சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

மூன்று சமூக கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கிய 'முற்றுப்புள்ளி'
Updated on : 04 February 2021

இசையமைப்பாளர் கிறிஸ்டி சினிமா தாகத்தோடு ஒரு திருப்புமுனை வாய்ப்புக்காக காத்துக் கொண்டிருப்பவர். சென்னை கிறித்தவக் கல்லூரியில் படித்த அவர் கர்நாடக இசை, இந்துஸ்தானி, மேற்கத்திய இசை என்று மூன்று வகை இசையிலும் பயிற்சி பெற்றுக் கற்று 15 ஆண்டுகள் செலவழித்துத் தன்னைத் தகுதியாக்கிக் கொண்டு களத்திற்கு வந்திருப்பவர்.



 



அவர் இப்போது 'நறுவி',' வன்முறைப்பகுதி'  'குண்டு ஒண்ணு வச்சிருக்கேன் ' என மூன்று படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இவை விரைவில் வெளியாக உள்ளன.படங்கள் வெளியாகும் இடைவெளியில் நேரத்தை விரயமாக்காமல் தானே ஒரு கதை எழுதி ஒரு ஐந்து நிமிட மியூசிக் வீடியோ ஆல்பத்தை உருவாக்கி இருக்கிறார். அதுதான் 'முற்றுப்புள்ளி ' ' சமூக அக்கறையுடன் ஒரு படைப்பு,...கிறிஸ்டிக்கு இசையோடு கதை அமைப்பதிலும் ஆர்வம் உண்டு. அப்படி அவர் சமூகத்தில் இன்றைக்குப் பரவலாக அறியப்படும் பிரச்சினைகளான குழந்தையின்மை,கந்துவட்டிக் கொடுமை,குழந்தைகள் தத்தெடுப்பது என மூன்று கருத்துக்களை மையமாக வைத்து உருவாக்கி இந்தச் சமூகப் பிரச்சினைகளுக்கு ஒரு முடிவெடுத்து முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் உருவாக்கியதுதான் 'முற்றுப்புள்ளி 'வீடியோ சிங்கிள் ஆல்பம்.



 





 



இது ஒரு பைபிள் சார்ந்த கிறிஸ்தவக் கருத்தைக் கூறும் கதை என்றாலும் அனைத்து மதத்தினருக்கும் ஒரு சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த ஆல்பம் இருக்கும் என்கிறார்.  முற்றுப்புள்ளி ஆல்பத்தை ஒளிப்பதிவு செய்து டைரக்ஷன் செய்திருப்பவர் அரவிந்த் ஜெகன்.



 



கேத்தரின் எபிநேசர், பிரணிதி பாடியுள்ளனர்.



 



இந்த ஆல்பத்தில் நடிகர் மாஸ் ரவி,பவுலின் ஜெசிகா , பிரணிதி, பிரியா,மகேஸ்வரன், தண்டபாணி , லவீன் சேகர் , சிஸ்டர் ரான்சம் மற்றும் பலர் நடித்துள்ளனர். பாடல் பாபு, ஒளிப்பதிவு ,எடிட்டிங்  அரவிந்த் ஜெகன்.



 





 



தனது போராளி கிரியேஷன்ஸ் சார்பில் கதை திரைக்கதை எழுதி இசையமைத்து தயாரித்துள்ளார் கிறிஸ்டி.



 



தனது திரை வாய்ப்புக்காக பெரிதும் உதவியவர் இயக்குநர் பா. ரஞ்சித் என்று கூறுகிறார். ஏற்கெனவே அவருடன் இணைந்து குறும்படத்தில் பணியாற்றி  இருப்பதாகக் கூறுகிற கிறிஸ்டி, அவரால்தான் 'நறுவி ' பட வாய்ப்பு வந்ததாக நன்றியுடன் கூறுகிறார். இந்த முற்றுப்புள்ளி அனைவருக்கும் பிடித்த சமூக சிந்தனையுள்ள ஆல்பமாகப் பேசப்படும்.



 



இசை அமைப்பாளர் டி. இமான் இந்த ஆல்பத்தைப் பார்த்து பாராட்டி வாழ்த்தியதுடன் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு சமூக ஊடகங்களுக்கு அறிமுகம் செய்தார். பலரும் பாராட்டி வருகின்றனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா