சற்று முன்

விஜய் சேதுபதி களமிறங்கும் 'பிக்பாஸ் சீசன் 8'   |    துருவ் விக்ரமின் பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடிய ரசிகர்கள்   |    'பிரதர்' ஆணுக்கும் பெண்ணுக்கும் இருக்கும் ஈகோவை மையமாக கொண்ட கதை - ஜெயம் ரவி   |    சமுத்திரக்கனி நடிக்கும் திரு.மாணிக்கம் OTT மற்றும் SATELLITE ஒப்பந்தம்   |    ‘டாக்ஸிக் காதல்’ பாடலை வெளியிட்ட பிக்பாஸ்’ புகழ் அர்ச்சனா   |    ஏஆர்ஆர் திரைப்பட நகரம்   |    நிஜ வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவான ஒரு சைக்காலஜிக்கல் த்ரில்லர் ‘சாரி’   |    சரத்குமார், சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் புதிய திரைப்படம்   |    'சிவகாசி', 'திருப்பாச்சி' ஆகிய படங்களை இந்தியில் ரீமேக் செய்யலாமா ? - பாலிவுட் நடிகர் சல்மான்கான்   |    நானி நடிப்பில் '#நானிஓடேலா 2' படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது   |    பான் இந்திய படைப்பாக உருவாகும், புதிய படமான #Sharwa38 இல் இணைந்துள்ள சார்மிங் ஸ்டார் ஷர்வா!   |    தலைவெட்டியான் பாளையத்தின் டார்லிங் ஆக அபிஷேக்குமாருக்கு ஜி.பி. முத்து தந்த ஐந்து ஐடியா!   |    4 வாரங்களைக் கடந்து, அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கும் 'வாழை'   |    ஏ.ஆர்.ரெஹைனாவை திரைத்துறையின் மதர் தெரசா என்று சொல்லலாம் - நடிகை கோமல் சர்மா   |    திகில் நிறைந்த 'டிமான்ட்டி காலனி 2' ZEE5 இல் உலகம் முழுக்க டிஜிட்டல் பிரீமியர் செய்யப்படவுள்ளது!   |    நாயகனுக்கு அடுத்த முக்கிய பாத்திரத்தில் இயக்குநர் கௌதம் மேனன் நடித்துள்ள 'ஹிட்லர்'   |    'மூக்குத்தி அம்மன் 2' வில் இணைந்த இயக்குநர் சுந்தர் சி   |    லெஜெண்ட் சரவணன் ஜோடியாக பாயல் ராஜ்புத் நடிக்கும் புதிய திரைப்படம்!   |    'மெய்யழகன்' படத்தைப் பார்ப்பது ஒரு நாவலை வாசிப்பதற்கு சமம் - சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன்   |    நந்தனுக்கு முன் - நந்தனுக்கு பின் என சசி கொண்டாடப்படுவான் - சமுத்திரகனி   |   

சினிமா செய்திகள்

முட்டாள்தனமாக நடந்துகொள்ளுபவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட பேய் படம் 'இடியட்'
Updated on : 13 September 2021

ஸ்கிரீன் சீன் மீடியா தயாரிப்பில், ராம்பாலா இயக்கத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி நடித்துள்ள ஜனரஞ்சகமான பேய் கதையாக திரைக்கு வரவிருக்கும் 'இடியட்' 



 



தில்லுக்கு துட்டு 1 மற்றும் 2 ஆகிய வெற்றி படங்களை இயக்கிய ராம்பாலாவின் அடுத்த படைப்பு 'இடியட்' தற்போது வெளியீட்டுக்கு தயார் நிலையில் உள்ளது.



 



ஸ்க்ரீன் சீன் மீடியா என்டர்டைன்மெண்ட் தயாரிக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 



 



இவர்களை தவிர ஆனந்தராஜ், ஊர்வசி, அக்ஷரா கவுடா, ரவி மரியா மற்றும் சிங்கமுத்து உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.



 





 



"எல்லோரும் எப்போதாவது ஒரு முறையாவது முட்டாள்தனமாக நடந்துகொள்ளுவது இயல்பு. அப்படி நடந்து கொள்பவர்களை மையமாக வைத்து எடுக்கப்பட்டது தான் 'இடியட்'. 



 



மற்ற பேய் படங்களை போல் இல்லாமல் ஜனரஞ்சகமாக குழந்தைகளோடு பார்க்க கூடிய பேய் படமாக 'இடியட்' இருக்கும்," என்று இயக்குநர் ராம்பாலா கூறுகிறார். 



 



படத்தின் படப்பிடிப்பு தென்காசி, பொள்ளாச்சி மற்றும் பாண்டிச்சேரி ஆகிய பகுதிகளில் நடைபெற்றுள்ளது. 



 



ராஜா பாட்டாசார்ஜீ படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். விக்ரம் செல்வா இசையமைத்துள்ள இந்த திரைப்படத்தின் படத்தொகுப்புக்கு மாதவன் பொறுப்பேற்றுள்ளார்.



 



அனைவரையும் கவரும் வகையில் உருவாகியுள்ள 'இடியட்' கவலைகளை மறந்து சிரிக்க வைக்கும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா