரிக்கிறார். இப்படத்தின் துவக்கவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது.



 



 





தென்னிந்திய மொழிகளில் தொலைக்காட்சி தொடர்கள் இயக்கிய அனுபவத்துடன், மலையாளத்தில்  'லாவெண்டர்', தமிழில் 'ஜாம்பவான்'  உள்ளிட்ட படங்களில் இணை - துணை இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீஜர் இப்படத்தை கதை, திரைகதை, வசனம் எழுதி இயக்குகிறார்.



 





பல்வேறு கலாட்டா கல்யாண திரைப்படங்களைப் பார்த்திருந்த நமக்கு, ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படமாக உருவாகவிருக்கும் இப்படம், புதுமணத் தம்பதிகளின் முதல் இரவில் நடைபெறும் முக்கிய பாரம்பரிய நிகழ்வுகளையும், சாங்கித்யங்களையும் நகைச்சுவை மாறாமல், சற்றும் விரசம் இல்லாமல் சுவராஸ்யமாக காட்சிப்படுத்த இருக்கிறது.



 







இப்படத்தில் கே. பாக்கியராஜ், சாந்தனு, அதுல்யா, மனோபாலா, ஆனந்த்ராஜ், மயில்சாமி, மொட்ட ராஜேந்திரன் ஆகியோருடன் ஒரு முக்கிய வேடத்தில் யோகி பாபு நடிக்க, பிராங்க் ராகுல், ராஜு, அதுல்யா, ரேஷ்மா, மதுமிதா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



 







ரமேஷ் சக்கரவர்த்தி ஒளிப்பதிவில், ஜோமின் மேத்யூ படத்தொகுப்பை கவனிக்க, கலைக்கு நர்மதா வேணி பொறுப்பேற்று இருக்கிறார்.



 







தரண் இசையமைக்க, சதீஷ் கிருஷ்ணன் நடன அசைவுகளுக்கு பொறுப்பேற்க, அதிரடி காட்சி அமைப்புகளை நூர் கவனிக்கிறார்.



 







G அசோகன் இணை தயாரிப்பில், தயாரிப்பு மேற்பார்வை R K மனோகர் வசமும் நிர்வாக தயாரிப்பு K ஸ்ரீகாந்த் வசமும் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.



 





 





 









 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா