சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

விஜய் ஆண்டனி மற்றும் பல நட்சத்திரங்கள் கலந்துக் கொண்ட ’வி’(WE) குடும்ப நிகழ்ச்சி
Updated on : 11 February 2021

வியாபாரம், வாழ்க்கை மற்றும் பொழுதுபோக்கு இதழான ‘வி’ (WE MAGAZINE) மக்களிடம் பெரும் வரவேற்பு பெற்று வெற்றிநடை போட்டு வருவதோடு, அதன் அங்கமான ‘வி டாக்கீஸ்’ (WE TALKIES) யுடியுப் சேனல், 8 லட்சத்திற்கும் அதிகமான

சந்தாதாரர்களுடன் இயங்கி வருகிறது. பல்வேறு சினிமா சார்ந்த விஷயங்களை உடனுக்கு உடன் கொடுத்து வருவதில் வி சேனலுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்துள்ளது.







வி இதழின் இந்த வளர்ச்சிக்கு வித்திட்ட அதன் நிறுவனர் சுமதி ஸ்ரீனிவாஸின் மகன் கிரணுக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. கீர்த்தனா என்பவரை அவர் மணந்தார். இவர்களின் திருமணத்திற்கு பிந்தைய பிரம்மாண்ட விழா ஒன்றை வி குடும்பம் நடத்தியது.







கொரோனா அச்சமாக நிகழ்வுகளில் கலந்துக் கொள்வதில் பிரபலங்கள் சிலர் தயக்கம் காட்டி வரும் தற்போதைய சூழலிலும், வி குடும்ப விழாவான இவ்விழாவில் தமிழ் சினிமாவின் பிரபலங்கள் பலர் கலந்துக் கொண்டு கிரண் - கீர்த்தனா தம்பதியை வாழ்த்திஆசீர்வதித்ததை கண்டு வி குடும்பம் மகிழ்ந்தது.







நிகழ்வில் கலந்துக் கொண்ட விருந்தினர்களுக்கு வசதியாக சுமதி ஸ்ரீனிவாஸ் மற்றும் குடும்பத்தினர் மிகுந்த அக்கறை எடுத்துக் கொண்டதோடு, பாதுகாப்பு நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்தனர்.







நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி, இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர், சோபா சந்திரசேகர், நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ், நடிகர் சாந்தனு மற்றும் அவரது மனைவி நடிகை கிகி, நடிகர் எஸ்.வி.சேகர், நடிகைகள் விஜி சந்திரசேகர், நீலிமா, தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன், இசையமைப்பாளர் தரன் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்ட கிரண் - கீர்த்தனா தம்பதியின் திருமணத்திற்கு பிந்தைய இந்த நிகழ்வு, எப்போதும் நினைவில் கொள்ள வேண்டிய ஒரு பிரம்மாண்ட நாளாக அமைந்ததுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா