சற்று முன்
சினிமா செய்திகள்
முதல்வருக்கு திரையுலக தலைவர்கள் வாழ்த்து
Updated on : 10 May 2021

தமிழக முதல்வராக பொறுப்பேற்றுள்ள மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்களையும் சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றுள்ள உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி.அருகில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் முரளி இராமநாராயணன், தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க செயலாளர் ஆர்.வி. உதயகுமார், இயக்குனர்கள் சங்க பொருளாளர் பேரரசு, பெப்சி பொருளாளர் சுவாமிநாதன், பெப்சி துணை தலைவர் ஸ்ரீதர், பி.ஆர்.ஓ.யூனியன் தலைவரும் கவுன்சில் செயற்குழு உறுப்பினருமான விஜயமுரளி ஆகியோர் அருகில் உள்ளனர்.
சமீபத்திய செய்திகள்
கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்
இயக்குனர் அதியன் ஆதிரை இயக்கத்தில் தினேஷ், கலையரசன், முத்துக்குமார், ரித்விகா, வின்சு, ஷபீர், பாலசரவணன், யுவன் மயில்சாமி மற்றும் பலர் நடித்திருக்கும் படம் தண்டகாரண்யம்.
இந்த படத்தை நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் , லேர்ன் அண்ட் டெக் புரொடக்சன்ஸ் தயாரித்திருக்கிறார்கள்.
படப்பிடிப்பு நிறைவுபெற்று செப்டம்பர் 19 அன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
இதன் அறிவிப்பை இன்று படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
லப்பர் பந்து வெற்றிக்குப்பிறகு நடிகர் தினேஷ் க்கு இந்தப்படம் மிக முக்கியமான வெற்றிப்பபடமாக இருக்கும் என்கிறார்கள் .
நடிகர் கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும் என்கிறார்கள்.
இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு
ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘குற்றம் புதிது’. நோவா ஆம்ஸ்ட்ராங் எழுதி இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் தருண் விஜய் கதாநாயகனாக அறிமுகமாகிறார். கதாநாயகியாக சேஷ்விதா கனிமொழி நடிக்கிறார். இவர்களுடன் மது சூதனராவ், நிழல்கள் ரவி, ராமச்சந்திரன் துரை, பாய்ஸ் ராஜன், பிரியதர்ஷினி ராஜகுமார் உள்ளிட்டப் பலர் நடித்திருக்கின்றனர். க்ரைம் த்ரில்லர் ஜானரில் உருவாகி இருக்கும் இந்தப் படம் ஆகஸ்ட் 29 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
இணைத்தயாரிப்பாளர் எஸ். கார்த்திகேயன், "ஜிகேஆர் சினி ஆர்ட்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படம் இது. உத்ரா புரொடக்சன்ஸ் சார்பாக ஹரி உத்ரா இந்தப் படத்தை ஆகஸ்ட் 29 அன்று தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார். அவருக்கு நன்றி. இந்தப் படத்தை எனது மகன் தருண் விஜய் தயாரித்து கதையின் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு உங்கள் அன்பும் ஆதரவும் தேவை! அவருடன் இந்த படத்தில் இரண்டு வருடங்கள் இணைத்தயாரிப்பாளராக நான் பணிபுரிந்து தமிழ் சினிமா பற்றி நிறைய கற்றுக் கொண்டேன். இந்த அனுபவத்தை வைத்து அடுத்தடுத்து படங்கள் தயாரிக்க உள்ளேன். அடுத்து ஒரு ஃபேமிலி எண்டர்டெயினர் ரொமாண்டிக் படத்திற்கான கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. அடுத்து அந்தப் படத்தின் பணிகள் தொடங்கும். 'குற்றம் புதிது' படத்திற்கும் தருண் விஜய்க்கும் உங்கள் ஆதரவு நிச்சயம் தேவை" என்றார்.
நடிகை சேஷ்விதா கனிமொழி, "நான் நடிக்க கமிட் ஆன முதல் படம் 'குற்றம் புதிது'. எனக்கு ரொம்பவே ஸ்பெஷல் படம். ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. தருணுக்கு ஆல் தி பெஸ்ட். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி! ஹீரோயின் ஆனால் ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்தேன். ஆனால், பயமும் நிறைய இருக்கிறது. நான் நடித்த முந்திய இரண்டு படங்களுக்கு ஆதரவு கொடுத்த மீடியா மற்றும் ரசிகர்களுக்கு நன்றி. அதேபோன்ற அன்பும் ஆதரவும் இந்தப் படத்திற்கும் தேவை" என்றார்.
நடிகை பிரியதர்ஷினி, " இந்த படத்தில் அம்மா கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். வாய்ப்பு கொடுத்த இயக்குநர், தயாரிப்பாளருக்கு நன்றி. இயக்குநர் கதை சொல்லும் போதே புதிய முயற்சி என்பது புரிந்தது. தருண் எந்த தயக்கமும் இல்லாமல் தனது முழு நடிப்பு திறனையும் காட்டி நடித்துள்ளார். நிச்சயம் அவர் அடுத்த கட்டத்திற்கு செல்வார். சஸ்பென்ஸ் திரில்லர் படத்திற்கான உழைப்பை தொழில்நுட்பக் குழுவும் கொடுத்துள்ளது. அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
'கெவி' பட இயக்குநர் தமிழ் தயாளன், "ஒவ்வொரு வெள்ளிக்கிழமையையும் நம்பி தமிழ் சினிமாவில் பல தொழிலாளர்களுடைய வாழ்க்கை உள்ளது. ஒரு படத்திற்காக 20, 30 வருடங்கள் காத்திருந்தவர்களை எனக்கு தெரியும். அப்படி இருக்கும் பொழுது தமிழ் சினிமாவில் ஒரு சிலர் விமர்சித்தாக் மட்டும்தான் அந்த படம் கவனிக்கப்படும் என்ற பிம்பம் கட்டமைத்திருப்பதை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. பார்வையாளர்கள் நீங்கள் வந்து படம் பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். உங்களை நம்பி நாங்கள் வாழ்கிறோம்".
தயாரிப்பாளர் கணேஷ், " எத்தனை படங்கள் நடித்தாலும் அதனை முதல் படமாக நினைத்து வேலை செய்தால் மட்டுமே அடுத்தடுத்த உயரத்திற்கு போக முடியும். சமீபத்தில் நிறைய சின்ன படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியடைந்து இருக்கிறது. அதுபோல இந்த படமும் பேசப்படும். வாழ்த்துக்கள்".
நடிகர், தயாரிப்பாளர் தேனப்பன், " படத்தின் டிரெய்லர் பார்க்கும் போதே படக்குழுவின் உழைப்பு தெரிகிறது. தமிழ் சினிமாவில் ஒரு வருடத்திற்கு 200க்கும் மேற்பட்ட படங்கள் வந்தால் அதில் ரஜினி, கமல், ஷங்கர் என பெரிய நட்சத்திரங்களின் படமும் வருகிறது. மீதம் வரும் 200 படங்களில் வெறும் பத்து படங்கள் தான் வெற்றி பெறுகிறது. அதனால் நல்ல படங்கள் பற்றி மீடியாக்கள் பேசி ஆதரவு கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறேன்".
தயாரிப்பாளர், நடிகர் தருண் விஜய், " சினிமா துறையில் இதுதான் என்னுடைய முதல் படம். என்னுடைய அம்மா, அப்பா ஆதரவு இல்லாமல் நான் ஹீரோவாக முடியாது. அவர்களுக்கு நன்றி! இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங் என்னுடைய முதல் படத்திலேயே வித்தியாசமான கதாபாத்திரம் கொடுத்துள்ளார். பொறுமையாக தொடங்கும் படம் போகப்போக ஆடியன்ஸை சீட்டின் நுனியில் அமர வைக்கும். கதிரேசன் என்ற ஃபுட் டெலிவரி பையனாக நடித்திருக்கிறேன். உடன் நடித்தவர்கள் எல்லோரும் அனுபவசாலிகள் என்பதால் கொஞ்சம் பதட்டம் இருந்தது. ஆனால், எல்லோரும் ஆதரவு கொடுத்தார்கள். கண்டிப்பாக மீடியாவும் பார்வையாளர்களும் எங்கள் படத்திற்கு ஆதரவு கொடுக்க வேண்டும்" என்றார்.
இயக்குநர் பேரரசு, " வழக்கமாக தந்தை தன் மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்தும் பொழுது கலர் கலரான காஸ்டியூம், அறிமுக பாடல் என்றுதான் அழகு பார்ப்பார். ஆனால், இப்படி ஒரு வித்தியாசமான கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார் கார்த்திகேயன். திரில்லர் படத்தில் அந்த த்ரில்லை பார்வையாளர்களுக்கு கடத்துவது சாதாரண விஷயமில்லை. அது 'குற்றம் புதிது' படத்தில் இருக்கிறது என்று நினைக்கிறேன். இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட். அதனால், இயக்குநர் ஆம்ஸ்ட்ராங் இரண்டு படங்கள் ஹிட் படங்கள் பிறகு ஹீரோ வாய்ப்பு கிடைத்தால் அதிலும் நடித்து விடுங்கள். விமர்சனங்களை நம்பாமல் எல்லா படங்களையும் மக்கள் நீங்கள் பார்த்து ஆதரவு கொடுக்க வேண்டும்".
இயக்குநர் நோவா ஆம்ஸ்ட்ராங், " கதை சொல்ல போன முதல் நாளில் இருந்து தற்போது இந்த விழா சிறப்பாக நடப்பது வரை அதற்கு முதல் காரணம் கார்த்திகேயன் சார். தருணுக்கு மிகச் சிறப்பான எதிர்காலம் உள்ளது. கொரிலாவாக நடிக்க கடுமையான பயிற்சி எடுத்தார். நடிகர்கள் சேஷ்விதா, பிரியதர்ஷினி, நிழல்கள் ரவி, தினேஷ் என எல்லாருமே சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார்கள். அதுபோல தொழில்நுட்பக் குழுவும் சிறப்பாக பணிபுரிந்து இருக்கிறார்கள். இது திரில்லர் படமாக இருந்தாலும் நிறைய எமோஷன் உள்ளது. படம் முடிந்து வரும் பொழுது 'குட்'டாக ஃபீல் செய்வீர்கள். என்னுடைய அண்ணன், அண்ணி, என்னுடைய மனைவி எல்லோருக்கும் நன்றி".
இயக்குநர் ஹரி உத்ரா, " இந்த படத்தை நிச்சயம் வெற்றி படமாக்குவேன் என்று நம்பிக்கையோடு வெளியிடும் ஹரி உத்ராவுக்கு நன்றி. இயக்குநருடைய ஆசை நிறைவேறி இருப்பது மகிழ்ச்சி. தன் மகனை ஹீரோவாக்க வேண்டும் என்று இறங்கியிருக்கிறார். தயாரிப்பாளர் கார்த்திகேயனுக்கும் வாழ்த்துக்கள். தருண் இன்னும் பல படங்கள் நடிக்க வேண்டும். கடைசி வாரங்களில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் பெரிதாக கலெக்ஷன் செய்யவில்லை. இதற்கு காரணம் நாம் படம் எடுப்பதை விட பார்வையாளர்களிடம் கொண்டு போய் சேர்க்க இன்னும் மெனக்கெட வேண்டும். சிறு படங்களை வெற்றி பெற வைத்தால் மட்டுமே சினிமா துறை வளரும்".
உத்ரா புரொடக்சன்ஸ், ஹரி உத்ரா " கேரளா, தமிழ்நாடு என எல்லா மாநிலங்களிலும் 'குற்றம் புதிது' ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த வாய்ப்பு எனக்கு கொடுத்த கார்த்திகேயன் சாருக்கு நன்றி. படத்தை ரசிகர்களிடம் கொண்டு போய் சேர்ப்பதற்காக இரவு பகல் பாராது உழைத்திருக்கும் ஹீரோ, ஹீரோயின், இயக்குநர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள்".
இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!
தமிழ் சினிமாவில் வாரத்திற்கு சுமார் 5-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியானலும், அதில் மக்கள் மனதை கவரும் படங்கள் என்னவோ ஒன்றோ இரண்டோ தான். அப்படிப்பட்ட படங்களின் வருகைக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு செம சஸ்பென்ஸ் திரில்லர் விருந்து படைக்க இருக்கும் படம் தான் ‘இந்திரா’.
வசந்த் ரவி நாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் சபரிஷ் நந்தா இயக்கியிருக்கிறார். ஜெ.எஸ்.எம் மூவி புரொடக்ஷன் மற்றும் எம்பரர் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனங்கள் சார்பில் ஜாஃபர் சாதிக் மற்றும் இர்பாஃன் மாலிக் தயாரித்துள்ளனர். பிரபு ராகவ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு அஜ்மல் தஷீன் இசையமைத்திருக்கிறார்.
வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி இன்று திரையிடப்பட்டது. பொதுவாக படம் வெளியாவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக ஒரு படம் பத்திரிகையாளர்களுக்கு திரையிடப்படுகிறது என்றாலே அந்த படத்தில் ஏதோ சிறப்பு விசயங்கள் நிறைந்திருக்கிறது என்பதை பத்திரிகையாளர்கள் யூகித்து விடுவார்கள். வசந்த் ரவியின் முந்தைய படமான ‘அஸ்வின்ஸ்’ படமும் இப்படி தான் திரையிடப்பட்டது. பத்திரிகையாளர்கள் யூகித்தது போல் அந்த படம் மேக்கிங் மற்றும் விஷுவல், கதை சொல்லல் ஆகியவற்றில் வித்தியாசத்தை காட்டி வியக்க வைத்தது. அதை தொடர்ந்து படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது.
அதன்படி, ‘இந்திரா’ திரைப்படமும் இன்று வெளியாவதற்கு முன்பாக திரையிடப்பட்டதால் பத்திரிகையாளர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் படம் பார்த்ததோடு, பலவிதமான யூகங்களுடனும் பார்த்தார்கள். ஆனால், படத்தின் ஆரம்பத்திலேயே கதைக்குள் இழுத்துவிடும் இயக்குநர், இந்திரா யார் ? என்ற கேள்வியில் தொடங்கி அதன் பிறகு நிகழும் அத்தனை அதிர்ச்சிகரமான சம்பவங்களையும் பார்வையாளர்களின் யூகங்களை கடந்து காட்சிப்படுத்தி வியக்க வைத்துவிட்டார்.
இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும், என்று பத்திரிகையாளர்கள் அனைவரும் பாராட்டியதோடு, படத்தில் இடம் பெற்றிருக்கும் திருப்பங்களை மறைத்து விமர்சனம் எழுதுவதே மிகப்பெரிய சவாலாக இருக்கும், என்றும் பேசியது படத்திற்கான மிகப்பெரிய அங்கீகாரம்.
ஒரு படம் வெளியாவதற்கு முன்பாக இத்தகைய பாராட்டு பெறுவது என்பது மிகவும் அரிதானது, அத்தகைய அரிதான சம்பவத்தை நிகழ்த்தியிருக்கும் ‘இந்திரா’ படக்குழு படம் வெளியான பிறகும், தங்களது படத்தின் ஆச்சரியங்களை தொடர்ந்து மக்கள் அறியும்படி செய்தால், படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உறுதி.
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'
முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் இயக்குநர்களுடன் மெகா பட்ஜெட் படங்கள், அறிமுக இயக்குநர்கள் மற்றும் நடிகர்களுடன் புதிய ட்ரெண்டை தொடர்ந்து உருவாக்கும் படங்கள் என அடுத்தடுத்து சாதனை படைத்து வரும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் 'கோட்', 'லவ் டுடே', 'டிராகன்' என மெகா வெற்றிப் படங்களை தொடர்ந்து, 28வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் பூஜையுடன் சென்னையில் இன்று துவங்கியது.
'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் இப்படத்தை பிரதீப் ரங்கநாதனின் உதவி இயக்குநர் சுபாஷ் கே ராஜ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார்.
அனைத்து தரப்பு ரசிகர்களும் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கும் வகையிலான திரைப்படமாக இது அமையவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.
'ஏஜிஎஸ் 28' என்று அழைக்கப்படும் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தின் கிரியேட்டிவ் புரொடியுசராக அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசராக ஐஸ்வர்யா கல்பாத்தி, நிர்வாக தயாரிப்பாளராக எஸ்.எம். வெங்கட் மாணிக்கம் பணியாற்றுகின்றனர்.
ஜான் கொக்கேன், திலீபன், பவன், அர்ஜுன் சிதம்பரம், விவேக் பிரசன்னா, பாலா ஹசன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
'கே ஜி எஃப்' படத்தில் தனது அதிரடி இசை மூலம் கவனத்தை ஈர்த்த ரவி பஸ்ரூர் இந்த படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். அருண் ராதாகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் E ராகவ் படத்தொகுப்பை கையாளுகிறார். வீரமணி கணேசன் கலை இயக்கத்திற்கு பொறுப்பேற்க, பீனிக்ஸ் பிரபு சண்டைக் காட்சிகளை இயக்க, தினேஷ் மனோகரன் ஆடைகளை வடிவமைக்கிறார்.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிக்க சுபாஷ் கே ராஜ் இயக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற உள்ளது.
பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்
இந்திய திரையுலகின் உள்ளடக்க வர்த்தகத்தில் மாற்றத்தையும் நேர்மறை தாக்கத்தையும் ஏற்படுத்தியுள்ள புரொடியூசர் பஜார் (ProducerBazaar.com), ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் பெற்ற இந்தியாவின் ஒரே திரைப்பட திருவிழாவான பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் (Bangalore International Short Film Festival - BISFF) முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆகஸ்ட் 17, 2025 அன்று இறுதி செய்யப்பட்டுள்ள இந்த ஒப்பந்தம், சர்வதேச அங்கீகாரத்திற்கான கதவுகளை இந்திய திரையுலகிற்கு திறந்து விட்டிருப்பதோடு பெரும் மாற்றத்தை உண்டாக்கும் கூட்டணிகள் மற்றும் குறும்பட படைப்பாளிகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளிட்டவற்றுக்கு வழிவகுக்கும்.
பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவின் ஆஸ்கர் அகாடமி அங்கீகாரம் மற்றும் புரொடியூசர் பஜாரின் தனித்தன்மை வாய்ந்த திரைப்பட உரிமைகள் மற்றும் விநியோக தளம் ஆகியவை இணைந்து இந்திய படைப்பாளிகள் ஆஸ்கார் மேடையை அடைவதற்கான வழியை உருவாக்குவதோடு அவர்களது படைப்புகள் நல்ல வருவாயை ஈட்டுவதற்கான முறைகளையும் உருவாக்கும்.
இந்த கூட்டணி குறித்து பேசிய பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவின் நிறுவனர் மற்றும் விழா இயக்குநர் ஆனந்த் வரதராஜ், "குறும்படங்களை ஆதரிப்பதிலும், இந்திய திறமையாளர்களுக்கு உலகளாவிய மேடையை உருவாக்குவதிலும் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா முன்னணியில் உள்ளது. புரொடியூசர் பஜார் உடனான இந்த கூட்டணி, தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குநர்களுக்கு ஆஸ்கர் கதவுகளை திறந்து விடுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் படைப்புகள் நிலையான வணிக வாய்ப்புகளைக் கண்டறிவதையும் உறுதி செய்கிறது. இந்திய சினிமாவின் குரலை சர்வதேச அளவில் உரத்து ஒலிக்க செய்வதே எங்கள் நோக்கமாகும்," என்று தெரிவித்தார்.
புரொடியூசர் பஜார் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. திருநாவுக்கரசு பேசுகையில், "இந்திய படைப்பாளிகளுக்கு இதுவரை இல்லாத வகையிலான சர்வதேச வெளிப்பாட்டையும், அகாடமி விருதுகளுக்கான நேரடி நுழைவாயிலையும் இந்த கூட்டாண்மை வழங்குகிறது. நல்ல திரைப்படங்களை அடையாளம் கண்டு அவற்றின் விநியோகம் மற்றும் வருவாய் முறைகளை மறுவரையறை செய்து மேம்படுத்துவதில் புரொடியூசர் பஜார் உறுதியாக உள்ளது. பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா உடன் தற்போது இணைந்திருப்பதன் மூலம் இந்தியாவில் உருவாக்கப்படும் குறும்படங்கள் உலகளாவிய தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய செழுமையான சூழலிலை உருவாக்குவதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்," என்றார்.
பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா மற்றும் புரொடியூசர் பஜார் கூட்டணியின் முக்கிய சிறப்பம்சங்கள்:
ஆஸ்கர் நுழைவுவாயில்: பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா அங்கீகாரம் மூலம் ஆஸ்கரில் இடம்பெற விரும்பும் குறும்படங்களுக்கான நுழைவுப் புள்ளியாக புரொடியூசர் பஜார் செயல்படும்.
புதுமையான வருவாய் முறைகள்: உள்ளடக்க உரிமைகளுக்கான இதுவரை இல்லாத வகையிலான அணுகுமுறை, திரைப்படத் தயாரிப்பாளர்கள் தங்கள் படைப்புகளை வெளிப்படையாகப் பணமாக்குவதற்கும் உலகளாவிய சந்தைகளை அணுகுவதற்கும் இது உதவுகிறது.
சர்வதேச வெளிப்பாடு மற்றும் நெட்வொர்க்கிங்: சர்வதேச விநியோகஸ்தர்கள், தளங்கள் மற்றும் முதலீட்டாளர்களுடன் படைப்பாளிகள் இணைவதற்கான சிறந்த வாய்ப்புகள்.
புரொடியூசர் பஜார் மற்றும் பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழா இணைந்து, இந்திய சினிமாவை உலகளாவிய அளவில் உயர்த்துவதையும், திறமை வாய்ந்த படைப்பாளிகளுக்கு உரிய மேடையை வழங்குவதையும், அடுத்த தலைமுறை தயாரிப்பாளர்கள் பெரும் லட்சியங்களை எட்ட ஊக்குவிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளனர்.
மேலும் விவரங்களுக்கு: https://www.producerbazaar.com/
அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இயக்கும் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, படக்குழுவினருடன், திரைபிரபலங்கள் நடிகர் சசிக்குமார், இயக்குநர் இரா சரவணன் ஆகியோர் கலந்துகொள்ள, மிகச் சிறப்பான முறையில் பூஜையுடன், இன்று துவக்கப்பட்டது.
தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைக்களங்களில், தொடர்ந்து பிளாக்பஸ்டர் படங்களை வழங்கி வருகிறது மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் (Million Dollar Studios) . குட் நைட், லவ்வர் மற்றும் இந்த வருடத்தின் பிளாக்பஸ்டர் வெற்றிப்படமான டுரிஸ்ட் ஃபேமிலி படத்தின் ஹாட்ரிக் வெற்றியைத் தொடர்ந்து, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவனத்தின் 6 வது படைப்பாக இப்படம் உருவாகிறது.
தமிழ் திரையுலகில் பல வெற்றிப்படங்களைத் தந்து, முன்னணியில் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும் வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) நிறுவனம் தற்போது பிரம்மாண்ட பொருட்செலவில் நடிகர் தனுஷ் நடிப்பில், போர் தொழில் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் “D54” மற்றும் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் “மூக்குத்தி அம்மன் 2” படங்களைத் தயாரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து, அசோக் செல்வன் நடிக்கும் இந்த புதிய படத்தினை, மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) நிறுவன தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் & வேல்ஸ் ஃபிலிம் இண்டர்நேஷனல் ( VELS Film International ) சார்பில் தயாரிப்பாளர் ஐசரி K கணேஷ் இணைந்து தயாரிக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் கலக்கி வரும் நடிகர் அசோக் செல்வன் இப்படத்திலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் கலக்கவுள்ளார். அவருக்கு ஜோடியாக நடிகை நிமிஷா சஜயன் நடிக்கிறார்.
மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் ( Million Dollar Studios ) தயாரிப்பில், பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் “ஹேப்பி எண்டிங், ஒன்ஸ்மோர்” படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இந்நிலையில் இந்த புதிய படத்தின் படப்பிடிப்பு, சென்னையில் இன்று துவங்கி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து தரப்பினரும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் படமாக, அறிமுக இயக்குநர் மணிகண்டன் ஆனந்தன் இப்படத்தை இயக்குகிறார். இசையமைப்பாளர் திபு நினன் தாமஸ் இசையமைக்கிறார். புஷ்ப ராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பரத் விக்ரமன் எடிட்டிங் பணிகளை கையாளுகிறார்.
இப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பற்றிய விபரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா
ஜேசன் ஸ்டுடியோஸ், சச்சின் சினிமாஸ், ஸ்ரீதயாகரன் சினி புரொடக்ஷன், மை ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் உதயா, தயா என். பன்னீர் செல்வம், எம். தங்கவேல் ஆகியோரின் தயாரிப்பில், பிரபு ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் ஆகஸ்ட் 1 அன்று வெளியான 'அக்யூஸ்ட்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது. இந்த வெற்றிக்கு வித்திட்ட ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் 'அக்யூஸ்ட்' படக்குழுவினர் விழா ஒன்றினை சென்னையில் ஒருங்கிணைத்தனர்.
இந்த விழாவில் படக்குழுவினருடன் தயாரிப்பாளர்கள் ஏ. எல். அழகப்பன், அழகன் தமிழ்மணி, சௌந்தர் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் தயா என். பன்னீர்செல்வம் பேசுகையில், ''இப்படத்தின் வெற்றிக்கு தற்போது வரை கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கும் நாயகனும், நண்பணுமாகிய உதயாவிற்கு நெஞ்சார்ந்த நன்றி. இந்த வெற்றி அவரை தான் சாரும். படத்தின் தொடக்கத்திலிருந்து தற்போது வரை அனைவரையும் அரவணைத்து ஒருங்கிணைத்து வழிநடத்திச் செல்வது அவர் தான். தற்போது வரை இந்த படத்தின் வெற்றியை அவர் தன் தலை மீது ஏற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து எங்களின் நலன்களுக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து நல்ல திரைப்படங்களில் நடித்து தொடர்ந்து வெற்றி பெற வேண்டும் என்பது தான் அவரது நோக்கம். அவரது நோக்கம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள், விநியோஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். படத்தை வெற்றி பெறச் செய்த ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்த படத்தில் நாகராஜ் என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், உதயாவிற்கும் நன்றி.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இதே கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைய திட்டமிட்டு இருக்கிறோம். இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும்," என்றார்.
இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் பேசுகையில், ''இந்தப் படத்தில் உழைத்த நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவரின் பின்னணியில் ஒரு குட்டி கதை இருக்கிறது. இப்போது அதைப் பற்றி விரிவாக பேச இயலாது. இருப்பினும் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த 'அக்யூஸ்ட்' திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்த்த ஊடகத்தினருக்கும், வெற்றி பெற செய்த ரசிகர்களுக்கும் முதலில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அமெரிக்காவிலிருந்தும் பாராட்டுக்கள் கிடைத்தது. 'தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்' என்ற குறள் தான் என் நினைவுக்கு வருகிறது. இந்த முயற்சிக்கு வித்திட்டது ஏ எல் உதயா தான். இப்படத்தின் பணிகள் தொடங்கிய தருணத்திலிருந்து நான் தற்போது பேசும் தருணம் வரை உதயா அசுரத்தனமாக உழைத்துக் கொண்டிருக்கிறார். இதனை நான் தினமும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இந்தப் படம் வெளியான பிறகு நாங்கள் குழுவாக இணைந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர், ஈரோடு, திருநெல்வேலி என்று ஊர் ஊராக பயணித்து ரசிகர்களை சந்தித்தபோது ரசிகர்களையும், ஊடகத்தினரையும் அவர் தனி ஆளாக எதிர்கொண்டார். ரசிகர்கள் அனைவரும் 'கணக்கு எப்படி இருக்க?' என்ற அளவிற்கு நலம் விசாரிக்க தொடங்கி விட்டார்கள். ரசிகர்களின் பேரன்பு எங்களுக்கு கிடைக்க காரணமாக இருந்தவரும் உதயா தான். இந்தத் தருணத்தில் இந்தத் திரைப்படம் வெற்றி பெற்றதற்கு முழு முதல் காரணமாக நான் உதயாவை தான் குறிப்பிடுவேன்.
கன்னட திரைப்படத்துறையில் வெற்றி பெற்றிருந்தாலும், தமிழிலும் வெற்றி பெற்ற இயக்குநராக வலம் வர செய்திருக்கும் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார்.
நடிகர் ஏ. எல். உதயா பேசுகையில், '' பகிர்ந்து கொள்ள நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா, என தெரியாது. அவ்வளவு சோர்வாக இருக்கிறேன்.
என்னுடைய நண்பர்களின் ஆதரவினால் இப்படத்தின் பணிகளை தொடங்கி, நிறைவு செய்து ஊடகங்களின் துணையுடன் மக்களிடம் சேர்ப்பித்து மக்கள் வெற்றி பெற செய்துள்ளார்கள். இதற்குள்ளாக நாங்கள் பட்ட பாடு இருக்கிறதே, விவரிக்க இயலாது, பகிர்ந்து கொள்ள முடியாது.
இந்தப் படத்தின் கதை நல்ல கதை. நண்பர்கள், தயாரிப்பாளர்கள், திரை உலகத்தின் ஆதரவுடன் படத்தினை தயாரித்து விட்டோம். வெளியிட திட்டமிடப்பட்ட போது இந்த படத்தை வெளியிடக்கூடாது என்று சிலர் மறைமுகமாக பணியாற்றினார்கள். சிலர் கூடவே இருந்து தடுத்தார்கள். அதெல்லாம் வலி மிகுந்த விஷயங்கள்.
சினிமாவில் நாங்கள் இன்று இந்த இடத்தில் நிற்கிறோம் என்றால் இது சாதாரணமானதல்ல. மிகப் பெரிய வெற்றி. இந்த இடம் அப்படி இருக்கிறது. ஏனெனில் எவ்வளவோ நல்ல படங்கள் காணாமல் போய்விட்டன. யாருடைய ஆசீர்வாதம் என்று தெரியவில்லை, இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று திரையரங்கில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தை திரையரங்குகளில் ஓட வைப்பதற்காக போராடிக் கொண்டே இருக்கிறோம். ஆனால் இந்த போராட்டத்தை நானும் எனது குழுவும் இஷ்டப்பட்டு தான் செய்து வருகிறோம்.
இது கடவுள் எனக்கு கொடுத்த கடைசி வாய்ப்பு.
எனக்கு தன்னம்பிக்கை இருக்கிறது. இருந்தாலும் கடினமான முடிவுகளை எடுக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டேன். இந்த திரைத்துறையில் சூழ்ச்சி, பகைமை என பல விஷயங்கள் இருக்கின்றன. ஒரு படத்தை வர விடக்கூடாது என தடுக்கிறார்கள். அதையும் கடந்து இந்த படம் வெளியாகி வெற்றி பெற்று இருக்கிறது என்றால், அதற்கு ஊடகங்களும், மக்களும் தான் காரணம்.
இந்தப் படம் வெளியாகி மூன்றாவது வாரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதே மிகப்பெரிய வெற்றி தான். அதனால்தான் இதற்கு காரணமான ஊடகத்தினருக்கும், ரசிகர்களுக்கும் நன்றி தெரிவிக்க விரும்பினோம்.
இப்படம் வெளியான பிறகு நாங்கள் திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் என்று செல்லும்போது அங்குள்ள ரசிகர்கள் இந்த படத்தின் கதாபாத்திரத்தின் பெயரை குறிப்பிட்டு கொண்டாடுகிறார்கள். எங்கள் மீது பேரன்பு காட்டுகிறார்கள். அந்த அளவிற்கு இந்த திரைப்படம் ஒரு மிகப்பெரிய மேஜிக்கை நிகழ்த்தி இருக்கிறது. இது கடவுளின் ஆசீர்வாதம் தான்.
சினிமாவில் எந்த சங்கமாக இருந்தாலும் அவை உறுதியாக இருக்க வேண்டும். ஏனெனில் தமிழ் சினிமா ஒரு மோனோபோலியாக (monopoly) இருக்கிறது. நான் இதை உறுதியாக சொல்கிறேன். இதில் நாம் வெற்றி பெறுவது என்பது கடினமானது. மீண்டும் ஒரு முறை போராட முடியாது. இத்தனை ஆண்டுகால சினிமா அனுபவம் கொண்ட எங்களுக்கு இப்படி ஏற்படுகிறது என்றால், புதிதாக வரும் தயாரிப்பாளர்களுக்கு நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது. நாம் இந்த நிலையில் தான் தற்போது இருக்கிறோம். இந்த தருணத்தில் திரையரங்க உரிமையாளர்களுக்கு நான் மிகப்பெரிய மரியாதை செலுத்துகிறேன். ஏனெனில் திரையரங்க உரிமையாளர்கள் பலரும் எங்களைப் போன்ற சிறிய முதலீட்டு தயாரிப்பாளர்களுக்கு ஆதரவு அளிக்கிறார்கள். அதனால் அவர்கள் மீது எந்த குறையையும் சொல்ல இயலாது. திருப்பூர், சேலம், கோவை போன்ற பகுதிகளில் இந்த திரைப்படம் நன்றாக இருக்கிறது என்று சொல்லி திரையரங்க உரிமையாளர்கள் தற்போது வரை ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால் தயாரிப்பாளர்களாகிய நாம் தான் சரியில்லை. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் தான் சுயநலம் அதிகம் இருக்கிறது.
இந்த படத்தை இயக்கிய இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ், தயாரிப்பாளர் சௌந்தர், தயாரிப்பாளர் அழகன் தமிழ்மணி, நடிகர்கள் டேனி, பிரபாகர், ஸ்ரீதர், ஹைடு கார்த்திக், நடிகைகள் சுபத்ரா, தீபா பாஸ்கர், ஒளிப்பதிவாளர் மருதநாயகம், இசையமைப்பாளர் நரேன் பாலகுமார், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா, பாடகர்கள் ஜி. வி. பிரகாஷ் குமார், வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வி எஃப் எக்ஸ் மூர்த்தி என அனைவருக்கும் இந்த தருணத்தில் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அனைத்து தயாரிப்பாளர்களும் நன்மை பெற வேண்டும். அடுத்து நாம் பட வெளியீட்டை ஒழுங்கு படுத்துவது தான் முதன்மையான பணி. இதற்காக தயாரிப்பாளர் சங்கத்தில் ஆற்றல்மிக்க அணி உருவாக வேண்டும். என்னை பொறுத்தவரை இனி நான் எந்த சங்கத்திலும் போட்டியிடப் போவதில்லை. நான் என்னுடைய வேலையை மட்டும் தான் பார்க்கப் போகிறேன். தயாரிப்பாளர் கேயார் , தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் போன்றோர்கள் தலைமையில் இருந்த சங்கம் போல் வலுவான சங்கம் வேண்டும். யாருக்கும் எதற்கும் அச்சப்படாத தலைவர்கள் இருந்தார்கள் இல்லையா, அது போன்ற தலைவர்கள் வந்தால் மட்டும் தான் சினிமா நன்றாக இருக்கும்.
இந்தப் படத்தில் நான் மட்டும் ஹீரோ இல்லை, அஜ்மலும் ஒரு ஹீரோ தான். ஜான்விகா, யோகி பாபு ஆகியோருக்கும் நன்றி.
இந்த டீம் மீண்டும் இணைந்து பணியாற்ற திட்டமிட்டு இருக்கிறது. இயக்குநர் பிரபு ஸ்ரீநிவாஸ் 'டண்டனக்கா டான்' என்ற பெயரில் கதையை சொல்லி இருக்கிறார். இது தொடர்பாக விரைவில் நல்ல செய்தி வரும். இந்த 'அக்யூஸ்ட்' படத்தின் வெற்றியை தொடர்ந்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்குவேன் என உறுதியாக சொல்கிறேன்,'' என்றார்.
'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!
Vijay Gowrish Productions, Niyanth Media and Technology, மற்றும் Malarr Maarii Movies சார்பில், கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி தயாரிப்பில், இயக்குநர் SS முருகராசு இயக்கத்தில், சமூக அக்கறையுடன், கிராமிய பின்னணியில் ஒரு அசத்தலான கமர்ஷியல் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “கடுக்கா”.
விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.
இந்நிகழ்வில்
தயாரிப்பாளர் ஆனந்த் பொன்னுசாமி பேசியதாவது…
எங்கள் அழைப்பை மதித்து வந்த அனைவருக்கும் நன்றி. இந்தப்படத்தை மிக கஷ்டப்பட்டு ஒரு குழுவாக உழைத்து, உங்கள் முன் கொண்டு வந்துள்ளோம். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்..
பாடலாசிரியர் நிலவை பார்த்திபன் பேசும்போது.
கடுக்கா படத்தில் இடம் பெற்றுள்ள இரண்டு பாடல்களையும் எழுதும் வாய்ப்பை எனக்கே கொடுத்ததற்கு நன்றி. இரண்டு பாடல்களில் ஒன்றை தேவா சார் பாடி இருப்பது எனக்கு பெருமை. டீசருக்கான பாடலை ஒரு வில்லுப்பாட்டு போன்று 20 நிமிடத்தில் எழுதிக் கொடுத்தேன். கதாநாயகி பற்றி நான் எழுதி இருந்த பாடல் வரியை குறிப்பிட்டு தேவா சார் பாராட்டினார். தேவா சாரிடமிருந்து பாராட்டு வாங்குவது தேவலோகத்தில் இருந்து பாராட்டு வாங்குவது போல பெரிய விஷயம் என்றார்
ஜர்னலிஸ்ட் யூனியன் தலைவர் சுபாஷ் பேசியதாவது…
படத்தை முழுதாக நான் பார்த்துவிட்டேன். தந்தை பெரியார் கருத்தை அழகாகவும், சிறப்பாகவும், ஆழமாகவும் பதிவு செய்துள்ள இயக்குநருக்கும், படக்குழுவிற்கும் எனது பாராட்டுக்கள். ஒரு பெண்ணின் பார்வையில் படத்தைச் சொன்னதற்குப் படக்குழுவுக்கு வாழ்த்துக்கள். நடித்த அனைவருக்கும் பட ரிலீஸுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகளும் பெரிய பேரும் கிடைக்கும். ஆனால் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு ஹிரோயின் வரவே இல்லை. ஏதோ வெப் சீரிஸ் வாய்ப்பில் அவர் பிஸியாகிவிட்டார் என்றார்கள். கஷ்டப்பட்டு இவர்கள் எடுத்த படத்தால் பிரபலமாகிவிட்டு, பட விழாவிற்கு வராமல் இருப்பது குற்றம். இனிமேல் படத்தில் புக் செய்யும்போதே அவர்கள் விழாக்களுக்கும் வர வேண்டுமென ஒப்பந்தம் போட வேண்டும்.. படக்குழுவினர் அனைவரும் ஜெயிக்க வாழ்த்துக்கள். தயாரிப்பாளர் கௌரி சங்கர் எந்த விளம்பரமும் இல்லாமல் பல சமூகப் பணிகள் செய்து வருகிறார். அவரது மனதுக்காக கண்டிப்பாக இந்தப்படம் ஜெயிக்க வேண்டும். அனைவரும் இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இசையமைப்பாளர் கெவின் டெகோஸ்டா பேசியதாவது….
எனக்கு வாய்ப்பளித்த தயாரிப்பாளர் இயக்குநருக்கு நன்றி.. என் இசையில் பாடிய இசையமைப்பாளர் தேவா அவர்களுக்கு நன்றி.. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி என்றார்..
நடிகர் சௌந்தர்ராஜா பேசியதாவது….
கடுக்கா மிகச்சிறப்பான கருத்தைச் சொல்லும் சிறப்பான படம். கேமராமேன், இசையமைப்பாளர், எடிட்டர் என எல்லோரும் சிறப்பாகச் செய்துள்ளார்கள். பாடல் கேட்டவுடன் முணுமுணுக்கத் தோன்றுகிறது. படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நான் வெளிநாட்டில் வேலை செய்யும்போது, இரண்டு படங்களுக்கு டிக்கெட் எடுத்தால், ஒரு டிக்கெட் இலவசம். அதே போல் இங்கு சின்ன பட்ஜெட் படங்களுக்கு 10 டிக்கெட் எடுத்தால் 5 டிக்கெட் இலவசம் என்று அறிவித்தால், படத்தின் மீது ஈர்ப்பு வரும். தயாரிப்பாளர்கள் தான் முடிவெடுக்க வேண்டும். படக்குழுவிற்கு எனது வாழ்த்துக்கள் நன்றி என்றார்
இயக்குநர் SS முருகராசு பேசியதாவது…
இந்தப்படத்தில் எனக்கு வாய்ப்பு தந்த தயாரிப்பாளர்கள் கௌரி சங்கர் ரவிச்சந்திரன் மற்றும் ஆனந்த் பொன்னுசாமி இருவருக்கும் நன்றி. அனைவரும் கடுமையாக உழைத்து இப்படத்தை எடுத்துள்ளோம். படம் எடுத்த அந்த ஊரில் எல்லோரும் மிகவும் உதவியாக இருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் நன்றி. என்னைப் பொறுத்தவரை எங்கள் படம் மிகச்சிறந்த படம், இனி நீங்கள் தான் படம் பார்த்துச் சொல்ல வேண்டும், அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி.
தயாரிப்பு ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் பேசியதாவது…
என் நண்பன் விஜய் கௌரிஷை ஹீரோவக்க வேண்டும் என்று தான் இந்தப்படத்தை ஆரம்பித்தோம். அதிலும் இதில் இரண்டு ஹீரோக்களில் ஒருவராக ஏன் நடிக்கிறாய் என கேட்டேன். என்னுடைய தயாரிப்பான கடாவர் சீரிஸில் துணை நடிகராகத்தான் வாழ்க்கையை ஆரம்பித்தான். அவன் சின்ன சின்னதாக ஆரம்பித்து படிப்படியாக முன்னேறியுள்ளான். இது நண்பர்கள் இணைந்து உருவாக்கிய படம். அவன் எது செய்தாலும் சரியாக இருக்கும். இந்தப்படத்தில் இசை மிகச்சிறப்பாக வந்துள்ளது. படம் தனஞ்செயன் சார் ரிலீஸ் செய்கிறார் என்றவுடன் சந்தோசமாகிவிட்டது. இனி அவர் இப்படத்தை எடுத்துச் சென்று விடுவார். கௌரிஷ் பல சமூக அக்கறைமிக்க செயல்களைச் செய்துகொண்டிருக்கிறான். அவன் இன்னொரு விஜய் சேதுபதியாக வருவான்.. இயக்குநர் அவ்வளவு அழகாக இப்படத்தினை எடுத்துள்ளார். அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி. என்றார்.
தயாரிப்பாளர் CV குமார் பேசியதாவது…
இந்தப்படத்தின் டிரெய்லர் பார்க்கும் போது என்னுடைய அட்டகத்தி படம் பார்ப்பது போலவே இருந்தது.. சின்ன படங்கள் எடுப்பதில் படம் எடுப்பதைத் தாண்டி படத்தை விளம்பரப் படுத்துவதில் தான் இருக்கிறது.. அதை மிகச்சிறப்பாக தனஞ்செயன் சார் செய்து வருகிறார்.. அவர் இந்தப்படத்தை ரிலீஸ் செய்வது மகிழ்ச்சி. படக்குழுவினர் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள் நன்றி என்றார்.
இயக்குநர் ஆர் வி உதயகுமார் பேசியதாவது…
கடுக்கா படத்தை வாழ்த்த நிறையப் பிரபலங்கள் வந்துள்ளார்கள். படக்குழு ஒரு பாட்டிலேயே ஈர்த்து விட்டார்கள். பெயரிலேயே ஆனந்தத்தை வைத்திருக்கும் இந்த தயாரிபபளர்களுக்கு வாழ்த்துக்கள். படத்தில் பெண்கள் சம்பந்தமாகச் சிறப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். வாழ்த்துக்கள். சினிமாவில் நாம் சரி செய்ய வேண்டிய விசயம் நிறைய இருக்கிறது. திரையரங்கில் இஷ்டத்துக்கு ஷோ தருகிறார்கள், எந்த ஷோ நம்ம படம் ஓடுகிறது என்றே தெரியவில்லை. இதை ஒழுங்குபடுத்த வேண்டும். நாம் படமெடுத்துக் கொண்டிருந்த காலத்தில் ரஜினி சார் படம் 100 தியேட்டரில் வெளியானால் அடுத்து 16 படங்கள் வெளியாக தியேட்டர் இருக்கும். ஆனால் இப்போது ஒரே படத்தை எல்லாத் தியேட்டரிலும் போட்டு வசூலை அள்ள, மற்ற படங்களை ஓட விடமால் செய்து விடுகிறார்கள். குறைந்த பட்சம் சின்ன படங்களுக்கு ஒரு வாரம் 4 ஷோ தர வேண்டும். இதைத் தயாரிப்பாளர் சங்கங்கள் உறுதி செய்ய வேண்டும். இந்தப்படத்தை அழகாக எடுத்துள்ளார்கள். இசையமைப்பாளர் ஒரே பாட்டில் கலக்கிவிட்டார். கிராமிய படங்கள் தான் பெரிய வெற்றியைத் தரும். கடுக்கா மிகச்சிறப்பான வெற்றியைப் பெற அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்றார்.
நாயகன் விஜய் கௌரிஷ் பேசியதாவது..
மேடையில் இருப்பவர்கள் அனைவரும் என் இன்ஸ்பிரேஷன். அவர்கள் எங்கள் படத்தை வாழ்த்த வந்திருப்பது மகிழ்ச்சி. பாடல் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தேவா சாருக்கு நன்றி. இப்பாடலுக்கு வரவேற்பைப் ஏற்படுத்தித் தந்த பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு நன்றி. இசையமைப்பாளர் எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார். படத்தில் எல்லோருமே எங்களுக்கு மிகப்பெரிய ஆதரவாக இருந்துள்ளார்கள். அனைவருக்கும் என் நன்றிகள். டிரெய்லரில் காட்டாத ஒரு விசயத்தைப் படத்தில் வைத்துள்ளோம். கதையில் தான் பிரம்மாண்டத்தை வைத்துள்ளோம். கதை நன்றாக இருந்தால் படம் கண்டிப்பாக ஹிட்டாகும். நாங்கள் நல்ல படம் தந்துள்ளோம் அனைவரும் ஆதரவு தாருங்கள் நன்றி என்றார்.
இயக்குநர் பேரரசு பேசியதாவது…
தனஞ்செயன் ஒரு படத்தை ரிலீஸ் செய்கிறார் என்றால் அந்தப்படத்தில் விசயம் இருக்கும், படம் கண்டிப்பாக ஹிட்டாகும். கடுக்கா என்றால் காய் இல்லை நம்ப வைத்து ஏமாற்றுவது தான் கடுக்கா. படத்தில் இரண்டு ஹீரோ, அதில் யாருக்கு ஹீரோயின் கடுக்கா கொடுக்கிறார் என்பது தான் படம். ஆனால் ஹீரோயின் உண்மையிலேயே கடுக்கா கொடுத்தது தயாரிப்பாளருக்குத் தான். இவர்கள் கொடுத்த வாய்ப்பில் ஹீரோயின் ஆகிவிட்டு எந்த விழாவிற்கும் வரவில்லை. இசையமைப்பாளர் ஒரு பாட்டில் அனைவரையும் கவர்ந்து விட்டார். விஜய் கௌரிஷ் அட்டகத்தி தினேஷை ஞாபகப்படுத்துகிறார். நன்றாக நடிக்கிறார். கடுக்கா ஆடியன்ஸை ஏமாற்றாது. சினிமாவில் நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. சினிமாவில் இருப்பவர்களே சினிமா நன்றாக இருக்க வேண்டுமென்று நினைப்பதில்லை, அவர்கள் படம் மட்டும் ஜெயிக்க வேண்டும் என நினைக்கிறார்கள். யாரும் சினிமாவை காப்பாற்ற நினைப்பதில்லை. கடுக்கா சின்ன டீம் செய்துள்ள நல்ல படம், படம் வெற்றி பெற வாழ்த்துக்கள் நன்றி.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது…
இப்படம் அட்டகத்தி படத்திற்கு டிரிப்யூட் மாதிரி இருந்தது. அதனால் தான் CV குமாரை விழாவிற்கு அழைத்தேன். நான் நிறைய வெளிவராத படங்கள் பார்க்கிறேன்.. நம்மை மதித்து படம் காட்டுகிறார்கள் என்று அவர்களிடம் உரையாடி படத்திற்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன். அப்படி படம் பார்த்தபோதே சில திருத்தங்கள் சொன்னேன். அதைப் புரிந்து கொண்டு அவர்கள் அதையெல்லாம் சரி செய்தார்கள். மிகச்சிறப்பாக 2 மணி நேரத்திற்குள் சிறப்பான படமாக மாற்றிக் காட்டினார்கள். அதனால் இப்படத்தை நான் ரிலீஸ் செய்து தருகிறேன் என்று சொன்னேன். நாயகன் விஜய் கௌரிஷ் ஒவ்வொரு ஊராகப் போய் அங்கு இன்ஸ்டா விளம்பரம் செய்து புரமோட் செய்து வருகிறார். அவரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள். நாளை நமதே படத்திற்கும் நான் உதவி செய்திருந்தேன் 50 லட்சத்தில் எடுத்த அந்த படத்திற்கு மிகச்சிறப்பான ரிவ்யூ தந்தீர்கள். மிகப்பெரிய வெற்றியைத் தந்தீர்கள். அதே போல் இந்தப்படத்திற்கும் ஆதரவு தர வேண்டும். நன்றி.
நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!
நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில், விரைவில் வெளியாகவுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியிடப்பட்டுள்ளது. வெளியான வேகத்தில் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்புப் பெற்று, சமூக வலைத்தளங்களில் இந்த டீசர், இப்போது வைரலாகி வருகிறது. மேலும் டிரெண்டிங்கில் முதலிடத்தைப் பிடித்து, படம் மெகா ஹிட்டாகும் என்கிற எதிர்பார்ப்பை உறுதி செய்துள்ளது.
ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் நிவின் பாலி – நயன்தாரா எனும் நட்சத்திர ஜோடி மீண்டும் இணையும் இந்தப் படத்தை, அறிமுக இயக்குநர்கள் ஜார்ஜ் பிலிப் ராய் ( George Philip Roy)மற்றும் சந்தீப் குமார் எழுதி இயக்கியுள்ளனர். Maverik Movies Pvt. Ltd தயாரிப்பில், நிவின் பாலியின் ஹோம் பேனரான Pauly Jr. Pictures மற்றும் Rowdy Pictures Pvt. Ltd. இணைந்து தயாரிக்கின்றன.
நேற்று வெளியான அசத்தலான டீசர், பள்ளி வாழ்க்கையின் வண்ணமயமான வாழ்க்கையையும், பரபரப்பான உலகையும் சித்தரிக்கிறது. மேலும் மாணவர்களை மையமாகக் கொண்டு கதை நகரும் என்பதை டீசர் வெளிப்படுத்தியுள்ளது. காமெடி, வேடிக்கை, அதிரடி, சஸ்பென்ஸ் ஆகிய அனைத்தையும் கலந்த கமெர்ஷியல் எண்டர்டெய்னர் என டீசரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நிவின் பாலி தனது ரசிகர்களால் பெரிதும் விரும்பப்படும் துறுதுறுப்புடன் குறும்பு மிக்க ஹரி என்ற கதாபாத்திரத்தில் களமிறங்குகிறார். அதேசமயம், நயன்தாரா ஒரு வலிமையான போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இது கதைக்கு பெரும் சுவாரஸ்யத்தை சேர்க்கும் அம்சமாக அமைந்துள்ளது. 2019 ஆம் ஆண்டு வெளியாகிய ப்ளாக்பஸ்டர் “லவ் ஆக்சன் டிராமா” திரைப்படத்திற்குப் பின், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு, நிவின் பாலி – நயன்தாரா ஜோடி மீண்டும் இணைந்துள்ள இந்தப்படம் ரசிகர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
படத்தில் ரெடின் கிங்ஸ்லி, ஆடுகளம் முருகதாஸ், சரத் ரவி, உதய் மகேஷ், வெட்டை முருகன், ஜெயகுமார் ஜனகிராமன், விஜய் சத்யா, மாத்யூ வர்கீஸ், ராஜா ராணி பாண்டியன், தீப்தி, கீரண் கொண்டா, காமருதீன் K உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கின்றனர்.
மேலும், மலையாளத் திரையுலகில் இருந்து அஜு வர்கீஸ் (Aju Varghese), ஷரஃபுதீன் (Sharafudheen), சுரேஷ் கிருஷ்ணா, மல்லிகா சுகுமாரன், லால், ஜகதீஷ், ஜானி ஆன்டனி ஆகியோர் இணைந்துள்ளதால், இந்த ஆண்டு வெளிவரும் மிக அதிக நட்சத்திரங்கள் பங்கேற்ற பிரம்மாண்ட படைப்புகளில் ஒன்றாக இப்படம் திகழ்கிறது.
“லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!
துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. மலையாள சினிமா இதுவரை காணாத புதிய உலகத்தை காட்சிப்படுத்தியிருக்கும், இந்த திரைப்படத்தினை எதிர்பார்த்து ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் பெரும் ஆவலோடு காத்திருக்கின்றனர். இப்படத்தில் சந்தூ சலீம் குமார், அருண் குரியன், சாந்தி பாலச்சந்திரன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பல பகுதிகளாக உருவாகும் லோகா சூப்பர் ஹீரோ யுனிவர்ஸ் படங்களின் முதல் பாகம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.
- உலக செய்திகள்
- |
- சினிமா