சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |   

சினிமா செய்திகள்

நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!
Updated on : 26 November 2025

மும்பை, 26 நவம்பர், 2025: நிஜ உலகின் யதார்த்தம் பெரும்பாலும் புனைகதைகளை விட அந்நியமாக இருக்கும். அந்தவகையில்,  குற்ற உணர்வு மற்றும் அப்பாவித்தனம் பற்றி உங்களுக்குத் தெரியும் என்று நீங்கள் நினைக்கும் அனைத்தையும் ஸ்டீபன் கேள்வி கேட்கத் துணிகிறார். வெளியாக இருக்கும் தமிழ் உளவியல் த்ரில்லர் கதையான 'ஸ்டீபன்' டிரெய்லரை நெட்ஃபிலிக்ஸ் இன்று வெளியிட்டது. ஒரு மனிதன் ஒரு காவல் நிலையத்திற்குள் நுழைந்து கொலை செய்ததாக ஒப்புக்கொள்வதில்  இருந்து டிரைய்லர் தொடங்குகிறது. நீங்கள் எதை யூகிக்கிறீர்களோ நிச்சயம் அது கதையில் பிரதிபலிக்காது. கதையின் தீவிரத்தை இசை மேலும் அதிகமாக்கும். 



 



அறிமுக இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கத்தில், கோமதி ஷங்கர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'ஸ்டீபன்' கதை குற்ற உணர்வு, ஒழுக்கம், சரி மற்றும் தவறுக்கு இடையிலான மெல்லிய இடைவெளியை ஆராயும் த்ரில்லர் கதை. இந்த ஆண்டு நெட்ஃபிலிக்ஸின்  துணிச்சலான, மாறுபட்ட இந்திய கதைகள் பட்டியலில் இந்தப் படமும் இணைகிறது. 



 



முதன்மை கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி கோமதி ஷங்கர் பகிர்ந்து கொண்டதாவது,



"என்னுடைய முதல் படம் இதைவிட சிறப்பானதாக அமைய முடியாது! ஸ்டீபன் வழக்கமான கதாநாயகன் கிடையாது. பல அடுக்குகள் கொண்ட, கணிக்க முடியாத, உங்களை யோசிக்க வைக்கும் ஒரு கதாபாத்திரம். இந்த கதாபாத்திரத்தில் நடித்தது சவாலானதாகவும், மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் இருந்தது. படத்தின் கதையை இணைந்து எழுதியிருப்பதால் அந்த கதாபாத்திரமாக மாறுவது இன்னும் கொஞ்சம் எளிதாக இருந்தது. இந்த கடினமான கதாபாத்திரத்தை என்னை நம்பி கொடுத்த இயக்குநர் மிதுனுக்கும் உலகப் பார்வையாளர்கள் மத்தியில் என்னுடைய திறமையை காட்டுவதற்கு களம் அமைத்து கொடுத்த நெட்ஃபிலிக்ஸ் தளத்திற்கும் நன்றி. என்னுடைய பயணம் நெட்ஃபிலிக்ஸின் 'ஸ்டீபன்' படத்துடன் தொடங்குவது மகிழ்ச்சியாக உள்ளது" என்றார். 



 



இயக்குநர் மிதுன் பாலாஜி பகிர்ந்து கொண்டதாவது,



"'ஸ்டீபன்' ஒரு அமைதியான படம். ஆனால், அது குற்றவுணர்ச்சி, நினைவுகள் என பல விஷயங்களை உங்களிடம் பேசும். இந்த கதையை சொல்வது எனக்கு மிகவும் பர்சனல் ஆனால் ரிஸ்க் நிறைந்தது. இதுவே, இந்தக் கதையை சொல்ல என்னைத் தூண்டியது. இந்தக் கதையை நாங்கள் எப்படி கொண்டு வர வேண்டும் என்று நினைத்தோமோ அதற்கேற்றவாறு கோமதி தன் நடிப்பால் உயிர் கொடுத்திருக்கிறார். அறிமுக இயக்குநரான என்னை நம்பி வாய்ப்பு கொடுத்து இந்த த்ரில்லர் கதையை உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களுக்கு கொண்டு சேர்க்க உதவிய நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்திற்கு நன்றி" என்றார். 



 



குற்ற உணர்வுக்கும் அப்பாவித்தனத்திற்கும் இடையிலான இடைவெளி மங்கலாகி, நினைவுகள் மிகவும் மோசமான ஒன்றாகத் திரும்பும்போது கதை எப்படி பயணிக்கிறது என்பதுதான் 'ஸ்டீபன்'.  படத்தில் உள்ள அனைத்தையும் கேள்வி கேட்கத் தயாராகுங்கள்! டிசம்பர் 5 ஆம் தேதி நெட்ஃபிலிக்ஸில் மட்டுமே ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா