சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

ஹரிக்குமார் இரட்டை வேடங்களில் நடிக்கும் 'மதுரை மணிக்குறவன்'
Updated on : 24 March 2021

அண்ணன் தம்பி   இருவரின் பகைமையால் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டு இறந்து விடுகின்றனர். நிறை மாத கர்ப்பிணியான அண்ணனின் மனைவி அதிர்ச்சியில் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுவிட்டு இறந்து விடுகிறாள். அநாதையாக்கப்பட்ட இரு குழந்தைகளில் ஒரு குழந்தையை அந்த வீட்டு பணிப்பெண் வளர்க்கிறாள். மற்றொரு குழந்தையை ஒரு போலீஸ்காரர் வளர்க்கிறார். 20 ஆண்டுகளுக்கு பிறகு கிடப்பில் போடப்பட்ட கொலைக்குற்றங்களை கண்டுபிடிக்க சிறப்பு காவல்துறை அதிகாரி அந்த ஊருக்கு வருகிறார். விசாரணையில் இறந்து போனவர்கள் தன் அப்பாவும், சித்தப்பாவும் என்று தெரியவர மனமுடைகிறார். அதே நேரம் தன் கூடப்பிறந்தவர் மதுரையில் இருக்கிறார் என தெரிந்தபின் பெரு மகிழ்ச்சி அடைகிறார். இந்த கொலைக் குற்றங்களை செய்தது யார்? தன் உடன்பிறந்த சகோதரனை சந்தித்தாரா? என்பதை திடீர் திருப்பங்களுடன் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் சொல்லும் கதை இது.



 



காளையப்பா பிக்சர்ஸ் சார்பில் G.காளையப்பன் தயாரித்து ஆர்ப்பரிக்கும் அட்டகாசமான வில்லனாக நடித்துள்ளார். ராஜரிஷி இயக்கியிருக்கிறார்.



 



தூத்துக்குடி, மதுரை சம்பவம் போன்ற படங்களின் மூலம் பிரபலமான ஹரிக்குமார் கதாநாயகனாக இரட்டை வேடங்களில் நடிக்க,  மாதவிலதா கதாநாயகியாகி உள்ளார்.



 



   வில்லன்களாக  G.காளையப்பன், சுமன், பருத்திவீரன் சரவணன்,  குணச்சித்திரங்களாக ராதாரவி, கெளசல்யா, ராஜ்கபூர், பருத்திவீரன் சுஜாதா, எம்.எஸ்.பாஸ்கர், டெல்லி கணேஷ், ஓ.ஏ.கே சுந்தர், அனுமோகன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள் உள்ளனர்.



 



இசை இளையராஜா, பாடல்கள் முத்துலிங்கம், ஒளிப்பதிவு டி.சங்கர், 

படத்தொகுப்பு வி.டி.விஜயன், ஸ்டண்ட் ஜாக்குவார் தங்கம், விஜய் ஜாக்குவார்,

நடனம் தினா, அபிநயஸ்ரீ.



 





 



தயாரிப்பு G.காளையப்பன், வசனம் வெற்றி விஜய், கதை திரைக்கதை இயக்கம்  ராஜரிஷி, இதன் படப்பிடிப்பு மதுரை, தேனி, குரங்கினி, சுருளி, பாகனேரி, புல்வநாயகி அம்மன் கோயில் போன்ற இடங்களில் 45 நாட்களில் இரு கட்ட படப்பிடிப்பாக நடைபெற்று முடிவடைந்தது.



 



      இப்படத்தில் 6 பாடல்களும் 8 சண்டை காட்சிகளும் உள்ளது. பின்னணி இசை நடைபெற்று வருகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா