சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

கார்த்தி துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டியில் வென்றவர்களுக்கு பதக்கங்களை வழங்கினார்
Updated on : 13 March 2021

சென்னை வீராபுரத்தில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல்துறை 3 வது பட்டாலியன் துப்பாக்கி சுடும் மைதானத்தில் நடைபெற்ற XII வது தென்மண்டல துப்பாக்கி சுடும் சாம்பியன் போட்டிகள்,  சனிக்கிழமை ( 13ம் தேதி) நடைபெற்ற நிறைவு விழாவுடன் முடிவுக்கு வந்தது. இந்திய தேசிய ரைபில்ஸ் சங்கத்தின் செயலாளர் டிவி.சீதா ராமாராவ் நிகழ்ச்சிக்கு தலைமை வகிக்க, பிரபல திரைப்பட நடிகர் கார்த்தி சிறப்பு விருந்தினராக பங்கேற்று பதக்கங்களை வழங்கினார். விஜயகுமார் ஐ.பி.எஸ் ( ஓய்வு), போட்டி இயக்குனர் ரவிகிருஷ்ணன், துணை ஒருங்கிணைப்பு செயலாளர் எம்.கோபிநாத் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.  



 





“தமிழகம், தெலுங்கானா, கேரளா மற்றும் கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட தென் மாநிலங்களை சேர்ந்த 800 போட்டியாளர்கள் பங்கேற்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த துப்பாக்கி சுடும் வீராங்கனை யுக்தி, 10 மீ ஏர் ரைபில் பிரிவில், பெண்கள் மற்றும் ஜூனியர் பெண்கள் பிரிவுகளின் கீழ்,  400/400 புள்ளிகள் பெற்று, மூன்று தனிநபர் தங்க பதக்கங்கள் வென்று புதிய சாதனை படைத்தார்.” என அமைப்பு செயலாளர் மற்றும் சென்னை ரைபிள் கிளப் செயலாளர் ராஜசேகர் பாண்டியன் கூறினார்.



 





 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா