சற்று முன்

நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |    வட இந்திய மாநிலங்களிலும் ரசிகர்களால் கொண்டாடப்படும் தங்கலான்!   |    'கடைசி உலகப்போர்' மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பு   |    சம்யுக்தா பிறந்தநாளில் ‘சுயம்பு’ வில் அவரது கேரக்டர் லுக்கை வெளியிட்ட படக்குழு!   |    'கோட்' படத்தை வெளியிட்ட ரோமியோ பிக்சர்ஸ் விரைவில் 'சார்' படத்தை தமிழகமெங்கும் வெளியிடுகிறது   |    நடிகர் ராணாவுடன் துல்கர் சல்மான் இணைந்து தயாரிக்கும் 'காந்தா' பட படப்பிடிப்பு தொடங்கியது!   |    'ரகுதாத்தா' ZEE5 இல் 13 செப்டம்பர் 2024 அன்று உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படுகிறது!   |   

சினிமா செய்திகள்

நடிப்பின் ஆழத்தை கற்றுக் கொடுத்தவர் இளையதளபதி விஜய்
Updated on : 28 April 2016

தமிழ் சினிமாவில் துணை நடிகராகவும், உதவி இயக்குநராகவும் இதுவரை பயணித்தவர் ஸ்ரீனி.



 



இவர், வெண்ணிலா கபடி குழு  திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். அதனை தொடர்ந்து மதராசப்பட்டினம்,  வேலூர் மாவட்டம்,  தாண்டவம் மற்றும் தலைவா  திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



மேலும், P வாசு, ஜான் மகேந்திரன் ஆகியோரிடம் உதவி இயக்குநராகவும் இவர் பணியாற்றியுள்ளார்.



 



இப்போது களம்  திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக தடம் பதிக்கும் ஸ்ரீனி, தனது திரைத்துறை அனுபவங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.



 



அதில் இளைய தளபதி விஜய் குறித்து ஸ்ரீனி தெரிவித்துள்ள கருத்துகள் கவனிக்க செய்கிறது. "ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் கண்டிப்பாக ஒரு கட்டத்தில் யூ டர்ன் ஏற்படும். அப்படி என்னுடைய வாழ்க்கையில் எனக்கு மிகப்பெரிய திருப்பு முனையாக அமைந்தது தலைவா  திரைப்படம்.



 



நடிப்பு என்னும் வார்த்தைக்கு முழு அர்த்தத்தை எனக்கு கற்று கொடுத்தது இளையதளபதி விஜய் சார் தான்.நான் சிறு வயதில் இருந்தே அவருக்கு தீவிர ரசிகன். தலைவா படப்பிடிப்பில் அவரை நெருக்கத்தில் பார்த்த பிறகுதான் அவர் இந்த உச்சத்துக்கு வர  காரணம் என்ன என்பதை உணர்ந்துக் கொண்டேன். எந்த வேலை செய்தாலும் அதில் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்பதின் பாலப் பாடத்தை கற்றுக் கொண்ட தருணம் இது.



 



விஜய்  சார்  பயின்ற லயோலா கல்லூரியில் தான் நானும் படித்தேன் என்பதையே பெருமையாக சொல்லி திரிந்த நான், அவருடன் நடிக்கும் பொது எப்படி பெருமை பட்டு இருப்பேன் தெரியுமா.  நல்ல நடிகன்  என்று பெயர் வாங்கி அவருக்கு பெருமை சேர்ப்பேன் " என்று நெஞ்சம் நெகிழ்ந்து கூறுகிறார் ஸ்ரீனி.



 



சினிமா குறித்தும் நடிப்பு குறித்தும் இந்த அளவிற்கு கற்றுக்கொண்டிருக்கும் ஸ்ரீனி நடிக்கும் களம் திரைப்படம், வெற்றியடையும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா