சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

கபிலன் வைரமுத்து நூல்கள் சிங்கப்பூர் தேசிய நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் தேர்வு
Updated on : 19 March 2021

சிங்கப்பூர் தேசிய வாசிப்பு இயக்கத்தின் முக்கியமான நிகழ்வான வாசிப்பு விழாவில் கபிலன்வைரமுத்து எழுதிய மெய்நிகரி மற்றும் அம்பறாத்தூணி, சோ தர்மன் எழுதிய சூல் ஆகிய நூல்கள் இடம் பெறுகின்றன.



 



இது குறித்து வெளியாகியிருக்கும் பிரத்யேக செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது. 



 



நான்கு அதிகாரத்துவ மொழிகளில் சிங்கப்பூர் வாசகர்களின் வாசிப்பை ஊக்குவிக்க சிங்கப்பூர் தேசிய நூலக வாரியம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் சிறப்பு நிகழ்வுதான் சிங்கப்பூர் வாசிப்பு விழா. உரைகள், பட்டறைகள் போன்ற வழக்கமான நிகழ்ச்சிகளுக்கு அப்பால் எளிமையான முறையிலும் புதுமையான வழிகளிலும் வாசிப்பை அறிமுகம் செய்ய முனைகிறது வாசிப்பு விழா. கலைச் சிற்பங்கள், விளையாட்டுகள், புதுமையான இலக்கியத் தடங்கள் போன்றவை அதில் அடங்கும். தேசிய வாசிப்பு இயக்கத்தின் மிக முக்கியமான நிகழ்வு வாசிப்பு விழா. இளம் எழுத்தாளர் கபிலன் வைரமுத்துவின் மெய்நிகரி என்ற நாவலும் அம்பறாத்தூணி என்ற சிறுகதைத் தொகுப்பும் (இரண்டாவது), சாகித்ய அகாதமி விருது பெற்ற எழுத்தாளர், சோ தர்மனின் சூல் என்ற நாவலும் வாசிப்பு விழாவின் சிறப்பு அம்சங்களாக இடம் பெறுகின்றன. நூல்கள் மூலமும் அவற்றைச் சுற்றிய உரையாடல்கள் மூலமும் கற்றலை ஊக்குவிப்பதற்கு பொருத்தமான நூல்களாக இவை அமைந்துள்ளன. என்று அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.



 



தொலைக்காட்சி ஊடகத்தின் பணியாற்றும் ஐந்து இளைஞர்களின் அனுபவங்கள் வழி நிகழ்கால காட்சி ஊடகத்தின் பின்னணியை விவரிக்கும் மெய்நிகரி கபிலன்வைரமுத்துவின் மூன்றாவது நாவல். இது 2014 ஆம் ஆண்டு வெளிவந்தது. பதினைந்து சிறுகதைகளைக் கொண்ட அம்பறாத்தூணி கபிலன்வைரமுத்துவின் இரண்டாவது சிறுகதைத்தொகுப்பு. இது கடந்த 2020 ஆ ம்ஆண்டு வெளியானது. வெளிவந்த முதல் மாதத்திலேயே ஆயிரம் பிரதிகள் விற்று சாதனை படைத்தது. 1806 ஆம் ஆண்டு நிகழ்ந்த வேலூர் புரட்சி, 1750களில் இயங்கிய பூலித்தேவன் ராணுவ முகாம், 1890-களில் ரஷ்யாவை விட்டு வெளியேறிய டுகோபர்ஸ், முப்பத்தோராம் நூற்றாண்டில் பயணிக்கும் ஒரு பெண், திரையுலகின் பின்னணி குரல் கலைஞர்கள் என பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு களங்களை மையமாகக் கொண்டு கபிலன்வைரமுத்து இந்தச் சிறுகதைகளை எழுதியிருக்கிறார். 2019ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருதை வென்ற நூல் எழுத்தாளர் சோ தர்மனின் சூல் என்ற நாவல். 1947-ல் சுதந்திரம் கிடைத்தபோது, தமிழகத்தில் 39,640 கண்மாய்கள் இருந்தன. அந்த கண்மாய்களின் இன்றைய நிலை என்ன என்பதே ‘சூல்’ நாவலின் மையக்கரு. சூல் என்றால் நிறைசூலி. உயிரை உற்பத்தி செய்பவள். பிரசவிக்கும் தாயாக அந்த நாவலை உருவகப்படுத்தியுள்ளார் சோ தர்மன். 



 



நூலக வாரியத்தின் வாசிப்பு விழாவில் எழுத்தாளர்கள் இருவரும் கெளரவிக்கப்படவிருக்கிறார்கள்.



 





 



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா