சற்று முன்

கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |    ஓணம் பண்டிகை அன்று திரைக்குவரும் 'லோகா (Lokah) – சேப்டர் 1 : சந்திரா'   |    இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'சிறை' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    ரியல் ஸ்டார் உபேந்திரா 'நெக்ஸ்ட் லெவல்' மூலம் வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார்!   |    நடிகை சம்யுக்தா மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'அகண்டா 2 தாண்டவம்'   |    காந்தாரா திரைப்படத்திலிருந்து ‘கனகவதி’ கதாப்பாத்திர அறிமுகம்!   |    இசைஞானி இளையராஜாவிடம் ஆசி பெற்ற இசையமைப்பாளர் வி.ஆர்.சுவாமிநாதன் ராஜேஷ்!   |    எல்லா தளங்களிலும் வித்தியாசமான வகையில் உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' திரைப்படம்!   |    'பிளாக் கோல்டு' திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது!   |    Sun NXT - இல் கூலி படக் கவுண்டவுன் 'கூலி அன்லீஷ்ட் பிரிவியூ'வுடன்!   |    சிவகாரத்திகேயன் வெளியிட்ட 'ரெட்ட தல' பட டீசர்!   |   

சினிமா செய்திகள்

வித்தியாசமான திரில்லர் படத்தில் நடிக்கும் விதார்த்
Updated on : 10 February 2021

கமர்ஷியலாக மட்டும் இன்றி இயல்பான மற்றும் வித்தியாசமான கதைக்களம் கொண்ட படங்களில் நடிக்கும் நடிகர்களில் ஒருவரான விதார்த், வெவ்வேறு ஜானர் கொண்ட படங்களில் நடித்து வருகிறார். ‘பொற்காசுகள்’, ‘அன்பறிவு’, ‘என்றாவது ஒரு நாள்’, ‘ஆற்றல்’ மற்றும் ‘அஞ்சாமை’ என ஐந்து படங்களில் தற்போது நடித்து வரும் விதார்த், தனது 25 வது படத்திலும் நடிக்க தொடங்கியிருக்கிறார்.



 



பென்ச்மார்க் பிலிம்ஸ் (Benchmark Fims) நிறுவனம் சார்பில் ஜோதி முருகன், சீனிவாசன் ஆகியோர் தயாரிக்கும் இப்படத்தை சீனிவாசன் இயக்குகிறார்.



 



 



புதுமையான திரில்லர் பாணியில் உருவாகும் இப்படம், ஆறு பகல்கள் மற்றும் ஏழு இரவுகளில் கதை நடப்பதாக அமைக்கப்பட்டிருக்கிறது. நாயகனுக்கு வரும் கனவுகளை மையப்படுத்திய சம்பவங்களை பரபரப்பாக சொல்லு நகரும் படத்தில், 



ஒவ்வொரு இரவிலும் நாயகனுக்கு ஒரு குறுப்பிட்ட கனவு வர வேண்டும் என்கின்ற தவிப்பை, படம் பார்ப்பவர்களுக்கு ஏற்படுத்தும் விதமாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. 38 நாட்கள் நடந்த படப்பிடிப்பில் ஒரு பகுதி திருக்கோவிலூரில் நடந்தது மற்ற அனைத்து பகுதிகளும் சென்னையில் படமாக்கப்பட்டது. 



 



இப்படத்தில் விதார்த், தன்யா பாலகிருஷ்னன், விக்ரம் ஜெகதீஷ் (ஒண்டிக்கட்ட நாயகன்), பவுலின் ஜெசிகா (வாய்தா நாயகி), மாரிமுத்து, மூனார் ரமேஷ், அஜய், வினோத் சாகர், மூர்த்தி (பிச்சைக்காரன்), Doubt செந்தில், சுபா வெங்கட், பேபி ஜனனி மற்றும் பலர் நடிக்கின்றனர்.



 



விவேக் ஆனந்த் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு பிரவீன் கே.எல் படத்தொகுப்பு செய்கிறார். கனல் கண்ணன் ஆக்‌ஷன் காட்சிகளை வடிவமைக்க, ஜெயசந்திரன் கலையை நிர்மாணிக்கிறார்.



 



 



இன்னும் தலைப்பு வைக்கப்படாத இப்படத்திற்கு இசை மிக முக்கியத்துவம் வாய்ந்தது என்பதால் முன்னணி இசையமைப்பாளருடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் படத்தின் தலைப்பு மற்றும் டீசரை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா