சற்று முன்

மீண்டும் இணையும் '96' பட புகழ் ஆதித்யா பாஸ்கர் - கௌரி கிஷன்   |    45 நாட்களில் நிறைவடைந்த 'கிராண்ட் பாதர்' ஃபேண்டஸி எண்டர்டெயினர்!   |    இந்திய திரைத்துறையின் முழுமையான தேவைகளை ஒரே இடத்தில் பூர்த்தி செய்யும் புதிய தளம் அறிமுகம்!   |    அர்ஜுன் தாஸ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கும் புதிய படம், இனிதே துவங்கியது!   |    இந்தப்படத்திற்குள் போன பிறகு தான், எம் ஜி ஆரின் விஸ்வரூபம் புரிந்தது - நடிகர் கார்த்தி   |    அசத்தலான 'மொய் விருந்து' பட டைட்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |    ZEE5 வழங்கும் விஞ்ஞானமும் உணர்வுகளும் கலந்த சயின்ஸ் பிக்சன் ரொமான்ஸ் டிராமா!   |    பூஜையுடன் தொடங்கிய ‘சூர்யா 47'   |    மீண்டும் திரைக்கு வரும் ரஜினிகாந்தின் பிரம்மாண்ட பிளாக்பஸ்டர்!   |    முதல் முறையாக படத்தின் ஐந்து பாடல்களையும் பாடியுள்ள இசைப்புயல் ஏ. ஆர். ரஹ்மான்!   |    20 கோடி ரூபாய்க்கும் மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள 'நாகபந்தம்' கிளைமேக்ஸ்   |    ’அகண்டா 2’ நம் இனத்திற்கும் கலாச்சாரத்திற்குமான வெற்றி - நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா   |    சென்னையில் கிறிஸ்தவர்கள் நடத்தும் மிகப்பெரிய வரலாற்று சிறப்பு மிக்க உச்சி மாநாடு!   |    மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை JioStar Leadership குழுவினர் சந்தித்தனர்!   |    மாயபிம்பம்‌ படத்தின் போஸ்டரை இயக்குநர் சுந்தர் சி வெளியிட்டு படக்குழுவினரை பாராட்டினார்.   |    எம் ஜி ஆரின் புகழ்பெற்ற பாடலை வைரலாக்கிய சந்தோஷ் நாராயணன்!   |    அம்மா மீது வைக்கப்படும் ப்ராமிஸ் மிக மதிப்புள்ளது! - இயக்குநர் அருண்குமார் சேகரன்   |    'சிறை' பட சேட்டிலைட் & ஒடிடி உரிமைகளை Zee நிறுவனம் கைப்பற்றியுள்ளது!   |    ஸ்டண்ட் டைரக்டர் ஷாம் கௌஷல் மேற்பார்வையில் உருவாகிவரும் ‘பெத்தி’ பட ஆக்சன் காட்சிகள்!   |    துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!   |   

சினிமா செய்திகள்

துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான 'ஐ அம் கேம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!
Updated on : 29 November 2025

முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. துல்கர் சல்மானும், ஜோம் வர்கீஸும் (Jom Varghese) Wayfarer Films  சார்பில்  பெரும் பொருட்செலவில் தயாரிக்கும்  இப்படத்தை, நஹாஸ் ஹிதாயத் (Nahas Hidayath) இயக்குகிறார்.  



 



இந்தப் படத்தின் கதையை சஜீர் பாபா (Sajeer Baba) , இஸ்மாயில் அபூபக்கர் (Ismail Aboobacker), பிலால் மொய்து (Bilal Moidu ) எழுத, வசனங்களை – ஆதர்ஷ் சுகுமாரன் (Adarsh Sukumaran) , ஷஹபாஸ் ரசீத் (Shahabas Rasheed) ஆகியோர் எழுதியுள்ளனர் 



 



‘RDX’ படத்தின் ப்ளாக்பஸ்டர் ஹிட்டுக்குப் பிறகு இயக்குநர் நஹாஸ் ஹிதாயத்தின் அடுத்த முயற்சியாக உருவாகும் இந்த படத்துக்கான மற்ற நடிகர்களின் போஸ்டர்கள் முன்பே வெளியிடப்பட்டிருந்தன. இப்போது துல்கர் சல்மானின் ஃபர்ஸ்ட் லுக்  வெளியாகியிருப்பது, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டில்  மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படங்களில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது. 



 



பெரும் பட்ஜெட்டில் உருவாகும் இந்த அதிரடி திரில்லர்  திரைப்படத்தின் படப்பிடிப்பு, தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. இப்படம் துல்கர் சல்மானின் 40வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆண்டனி வர்கீஸ், தமிழின் முன்னணி இயக்குநர்  மிஷ்கின், கதிர், பார்த் திவாரி  மற்றும் தமிழ் நடிகை சம்யுக்தா விஸ்வநாதன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.



 



இந்தப் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை, கபாலி, KGF, கைதி, விக்ரம், லியோ, சலார் போன்ற பான்–இந்தியா படங்களில் பணியாற்றிய அன்பறிவு மாஸ்டர்ஸ் வடிவமைக்கின்றனர். ‘RDX’ படத்தின் பிரமாண்டமான ஆக்சன் வெற்றிக்கு பிறகு, நஹாஸ் மற்றும் அன்பறிவு கூட்டணி மீண்டும் இணைந்து பணியாற்றுவதால் இந்தப் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு  ஏற்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா