சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

காதல் பட நடிகரின் சோகமான முடிவு! ஆட்டோவில் சடலமாக மீட்பு
Updated on : 23 March 2021

காதல் படத்தில், விருச்சிககாந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் பாபு. சிறிய கதாபாத்திரம் தான் என்றாலும், ரசிகர்கள் மத்தியில் அந்த ஒரேயொரு காட்சியின் மூலமாக புகழின் உச்சிக்கு சென்றவர். இன்று வரையிலும் அவருடைய புகைப்படத்தைப் பார்த்தவுடனேயே அந்த காட்சி ரசிகர்களின் மனக்கண் முன்னால் விரியும்.



 



அதன் பின்னர், விஜய்யின் ‘வேட்டைக்காரன்’ படத்தில் நடித்தார். தொடர் வாய்ப்புகள் கிடைக்காதது, கொரோனாவால் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக ஷூட்டிங் நடைப்பெறாதது என அடிப்படை வாழ்வாதாரத்திற்கே கஷ்டப்பட்டு வந்துள்ளார் நடிகர் பாபு. சமீபத்தில் தான் அவரது தாய் தந்தை மரணமடைந்தனர். அதன் பின்னர், மன அழுத்தத்துக்கு ஆளான நடிகர் பாபு, சாலைகளில் மன நோயாளியைப் போன்று சுற்றித் திரியும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.



 



திரைத்துறையில், நடிகர் அபி சரவணன் போன்ற சிலர் அவருக்கு அப்போது உதவினார்கள். இந்நிலையில், ஆட்டோவில் படுத்து உறங்கிய நடிகர் பாபு, அடுத்த நாள் காலையில் ஆட்டோவில் இருந்து சடலமாக தான் மீட்கப்பட்டார். ஒரு வளரும் நடிகரின் முடிவு இத்தனை மோசமாக அமைந்தது திரைத்துறையினரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா