சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

'ரஜினி' படத்திற்காக 13 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் வெற்றிக் கூட்டணி
Updated on : 17 March 2021

ஓரம்போ, வாத்தியார், 6.2 போன்ற படங்களை தயாரித்த வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் சார்பில் வி.பழனிவேல் தற்போது " பாம்பாட்டம் " படத்தை தயாரித்து வருகிறார். இதை தவிர " ரஜினி " என்ற புதிய படத்தையும் தயாரிக்கிறார்.  இந்த தயாரிப்பாளருடன் பதின்மூன்று வருடங்களுக்கு முன்பு அர்ஜுன் நடித்த வாத்தியார் படத்தை A.வெங்கடேஷ்  இயக்கி அது மாபெரும் வெற்றி பெற்றது.  



 



அதே வெற்றிக் கூட்டணி இந்த "ரஜினி "படத்தின் மூலம் மீண்டும் இணைந்துள்ளனர்.



 



"மஹாராஜா" படத்தில் நடித்த விஜய் சத்யா  கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக மும்பையை சார்ந்த "கைநாட்  அரோரா" தமிழில் அறிமுகமாகிறார்.  முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.



 



ஒளிப்பதிவு மனோ V. நாயாரணன், வசனம் அகில் பாபு அரவிந்த், இசை அம்ரிஷ், கலை  A.பழனிவேல், ஸ்டன்ட் சூப்பர் சுப்பராயன், மக்கள் தொடர்பு மணவை புவன், இணை தயாரிப்பு அருண் துளி, சுபாஷ் R.ஷெட்டி, கோவை பாலசுப்ரமணி, தயாரிப்பு, V. பழனிவேல், திரைக்கதை எழுதி இயக்குகிறார் A.வெங்கடேஷ்



 



படம் பற்றி இயக்குனர் A.வெங்கடேஷ் கூறியதாவது...



 



திரில்லர், ஆக்க்ஷன் கலந்த ஒரு வித்தியாசமா  படமாக இதை உருவாக்க உள்ளேன். படத்தின் நாயகன் ரஜினி ( விஜய் சத்யா ) எதிர்பாராத விதமாக ஒரு நாள் இரவில் ஒரு விபத்தினால் பல சிக்கல்களை சந்திக்கிறார், அது என்ன மாதிரியான சிக்கல்கள் அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதுதான் படத்தின் திரைக்கதை. அவருடன் முக்கிய கதாபாத்திரத்தில்  நாய் ஒன்றும் நடிக்கிறது.



 





 



படத்தில் நாயகனின் பெயர் ரஜினி பிரியன்  அவரை நண்பர்கள் செல்லமாக ரஜினி என்று அழைப்பார்கள் அதனால் தான் படத்திற்கு "ரஜினி" என்று பெயர் வைத்துள்ளேன் என்கிறார் இயக்குனர் A.வெங்கடேஷ்.



 



படப்பிடிப்பு இன்று  பூஜையுடன்  துவங்கியது தொடர்ந்து  சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் நடைபெற உள்ளது.



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா