சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியாவை எதிர்த்து போராடும் போராட்டம் - 'காட்'!
Updated on : 13 March 2021

தமிழில் கேடி குஞ்சுமோன் தயாரித்த காதலுக்கு மரணமில்லை படத்தில் அறிமுகமானவர் நடிகர் தேஜ்.. அதை தொடர்ந்து கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை, காந்தம் ஆகிய படங்களில் நடித்தார்.. இயக்குநர், தயாரிப்பளர் என பன்முகம் கொண்ட இவர், தற்போது ‘ரீவைண்ட்’ என்கிற படத்தை தமிழ் மற்றும் கன்னடம் என, இருமொழி படமாக தயாரித்து இயக்கியுள்ளார். இந்தப்படம் வரும் ஏப்-16ஆம் தேதி ரிலீஸாகிறது. அதுமட்டுமல்ல சுமார் நாற்பது கோடி பட்ஜெட்டில் இந்தியா முழுமைக்குமான படம் ஒன்றையும் இயக்கவுள்ளார் தேஜ்.



 



 



இதுபற்றி தேஜ் கூறும்போது, “காதலுக்கு மரணம் இல்லை, கொஞ்சம் வெயில் கொஞ்சம் மழை படங்களில் நடித்தேன். காந்தம் என்கிற படத்தையும் ரிலீஸ் செய்தேன். இந்த நான்கு வருட இடைவெளியில் ‘தமிழ் மற்றும் கன்னடத்தில் ரீவைண்ட்’ என்கிற பெயரில் இருமொழி படம் ஒன்றை தயாரித்துள்ளேன் கர்நாடகாவில் ஏப்ரல் 16ஆம் தேதி இந்தப் படம் வெளியாக இருக்கிறது தமிழில் இந்த படத்திற்கான ரிலீஸ் தேதி குறித்து ஆலோசித்து வருகிறோம்.



 



 



இந்த டைட்டிலை தான், சிம்பு நடித்துவரும் மாநாடு படத்தின் கன்னட ரீமேக்கிற்கு டைட்டிலாக அறிவித்தார்கள். ஆனால் அதே டைட்டிலை, நான் ஏற்கனவே பதிவு செய்து, சென்சார் சான்றிதழ் வாங்கி, ரிலீஸ் வரை வந்துவிட்டேன் என்கிற தகவல், தெரிந்ததும் விட்டுக்கொடுத்து விலகி விட்டார்கள். ஒரு பத்திரிக்கை நிருபர், கார்ப்பரேட் மாஃபியா ஒன்றை எதிர்த்து டெக்னாலஜி உதவியுடன் போராடுகிறார். இது மனிதனின் மூளை சம்பந்தப்பட்ட ஒரு முக்கியமான அம்சத்தை மையமாக கொண்ட சயின்டிஃபிக் ஆக்சன் த்ரில்லராக உருவாகியுள்ளது.



 





 



 



தற்போது 40 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தி மற்றும் தென்னிந்திய மொழிகள் அனைத்திலும் இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) ஒன்றை நடித்து இயக்கவுள்ளேன். படத்தின் பெயர் காட் (GOD).. அதாவது ‘குளோரி ஆஃப் டான்’ என்பதன் சுருக்கம் தான் அது. 



 



 



கன்னடத்தில் கே.ஜி.எஃப் படம் வெளியாகி அனைத்து மொழிகளிலும் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இந்தியா முழுமைக்குமான படம் (Pan India Movie) என்பது ஒரு புதிய ட்ரெண்ட் ஆக மாறியுள்ளது. அதுமட்டுமல்ல அனைத்து மொழிகளுக்கும் செட்டாக கூடிய கதையும் டைட்டிலும் எங்களுக்கு இயல்பாகவே அமைந்துவிட்டது சூப்பர்ஸ்டார் ரஜினி நடித்த பில்லா படத்தை தாண்டிய ஒரு படமாக, அதாவது 2021ல் பில்லா போன்ற ஒரு டான் இருந்தால் அவன் எப்படி இருப்பான் என்பதை மையப்படுத்தி இந்த படம் உருவாகிறது.



 



 



இந்த படத்தின் நட்சத்திர தேர்வு நடைபெற்று வருகிறது. கதாநாயகியாக ஹாலிவுட் கதாநாயகி ஒருவரை நடிக்க வைக்க பேசி வருகிறோம் தற்போது கன்னடத்தில் ராமாச்சாரி 2.O என்கிற படத்தில் நடித்து வருகிறேன். அதை முடித்துவிட்டு, விரைவில் இந்த படத்தை துவங்க உள்ளேன்” என்கிறார் தேஜ்..



 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா