சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

அதர்வா முரளிக்கு வில்லனாகும் நந்தா
Updated on : 19 March 2020

வெகு சில நடிகர்களே எந்த மாதிரியான கதாப்பாத்திரம் செய்தாலும் ரசிகர்களை திரையோடு கட்டிப்போடும் திறமை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். அந்த வகையில் க்யூட் அப்பாவி  இளைஞனாக இருக்கட்டும், அல்லது சாந்தமான சைக்கோ கொலையாளியாக இருக்கட்டும் தான் ஏற்கும் பாத்திரங்களில், அப்படியே ஒட்டிக்கொண்டு, கதாப்பத்திரமாக மாறிவிடும் தன்மை கொண்டவர் நடிகர் நந்தா. சமீபத்தில் வெளியான இயக்குநர் மணிரத்னத்தின் தயாரிப்பான “ “வானம் கொட்டட்டும்“ படத்தில் இரட்டை வேடத்தில் அனைவரையும் கவரும் நடிப்பை தந்திருந்தார். தற்போது அதர்வா முரளி நடிப்பில் உருவாகும் போலீஸ் திரில்லர் படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார்.



 





இது குறித்து இயக்குநர் ரவீந்தர மாதவ் கூறியதாவது...



 





இப்படம்  துவங்கப்பட்டபோதே படத்தில் இருக்கும் கனாமான வில்லன் கதாப்பாத்திரம் குறித்து கூறியிருந்தேன். திரையில் அந்த கதாப்பாத்திரத்தினை உயிர்பிக்க திறமை வாய்ந்த ஒருவர் தேவைப்பட்டார். மிகச்சரியான ஒருவரை தேடுவதென்பது மிக நீண்ட பயணமாக இருந்தது. இறுதியாக அசாத்திய திறமை கொண்ட நடிகர் நந்தா எங்களுடன் இப்படத்தில் இணைந்திருக்கிறார். அனைவரையும் கவர்ந்திழுக்கும் முக அமைப்பு கொண்ட அவர் நடிப்பிலும் சிறந்து விளங்குபவராக இருக்கிறார். எந்த ஒரு பாத்திரம் ஆனாலும் எளிதில் அந்த பாத்திரமாக மாறிவிடும் திறமை அவருக்கு இருக்கிறது. மேலும் இப்படத்தின் வில்லன் கதாப்பாத்திரம் வெறும் உடல் வலிமை மட்டும் கொண்டு செயல்படுபவன் அல்ல, மகா புத்திசாலித்தனமாக செயல்படுபவன். நடிகர் நந்தா ஏற்கனவே இந்த இரு தளங்களிலும் தன்னை நிரூபித்தவர். மகச்சிறந்த நடிகர்கள் குழுமம் படத்தில் இணைந்திருக்கிறது. அவர்கள் அனைவருடனும் இணைந்து பணிபுரிய வெகு ஆவலுடன் காத்திருக்கிறோம். கொரோனா வைரஸ் பாதிப்புகள் முடிந்த பிறகு படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது என்றார்.



 





தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அறிமுக இயக்குநர் ரவீந்திர மாதவா இயக்குகிறார். புகழ்மிகு இயக்குநர்களான பூபதி பாண்டியன், சுசீந்திரன், கொரட்டால சிவா ஆகியோரிடம் பணியாற்றியவர் இவர். இப்படத்தில் அதர்வா முரளி நாயகனாக நடிக்க, லாவண்யா திரிபாதி நாயகியாக நடிக்கிறார்,  நந்தா வில்லன் பாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் சில  முக்கிய  நடிகர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்கிறார். படத்தொகுப்பை  கலை  செய்ய, சரவணன் சண்டை பயிற்சி இயக்கம் செய்கிறார். கலை இயக்குநராக ஐயப்பன் பணியாற்றுகிறார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா