சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

இயக்குநர் ஹரி படக்குழுவினரால், ஆனந்த கண்ணீரில் மிதந்த #KGF புகழ் கருடா ராம் !
Updated on : 06 September 2021

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில், மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படம் "AV33". இப்படத்தில் வில்லனாக KGF படப்புகழ் கருடா ராம் நடிக்கிறார். அவரது காட்சிகள் அனைத்தும்  முடிவடைந்தது.

 



 



இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த  KGF  படத்தில் மிரட்டும் வில்லனாக நடித்தவர் கருடா ராம். அப்படத்தின் வெற்றிக்கு பிறகு பல மொழிகளிலும் முன்னணி நாயகர்கள் நடிக்கும் படங்களில் வில்லனாக நடித்து வருகிறார்.  இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய் கூட்டணியில் உருவாகும் படத்தில் வில்லனாக நடித்து வந்தார். கடந்த மாதம் ஆரம்பிக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடியில் துவங்கி  பழநி முதலான பகுதிகளில் நடைபெற்றது. தற்போது  இப்படத்தின்  இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. வில்லனாக நடிக்கும் நடிகர் KGF புகழ் கருடா ராம் உடைய காட்சிகள் இன்றுடன் முடிக்கப்பட்டது.அவரை வழியனுப்பும் பொருட்டு படக்குழு மிகப்பெரிய கொண்டாட்டத்துடன்,  அவருக்கு  மாலை மற்றும் பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார்கள்.



 



 



இயக்குநர் ஹரி மற்றும் அருண் விஜய்  மற்றும் இணை தயாரிப்பாளர் G.அருண்குமார் ஆகியோர்  அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இச்செயல்களால் அவர் ஆனந்த கண்ணீரில் மிதந்துள்ளார். KGF  படத்திற்கு பிறகு நிறைய படங்களில் நடித்து விட்டேன் ஆனால் இது போல் எந்த ஒரு படக்குழுவும் என்னை கொண்டாடியதில்லை. இப்படம் என் மனதுக்கு மிகவும் நெருக்கமான படம். இயக்குநர் ஹரி மற்றும் படக்குழுவினரை என் வாழ்நாள் முழுவதும் மறக்க மாட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.  







அருண் விஜய்,நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக  ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார். மேலும் இப்படத்தில்  சமுத்திரகனி, யோகிபாபு, ராதிகா சரத்குமார், KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ்வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும்  முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.

 



 



இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா