சற்று முன்

கலையரசனுக்கும் வாழை படத்திற்குபிறகு மிக முக்கியமான வெற்றிப்படமாக தண்டகாரண்யம் இருக்கும்   |    இயக்குநர்கள், ஹீரோவாக மாறுவது தான் இப்பொழுது ட்ரெண்ட் - இயக்குநர் பேரரசு   |    இந்த ஆண்டில் வெளியான சஸ்பென்ஸ் திரில்லர் படங்களில் ’இந்திரா’ மிக முக்கியமான இடம் பிடிக்கும்!   |    'ஆக்ஷன் கிங்' அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் முதன்மை வேடங்களில் நடிக்கும் 'ஏஜிஎஸ் 28'   |    பெங்களூரு சர்வதேச குறும்பட திருவிழாவுடன் கைகோர்த்துள்ள புரொடியூசர் பஜார்   |    அசோக் செல்வன், நிமிஷா சஜயன் நடிக்கும் புதிய படம் பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!   |    நிறைய வலிகள் இருக்கின்றன. என்னால் இனிமேல் இதுபோல் உழைக்க இயலுமா - நடிகர் ஏ. எல். உதயா   |    'கடுக்கா' படத்தின் வெற்றிக்கு நடிகர் சௌந்தர்ராஜா சொன்ன புது யோசனை!   |    நிவின் பாலி & நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘டியர் ஸ்டூடண்ட்ஸ்’ டீசர் இணையத்தில் வைரல்!   |    “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!   |    கௌதம் ராம் கார்த்திக் – அபர்ஷக்தி குரானா இணைந்து நடிக்கும் பிரம்மாண்ட படம்!   |    ஒரே நேரத்தில் இரண்டு தமிழ் படங்களை தயாரிக்கும் கனடாவில் வெற்றிக் கொடி நாட்டிய தமிழர்!   |    PVR INOX புகழ்பெற்ற லோகோவில் (logo) 'காந்தாரா' திரைப்படம் அக்டோபர் 2 அன்று வெளியாகும்!   |    16 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மலையாள சினிமாவில் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜ்!   |    சாதனை படைத்த 'மாமன்' திரைப்படம்!   |    சாதி வன்முறை & பிரிவினைவாத எண்ணங்கள் பெண்களிடம் மிக அதிகம் இருக்கின்றது - இயக்குனர் தமயந்தி   |    நாக சைதன்யா வெளியிட்ட 'புல்லட்' பட தெலுங்கு டீசர்!   |    பெண் சக்தியை கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘பர்தா’ படத்தின் டிரைய்லர் வெளியாகியுள்ளது!   |    'காந்தா' படத்தில் இருந்து 'பனிமலரே...' முதல் பாடல் வெளியாகியுள்ளது!   |    ‘குற்றம் புதிது’ பட சுவாரஸ்யம் பகிர்ந்த நடிகர் தருண் விஜய்!   |   

சினிமா செய்திகள்

ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து டிரண்டிங்கில் கலக்கும் சுந்தர் சி - அரண்மனை 3 பாடல்!
Updated on : 01 September 2021

தமிழில்  பேய்படங்களை குழந்தைகளும் கொண்டாடி பார்க்கும் வண்ணம் மாற்றிய படம் தான்  #அரண்மனை திரைப்படம். நகைச்சுவை படங்களுக்கு,  பெயர் பெற்றவரான இயக்குநர் சுந்தர் சி. இயக்கத்தில்  #அரண்மனை முதல் இரண்டு பாகங்களும் பிரமாண்ட வெற்றி  பெற்ற நிலையில், தற்போது ஆர்யா நடிப்பில் அரண்மனை 3 ரிலிஸுக்கு தயாராகியுள்ளது.



 







பர்ஸ்ட் லுக் ரிலீசுக்கு பிறகு நேற்று பாடல் ஒன்று வெளியானது . ஆர்யா-ராஷிகண்ணா பங்கு பெற்ற இந்த பாடல் நேற்று இந்தியா டிரட்ண்டிங்கில் பரபரப்பானது.

இயக்குநர் சுந்தர்.சி இன் இந்த பிரமாண்ட பாடல் காட்சி u tube 1M ஒன் மில்லியன் கிராஸ் வெற்றி கண்டது.

 



 





இப்படத்தை இணைய ஓடிடி தளத்தில் வாங்குவதில் போட்டிகள் இருந்தாலும்.. தியேட்டரில் தான் வெளியிட வேண்டும் என்று முடிவெடுத்திருந்தார் சுந்தர் சி. இந்நிலையில் திரைத்துறையில் படத்தை பார்த்த சில முக்கியஸ்தர்கள் இப்படம் குடும்பத்தோடு திரையங்கில் கொண்டாட்டமாக பார்க்க வேண்டிய படம், இதனை திரைக்கு கோண்டு வாருங்கள் என்றனர். இதனை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை திரையரங்கில் வெளியிடும் வேலைகளை செய்து வருகிறார் இயக்குநர் சுந்தர் சி.



 



 





 





அரண்மனை 3 படம் முதல் இரண்டு பாகங்களை விட இரு மடங்கு பட்ஜெட்டில் மிகப்பிரமாண்டமான வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு பாகங்களை குழந்தைகள் கொண்டாடிய நிலையில், இப்படமும் குழந்தைகளுக்கு பிடிக்கும் வகையில் மிகச்சிறந்த பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது

ஆர்யா, ராஷிக்கண்ணா, சுந்தர் சி முதன்மை பாத்திரங்களில் நடிக்க, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத்,  மனோபாலா, வின்சென்ட் அசோகன், மதுசூதன ராவ், வேலராமமூர்த்தி, நளினி, விச்சு விஸ்வநாத், கோலப்பள்ளி லீலா ஆகியோர் முக்கிய கதா பாத்திரங்களில் நடித்துள்ளனர். திரை கொள்ளாத அளவில் பெரும் நட்சத்திர  பட்டாளம் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.



 







முதல் முறையாக இயக்குநர் சுந்தர் சி- யும், இந்தியாவின் முக்கிய சண்டைப்பயிற்சி இயக்குநர் பீட்டர் ஹெய்ன்-ம் இப்படத்தில் இணைந்து பணியாற்றியுள்ளார். இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி மட்டுமே 1.5 கோடி ரூபாய் செலவில், 300 தொழிலாளர்கள் உருவாக்கிய பிரமாண்ட செட்டில், 200 கலைஞர்கள் பங்கேற்க, 16 நாட்கள் படமாக்கப்பட்டது. படத்தின் அதி முக்கியமான, இந்த க்ளைமாக்ஸ் காட்சியின் CG பணிகள் மட்டுமே, 6 மாதங்கள் நடைபெற்றது. படத்தின் அனைத்து பணிகளும் சமீபத்தில் முடிந்த நிலையில் படத்தின் வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா