சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

தனுஷ் சின்ன காக்கா முட்டை - செல்வராகவன் பெரிய காக்கா முட்டை
Updated on : 16 April 2015

தனுஷ் மற்றும் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளிவர இருக்கும்  திரைப்படம் காக்கா  முட்டை. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா சமிபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட தனுஷ் தன்னை சின்ன காக்கா முட்டை என்றும் செல்வராகவனை பெரிய காக்கா முட்டை என்றும் கூறியுள்ளார் ஏனென்றால் இந்த கதையில் வரும் இரண்டு சிறுவர்களின் கதாபாத்திரங்களும் தானும் செல்வராகவனும் சிறுவயதில் செய்த குறும்புகள் மற்றும் செயல்பாடுகளை வைத்து எடுத்தது போல இருந்ததாகவும் தெரிவித்துள்ளார் ஆகவேதான் அதை மனதில் வைத்து தனுஷ் தன்னை சின்ன காக்கா முட்டை என்றும் செல்வராகவனை பெரிய காக்கா முட்டை என்றும் கூறியுள்ளார். மேலும் இப்படத்தில் நடித்துள்ள இரண்டு சிறுவர்களை பற்றி மிகவும் பெருமையாக கூறியுள்ளார். இவர்களை போல தானும் நடித்தால் தன்னை ஒரு நல்ல நடிகன் என்று தான் ஒத்துக்கொள்வதாக கூறியுள்ளார். அந்த அளவுக்கு சிறுவர்கள் யதார்த்தமாக காமரா இல்லாதது போல் நடித்துள்ளதாக பெருமையுடன் கூறியுள்ளார். இந்த படத்தில் நடித்ததற்காக இரண்டு சிறுவர்களுக்கும் சிறந்த குழந்தை நட்சத்திரம் விருது கிடைத்துள்ளதாகவும் கூறினார். மேலும் இந்த படத்திற்கு 62வது தேசிய விருது பெற்றுள்ளதாகவும் மேலும் இந்த படம் வெளிவருவதற்கு முன்பாகவே இதற்காக தான் போட்ட முதலீடை சேட்டிலைட் ரைட்ஸ் மூலம் சம்பாதித்து விட்டதாகவும் மேலும் இந்த படம் திரையில் வெளிவந்து ஒரு ரூபாய் வந்தாலும் அது எனக்கு லாபம் தான் என்றும் கூறினார் . இந்த படத்தை எம் மணிகண்டன் எழுதி இயக்கி ஒளிபதிவும் செய்துள்ளார். இந்த படத்தின் கதைசுருக்கதை வெற்றிமாறன் தனுஷுக்கு அனுப்பியுள்ளார் அக்கதைசுருக்கத்தின் முதல் பத்து பக்கங்களை படித்த உடனே தனுஷ் இந்த படத்தை தயாரிக்க ஒத்துக்கொண்டதாகவும் தனுஷ் கூறியுள்ளார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா