சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கேவலமா திட்டினவங்களையும் சிந்திக்க வைக்கும் புதிய முயற்சியில் போஸ் வெங்கட்!
Updated on : 15 March 2020

விமர்சனரீதியாக அனைவரின் வெகுவான பாராட்டுகளையும் வென்ற வெற்றிப்படமான ‘கன்னிமாடம்’ திரைப்படத்தை தொடர்ந்து, இயக்குனர் போஸ் வெங்கட், மூவ் ஆன் பிலிம்ஸ்’ சார்பாக எம் பி மகேந்திரன், பி பாலகுமார் தயாரிப்பில், ‘உரியடி’ விஜயகுமார், பசுபதி நடிப்பில் ஒரு புதிய படம் உருவாக்கிக்கொண்டிருக்கிறார். 



 



 . 



இப்படம், ‘நீரின்றி அமையாது உலகு’ என்ற முதுமொழிக்கேற்ப, இன்று மூன்றாம் உலகப்போர் வருமேயானால் அது நீருக்காகவே இருக்கும் என்ற கணிப்புகளைப் புறந்தள்ளி, நீருக்கும் ஊருக்கும் போருக்கும் உள்ள தொடர்புகளை, சமுதாய கண்ணோட்டத்தோடு, நகைச்சுவையும், சுவராஸ்யமும் கலந்து உறவுகளோடும், உணர்வுகளோடும் பிணைந்த ஒரு ஜனரஞ்சகமான கதைகளத்தைக் கொண்டிருக்கிறது.



 



 



‘நான் மகான் அல்ல’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘வெண்ணிலா கபடி குழு’ ஆகிய படங்களுக்கு கதாசிரியராக அனைவரின் கவனத்தையும் ஈர்த்த பாஸ்கர் சக்தி, இப்படத்திற்கு திரைகதை-வசனம் எழுதுகிறார்.   



 



 



இனியன் ஜே ஹாரிஸ் ஒளிப்பதிவில், ஜியான் ஸ்ரீகாந்த் படத்தொகுப்பில், ஹரி சாய் இசையமைக்க, பாடல்களை விவேகா எழுதுகிறார். கலைக்கு சிவசங்கர் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை தினேஷ் சுப்பாராயன் அமைக்கிறார். 



 



 



மூவ் ஆன் பிலிம்ஸ்’ தயாரிப்பில், ‘கன்னிமாடம்’ போஸ் வெங்கட் கதை எழுதி இயக்கும் இந்த புதிய படத்தின் நட்சத்திரங்கள் மற்றும் தொழிட்நுட்ப கலைஞர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 



 





 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா